மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

தித்திக்கும் திருமண வாழ்வு - SWEET MARRIED LIFE

SWEET MARRIED LIFE


தித்திக்கும் திருமண வாழ்வுதித்திக்கும் திருமண வாழ்வு

                            திருமணம் என்கின்ற திருப்பு முனையில் நிற்கும் ஒவ்வொரு இளைஞனும் இளைஞ்சியும் தனக்கு வரும் திருமண துணையை பற்றி கனவு காண்கிண்றனர். நல்ல அழகுடன் தங்களை புரிந்து நடக்கும் பெண் தேவை என்று எல்லோரும் எதிர்பார்கிறார்கள் ஆனால் இயற்கையில் ஒரு சிலருக்கு மட்டுமே அவரவர் ஜென்மஜாதக அடிப்படையில் எதிர்பார்த்த படியே   கடவுள் தருகிறார். பலர் பேர்கள் திருமண வாழ்வில் தித்திப்பு இல்லை, நிறைய பேர்கள் வாழ்வில் தித்திப்புக்கு பதில் எட்டிக் கசப்பே மிஞ்சுகிறது.
                 பொதுவாக பெண்ணோ ஆணோ தன் ராசிக்கு 5 அல்லது 9 ஆவது ராசியில் பிறப்பவரை மணப்பது உடல் பொருந்தம் இருக்கோ இல்லையோ மனம் பொருத்தம் கண்டிப்பாக இருக்கும்.  இவர்கள் மானசீகமாக மனதுக்குள் ஒருவரை ஒருவர் காதலித்து கொண்டே வாழ்வார்கள். இந்த இருவரின் எண்ண அலைகள் ஒரே பாதையில் செல்வதற்கு காரணம் அவரவர் ஜென்ம சந்திரன் திரிகோண ராசிகளாக வருவதே காரணம்.
            திருமண தாம்பத்திய  வாழ்வில் கணவனை மனைவி விட்டுக் கொடுக்காமலும், மனைவியை கணவன் விட்டுக் கொடுக்காமலும், எங்கு சென்றாலும் இணை பிரியாமலும் கைக்கோர்த்தபடி செல்வதருக்குரிய ஜாதக அமைப்பு என்னவென்றால் அவரவர் லக்னாதிபதி   தத்தம் ஏழாம் அதிபதியுடன் இணைந்து இருப்பதே காரணம். இந்த 1 & 7 அதிபதிகள் இணைப்பை சுபர்கள் பார்த்தால் கேட்கவே வேண்டாம், இவர்கள் வாழும் பகுதியில் இவர்கள் ஒரு IDEAL COUPLE என்று பெயர் எடுப்பார்கள்.
           ஏழாம் அதிபதியோ அல்லது சுகரனோ ஆட்சி பெற்று இருப்பின் குடும்பத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மனைவி வந்தவுடன் பெற்று கொள்வாள்.
           ஏழாம் அதிபதி சுப கிரகமாக இருந்து, சுபர் பார்வை பெற்று லக்னத்திற்கு சுக ஸ்தானமான நாலாம் வீட்டில் நின்றால் கணவனுடைய சுகங்களுக்கு எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாமல் பார்த்து கொள்வாள். நல்ல சுவையான உணவுகளை உடம்பு ஏற்றுகொள்வதற்கு ஏற்ற படி சமைப்பாள்.சுருங்க கூறின் ஒரு தாய் எப்படி மகனுக்கு உணவு படைப்பளோ அப்படி செய்வாள்.
            ஏழு, எட்டு இடங்கள் சுத்தமக இருந்து, ஏழாம் இடத்தை ஒன்பதாம் அதிபதி பார்த்தாலும், அல்லது, சுப கிரகங்களில் குரு சுக்ரன் பார்த்தாலும் வாழ்வில் எபோதும் தித்திப்பு இல்லை என்றாலும், கசப்பு இல்லாமல் வாழ்க்கை ஓடும்.
            எழம்மாதி சுப அம்சம் பெறாவிட்டாலும், இரண்டாம் வீட்டை சுபகிரகம் பார்த்து விட்டால் மனைவியும் கணவனும் தித்திப்பில் திளைக்காவிட்டலும் வெளி உலகத்திற்கு நல்ல தம்பதியர்கள் போல் தெரிவார்கள்.

 composed by Jothidamamani M.Balasubramanian, Founder, VARA, Vellore


( மனைவி ஒரு மண்டை இடியா  ? - இந்த கட்டுரையை விரைவில் எதிர்பாருங்கள்.)

 

2 கருத்துகள்:

 1. NAME : T.KARTHICK KUMAR
  DOB : 31.10.1988
  TIME : 06.44 AM
  PLACE OF BIRTH: PATTUKKOTTAI, TAMILNADU

  MY LIFE FUTURE AND JOB ,BUSINESS AND MARRIAGE AND FOREIGN PLZ TELL ME SIR

  1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

  2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

  3.நான் எனக்கு சொந்தமான இடத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்? எப்போது நான் தொழில் தொடங்கலாம்?

  4.என்னுடைய வீட்டுக் கடன் எப்போது தீரும்? எனது குடும்பத்தில் எப்போது அமைதி நிலவும்?

  5.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்?

  பதிலளிநீக்கு
 2. பெண்ணின் ராசியிலிருந்து பையன் ராசி 5வது ஆக வரக்கூடாது என்று சொல்லுகிறார்களே. உதாரணத்திற்கு பெண் ராசி சிம்மமாகவும் பையன் ராசி தனுசு ஆகவும் இருக்கலாமா? இது திரிகோண பொருத்தத்தில் சேருமா?

  நீங்கள் கூறுவது போல மணமக்களின் ராசி திரிகோண பொருத்ததுடனோ சமசப்த பொருத்ததுடனோ அமைந்தாலும், பையன் ஜாதகத்தில் சுக்ரன் வக்கிரமாக இருந்தால் திருமண வாழ்வு இனிமையாக அமையுமா?

  பதிலளிநீக்கு