மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 24 நவம்பர், 2012

சுய முன்னேற்ற ராசி பலன்கள்

 

சுய முன்னேற்ற  ராசி பலன்கள்

--- நீல நிலா செண்பகராஜன்,விருதுநகர்.


மேஷம்:
தைரியமான மேஷ ராசிகாரர்களே . . ! ஆடு போல நல்ல விஷயங்களை அசை போடுங்கள். ராசியான நிறம் பசுமை.


ரிஷபம்: சத்தியமான ரிஷப ராசிகாரர்களே ..., மாடு போன்று நன்றாக உழையுங்கள். ராசியான நிறம் - அமைதியான பால் வெண்மை.

மிதுனம்: இனிமையான மிதுன ராசி காரர்களே.. சிவனும் சக்தியும் போன்று இரண்டற கலந்து சிவசக்தியாய் மாறுங்கள். ராசியான நிறம் மங்களகரமான மஞ்சள்.


கடகம்: சாமார்த்தியம் மிக்க கடக ராசிகாரர்களே .. நண்டு தனத்தை விட்டொழிந்து சமர்த்தாய் நடந்து கொள்ளுங்கள். ராசியான நிறம் பழுப்பு கலந்த வெண்மை.சிம்மம்: கம்பீரம் நிறைந்த சிம்ம ராசிகாரர்களே . . ! சிங்கம் போல எப்போதும் வீர கர்ஜணை செய்யுங்கள். ராசியான நிறம் அப்பழுக்கு அற்ற பழுப்பு.
கன்னி: தர்மமிக்க கன்னி ராசிகாரர்களே . . ! கன்னிப் பெண் போன்று மனதை அழகுற வைத்திருங்கள். ராசியான நிறம் ஆபத்தான சிகப்பு.
  
துலாம்: பொறுமை மிக்க துலாம் ராசிகாரர்களே . . ! மனிதர்களை எடை போட்டு பழகுங்கள். ராசியான நிறம் இரும்பு நிறம்.விருச்சிகம்: புத்திசாலியான விருச்சிக ராசிகாரர்களே . . ! தேள் போன்று தீய விஷயங்களை கொட்டுங்கள். ராசியான நிறம் துக்க கருப்பு.தனுசு: குண மிக்க தனுசு ராசிகாரர்களே . . ! உங்கள் லட்சியப் பாதையில் நற்குணம் என்னும் கால்கள் செல்லட்டும். ராசியான நிறம் கலக்கல் கருப்பு..


மகரம்: புத்திசாலியான மகர ராசிகாரர்களே . . ! உங்கள் புத்தி கூர்மையால் மகரந்தமாய் மாறுங்கள். ராசியான நிறம் எல்லா நிறங்களும்.கும்பம்: சுகமான கும்ப ராசிகாரர்களே . . ! கும்ப மரியாதையை பெறும் அளவிற்காவது நல்ல மனிதராக வளருங்கள். ராசியான நிறம் வெண்கல நிறம்.


மீனம்: விசுவாசம் மிக்க மீனா ராசிகாரர்களே . . ! மீன் போன்று இன்பத்திலே நீந்துங்கள்.ராசியான நிறம் கடல் நீலம்.

 
 
 
மேற்கூறிய இந்த ராசி பலன்களை பின்பற்றினால் விரக்தி, அதிருப்தி, போன்ற தோஷங்கள் கழிந்து, வாழ்க்கைக்கு தேவையான "சந்தோஷம்" கிடைக்கும். தினமும் மூன்று முறை கிழ்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்.. . !

ஓம் ஓம் நமஹ...
ஓம் வெற்றி..! வெற்றி...! வெற்றி...! சுவஹா....!

ஆக்கம் :- 
நீல நிலா செண்பகராஜன், கிடங்கு தெரு, விருதுநகர்.

 
 
விருதுநகர் திரு நீல நீலா செண்பகராஜன் அவர்களிடம் இருந்து ஒரு சோதிடத்துடன் இணைந்த நகைசுவை யுடன் கலந்த, அதே நேரத்தில் மக்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நமக்கு வந்துள்ள துணுக்கு. இதை வாசகர்களுக்கு சமர்பிக்கிறேன். இதை மக்கள் முழு ஜோதிட கருத்துக்கள் அடங்கியது என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த குறிப்புகள் மூலம், அவர் கொண்டுள்ள மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொள்ளவது நல்லது. --VARA, VELLORE.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக