மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 18 டிசம்பர், 2018

காதலும் லக்கினமும் lagna and love

காதலும் லக்கினமும் 

லக்ன சுக்ரன் காதலுடன் காமம்.
லக்ன குரு அடக்கிவைக்கப்பட்ட காமம்.
லக்ன ராகு கண் பட்டாலே காமம்.
லக்ன கேது காதூரத்தில் காமம்.
லக்ன செவ்வாய் கம்பங்கொல்லையில் காட்டெருமை காமம்.
லக்ன புதன் காதலே ஒரு காமம்.
லக்ன சனி சகதியில் கால் இடறி விழ்ந்த காமம்.
லக்ன சந்திரன் ஆவேசம் பேசினாலும் ஆறிப்போன காமம்.
லக்ன சூரியன் காலம் பார்த்து கால்வைத்தாலும் ரன்அவுட்.
💞
ராகு குழுவின் காதலை மட்டும் மேலும் அறிய
இதை கிளிக் செய்யவும்..

👇🏼
https://youtu.be/SjO76r3HqNo

சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

WhatsApp No. 9443540743


Youtube: Astro Bala Velloreசன்னியாசி ஜாதக அமைப்பு Samiyaar Horoscope

சன்னியாசி ஜாதக அமைப்பு

இல்லற சந்நியாசியின் 
ஜாதகத்தில் சந்நியாசி யோகம் இருந்து குடும்ப ஸ்தானம் பலப்பட்டு இருக்கும். குடும்பதிபதியோ அல்லது குடும்ப ஸ்தானத்தையோ குரு பார்வை பட்டு இருக்கும்.

சன்னியாசி ஜாதக அமைப்பு..

சனி & கேது சம்பந்தம் 
 சனி 7இல் & 8-இல் ராகு 
 12க்கு செவ்வாய் & சனி பார்வை.
ஒரு ராசியில் நான்கு கிரகங்களுக்கு மேல் அமர்ந்து அங்கு ராகுகேது சேராமலும், கிரகங்கள் அஸ்தமன தோஷம் பெறாமலும் இருப்பின் சந்நியாசியே.

இந்த மேலே உள்ள அமைப்பு கேந்திர கோணங்களில் அமைந்து விட்டால் அவர் தான் பேமஸ் சாமியார்.

மேலும் பல தகவல்கள் அறிய..   https://youtu.be/y8sHZGEG03s


சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.


WhatsApp No. 9443540743


Youtube: Astro Bala Vellore

திருக் பலம் Drik Palam

திருக் பலம்.. அதாவது திருஷ்டி... பார்வை பலம்...

உள்வட்ட கிரகங்களான சூரி, புத, சுக், சந் போன்றவர்களுக்கு ஒரே பார்வையான சப்தம பார்வை மட்டும்.
வெளிவட்ட கிரகங்களுக்கு மட்டுமே கூடுதலாக ஷ்பெஷல் பார்வைகள் உள்ளது.
அதனால் தான் உள்வட்ட கிரக பார்வைகளின் பலத்ததை விட வெளிவட்ட கிரகங்களான செவ், குரு, சனி போன்றவற்றின் பார்வைகளுக்கு பலம் அதிகம்.
அதிலும், சப்தம பார்வைகளை விட ஸ்பெஷல் பார்வைகளுக்கு கூடுதல் பலம் உண்டு.
சனியின் பார்வை அதிக பலம் பொருந்தி இருந்தாலும் சனி பார்த்த ஒரு ராசியை குருவும் தனது ஸ்பெஷல் பார்வையால் பார்த்து விட்டால் அந்த பாவம் எப்படியும் வளர்ச்சி பெற்று விடும்.
சனி & செவ் இருவரும் ஒரு பாவத்தை நோட்டமிட்டால் அந்த பாவம், குருவும் பார்க்காமல் போனால் அந்த பாவகாரகத்துவங்கள் அந்த ஜாதகருக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.
ராகு கேதுவிற்கு 3-7-11 பார்வை உண்டு என பல கருத்து நிலவினாலும், இவர்களுக்கு ஸ்தானபலம் மட்டுமே உள்ளது என்றும் பார்வைபலம் இல்லை என்பதே எனது கருத்து.
சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

WhatsApp No. 9443540743


Youtube: Astro Bala Vellore
கேந்திரங்கள் kenthirangal

கேந்திரங்கள் 

பணம்-மனைவி-சுகம் 
தொழில்-களத்திரம்-செளகரியம்
10-7-4
ஜாதகபடி அறிவது எப்படி..?
கேந்திரங்கள்.. Square

உத்தியோகம் புருஷ லட்சணம்.
மனைவி உள்ள வரை சாப்பாடு துணி  பஞ்சமில்லை

ஆக, பணமும் தொழிலும் இருப்பின் களத்திர சுகமான கணவன் மனைவி உறவு தானாக அமையும்.

சுகம் தரும் மனைவி அமைந்து விட்டால் நேரத்திற்கு செளகரியம் கியாரன்டி.

இம்மூன்றும் அமைந்துவிட்டால் லக்னம் அதாவது ஜாதகர் வாழ்க்கை தொடர்ந்து ஓடும்.

பத்தாவது கேந்திரமான ஜீவன ஸ்தானம் பலம் பெற்றால் ஏழாமிடமான களத்திர பாவம் பலம் பெறும்.
ஏழாமிடம் பலம் பெற்றால் வீடு சுகம் வாகன பாவமான நாலமிடம் தானாக பலமாகிவிடும்.

இந்த 10-7-4 மூன்று கேந்திரங்களும் பலம் பெற்று விட்டால் ஜாதகர் குஷி தான்.

மேலும் விபரமறிய... இதை கிளிக் செய்யவும்..
https://youtu.be/ZKiooccEytwசித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

WhatsApp No. 9443540743
Youtube : Astro Bala Vellore 
 https://www.youtube.com/channel/UCITKVO5Tc99EMCw8KCIiqjw
புதன், 18 அக்டோபர், 2017

ராசிப்படி பட்டாசு வெடிப்பது Rasi - crackers at Diwali

எந்த ராசி காரர்கள் எது மாதிரி பட்டாசு வாங்கி வெடித்தால் மகிழ்ச்சி.

உங்கள் ராசிப்படி தீபாவளி கொண்டாட  வேண்டிய பட்டாஸு.. 💥💥⚡🎆⚡💥
👇🏼
👇🏼
  மேன்மை பொருந்திய மேஷ 🐐 ராசிகாரர்களே...  நெருப்பும் 💥வீரமும் 👍🏼 கொண்ட தாங்கள் ஆட்டம் பாம் atom bomb 💣வெடித்து அடுத்தவர்கள் மீது படாமல் தீபாவளி 🎇கொண்டாடுங்கள்...💥  ~ Vellore Bala 9443540743


  பூமியின் பொருமையுள்ள  🌍 ரிஷபராசி அன்பர்களே...  🐂 லக்ஷ்மி கடாட்சம் உள்ள நீங்கள் சிவகாசி லட்சுமி வெடிவெடித்து 🔋  முதுகில் நெருப்போ மற்றவர்களோ முட்டி விடாமல்  பார்த்து தீபாவளி 🎇கொண்டாடுங்கள்..💃🏻   


  மிதுனராசி நண்பர்களே.. , நீங்கள் உங்களுடன் ஒரு துணையை வைத்து கொண்டு இருவராக 👫 சேர்ந்து பச்சை கலரு  🔋 பட்டாசை, காற்று பலமாக வீசாத போது வெடித்து 🔫 தீபாவளி 🎇கொண்டாடுங்கள்  💥 ~  


  கடக ராசிகாரர்களே, 🦀 நண்டு வெடியோ சங்கு  🌞 சக்கர வெடியோ, பக்கத்தில் பாதுகாப்புக்கு பக்கெட்டில் தண்ணீர் வைத்து கொண்டு வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள். 💫💫💥    


  சிம்மராசி சிங்கங்களே.. மிளகாய் பட்டாசை மிஞ்சும், சிவகாசி சிங்கம் மார்க் சிங்கவெடி வெடித்து, நெருப்பு குச்சியை உடலில் படாமல் உஷாராக பிடித்து, தீபாவளி 🎇 கொண்டாடுங்கள் 🦁💥  ~ Vellore Bala 9443540743


  அமைதியான முறையில் அத்தனையும் உள்ளுக்குள் விரும்பும் கன்னிராசி 🙎🏻  காரர்களே, உங்களுக்கு ஏற்றது கேப்பு  என்றாலும், நீங்கள் ஊசி வெடி 💉💉  வெடித்து, பயந்து கீழே வீழ்ந்து விடாமல்  தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்.. 🎉


  துறுதுறுப்பாக இருக்கும் 🔺 துலா ராசியில் பிறந்தவர்களே... காற்றிலே பறந்து கலர்களை 💙💚💜💛💕 கானவிரும்பும் உங்களுக்கு ஏற்ற கம்பி கலர் மத்தாப்பு 🎆 வெடித்துதுணிமணிகளில் 👚👗 படாமல் பார்த்து  தீபாவளி 🎇  கொண்டாடுங்கள்.. 🌈🎆   


  விருப்பமுடன்  💚 பேசும் விருட்சிகராசி 🦂அன்பர்களே, உங்கள் விறுவிறுப்புக்கு ஏற்ற 🐍 பாம்பு பட்டாஸூ🌴ஓலைப் பட்டாஸூகளை  பக்கத்து குடிசைகளின் 🏡 மீது படாமல்  வெடித்து தீபாவளி 🎇  கொண்டாடுங்கள். 🎀🐍💥~ Vellore Bala 9443540743


  தடாலடி தனுசு 🏹  ராசிகாரர்களேஸர் ஸர்னு உங்கள் உத்வேகத்துக்கு ஏற்ற ராக்கெட் 🚀 வெடியை கை சுட்டுக்காமல் உஷாராக வானத்தில் வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள் 🚀💥   


  புது மாப்பிள்ளை போல மெர்சலாகும்  மகர ராசி 🐊 அன்பர்களே, மனசுக்குள்  சர சரமாக  💥  வெடிக்க வேண்டும் என நினைத்து இருப்பதால், நீங்கள் 10,000 ten thousand  டென் தவுஸன்ட் வாலாவை கால்களில் பட்டுவிடாமல் வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்..⚡⚡💥

  
  குதுகலமுள்ள 😋 கும்ப 🏮ராசிகாரர்களேஉங்களுக்கென்றே செய்த கும்பகோண வெடி...  பானைவெடி... தொட்டி... 🔋 பூத்தொட்டி... பூஸ்வானம் 🗼வெடித்து உங்கள் மேலே விழாமல் பார்த்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்... 💥💥


  மத்தாப்பூ பார்வையுள்ள 🐠 🐬 மீனராசி நண்பர்களே, உங்கள் வேகத்திற்கு ஏற்ற வெடி   சீரியல் வானவெடியை 💥வெடித்து கண்களில் 👀 படாமல் இருக்க கண்ணாடி 😎 அணிந்து  தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்.. 🎏🌟💥~ Vellore Bala 9443540743. அகத்தில் ஞானொளியும், புறத்தில்
தீப ஒளியும் பெருகிட 
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீபாவளி 🎆 வாழ்த்துக்கள்..

அன்புடன்,


Vellore Bala Jothidar 9443540743

திங்கள், 2 அக்டோபர், 2017

ஜாதக வெற்றி Success time

ஜாதக வெற்றிஒரு ஜாதகனின் வெற்றிஅவனது மூன்றாம் பாவத்தின் மூலம் அறியலாம் என்பது யாவருக்கும் தெரியும். இதே போல ஒவ்வொரு பாவத்தின் வெற்றி அதனுடைய மூன்றாம் பாவத்தால் அறியப்படும். உதாரணமாக இரண்டாம் வீட்டின் (தன ஸ்தானம்) வெற்றி காண நான்காம் பாவத்தை பார்த்தால் புரியும். நான்காம் பாவப்படி லவ்கீக சுகம் கூடினால் கையில் தனம் உண்டு என எளிதாக அறியலாம். அதே போல ஒவ்வொரு பாவத்தின் வெற்றியை காணலாம்.

ஒரு பாவத்தின் தோல்வியை காண வேண்டுமானால் அந்தந்த பாவத்தின் பனிரெண்டாம் பாவத்தால் அறியலாம். மேலே கூறிய உதாரணப்படி பார்த்தால் இரண்டாம் பாவத்தின் தோல்வி லக்ன பாவத்தையே சார்கிறது. (உழைப்பும், உறுதியும் இல்லா விட்டால் லக்னம் பாதிக்கபட்டால் )

உப ஜெய ஸ்தானங்களான 3-6-10-11 இடங்கள் பலமுள்ளவன் எளிதில் வெற்றியை அடைகிறான். எப்படி என்றால் மூன்றாமிடம் வெற்றியை தந்தாலும், அதற்கு உறுதுணையாக உள்ள ஆறாமிடமூலம் நோய், நோடி, கடன் வம்பு வழக்கு இல்லாதவனாக இருப்பதும்,

பத்தாமிடம் மூலம் தொடர்ந்து வருமானம் வந்து கொண்டு இருப்பதும்,
பதினோறாமிடம் மூலம் சம்பாதிக்கும் சம்பாதனை தனது உழைப்பை விட அதிக ஊதியம் பெறும்போது லாபத்தை பெற்றிருப்பதும், 
ஒருவனின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது.

வெற்றியை முத்தமிடும் நேரம்:

மூன்றாமாதி தசா புக்தி அந்தர காலங்களில்.

கோட்சார செவ்வாய் சுபர்களின் மேல் வலம் வருவதும் மற்றும் மூன்றாமாதி சுபராகி கோட்சாரத்தில் செவ்வாய் மீது வருவதும் வெற்றி தரும் நேரங்களாகும்.

லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி சம்பந்தம் பெறுபவர்கள் வெளியூரில் வெற்றி.

ஒரு காரியத்தில் வெற்றி அடைய, அந்த காரிய மூகூர்த்த லக்னம் மேஷ மானாலும் அல்லது அம்சத்தில் மேஷ அம்சா லக்னமானாலும் வெற்றியை பெற்று விடலாம்.

கோட்சாரத்தில் செவ்வாய் & சனி சேர்க்கை/பரஸ்பர பார்வை இல்லாத நேரம் பார்த்து செய்யப்படும் காரியம் வெற்றியை தந்துவிடும்.

லக்னம் சரத்திலும் சந்திரனை ஸ்திரத்திலும் வைத்து செய்யப்படும் வேலை வெற்றியுடன் முடியும்.

துரித வெற்றியை பெற மூன்றாமாதி ஹோரை கைகொடுக்கும்.

பலமுறை முயன்று தோல்வியுற்ற காரியத்தை, எமகண்டத்தில் மறுபடியும் முயன்றால் வெற்றி உங்கள் பக்கம். திருமணமான தம்பதிகள் ஜாதகத்தில் ஐந்தாமிடம் பலம் இருந்தும் குழந்தை தாமதிக்கும் தம்பதிகள் இந்த உபாயத்தை அறிந்து குழந்தைச் செல்வத்தை பெறலாம்.

பெரிய மறைவு ஸ்தானங்களான 6-8 இல் நான்கு கிரகங்களுக்கு மேல் இருப்பவர்களை வெற்றி தன் பக்கத்தில் வைத்து கொள்வதில்லை. இவர்களும் வெற்றி பெறவேண்டுமானால் அவர்கள் அவர்களின் குருவை ஆலோசித்து செய்தால் வெற்றி.

கோச்சாரத்தில் தினச்சந்திரன் பாவகத்திரியில் கட்டுண்டால் வெற்றியும் கழன்றுவிடும்.

தன ஜாதகத்தில் வெற்றி வாய்ப்பு குறைவு என்று நீங்களே முடிவு செய்துவிட்டால், உங்கள் ரத்த சம்பந்தத்தில் உள்ள உங்கள் மகன், மகள், தந்தை, தாய், சகோதரர்கள் ஜாதகப்படி வெற்றி ஜோராக இருப்பின், அவர்களை நீங்கள் எதிலும் இணைத்துக்கொண்டு செயல் பட்டால் வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்.

வெற்றி நமதே.
~ Vellore Bala Jothidar.  M. BALASUBRAMANIAN - 9443540743
(வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் & வேலூர் ஜோதிடம் வாட்ஸ்அப் கிளப் மூலம் 1-10-2017  சென்னை, மடிபக்கம், கார்திகேயாபுரம், கூட்டுறவு கல்யாண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் நிகழ்த்திய ஜாதக வெற்றி உரையின் சுருக்கம்.)