மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 19 மார்ச், 2013

வீபரித கண்டங்கள் - Dangerous Accidents

 வீபரித . . . கண்டங்கள். . ? . . ! 

                         லக்னத்தில் சூரியனும் எட்டில்  செவ்வாயும் இருந்து தேய்பிறை சந்திரனுடன் ராகு எங்கு இருந்தாலும் ஜாதகரின் உடலில் வெட்டு காயங்கள் பல இருக்கும். சில நேரங்களில் அவரது இறப்புக்கு இதுவே காரணமாக கூட அமைந்து விடும். அஷ்டமத்தில் செவ்வாய் கடுமையான ஆயுள் தோஷசத்தையும் சந்திரனுடன் சேர்ந்த ராகு ஜாதகரின் உடலை கெடுத்து விடுவதுமே இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும் இது போன்ற ஜாதக அமைப்புகளை  ஆறாம் அதிபதியின் நிலை மற்றும் லக்ன எதிரிகளின் நிலை அறிந்து சொல்வது நல்லது. இது போன்ற பலன்களை அனுபவிக்க வேறு சில ஜாதக அமைபுகலாவது சனி, சந்திரன், ராகு இவர்கள் லக்னத்தில் இருந்து, கேதுவுடன் சூரியன் எங்கு கூடி இருந்தாலும் ஜாதகர் இறப்பு வெட்டு காயத்தால் அமைய அதிக வாய்ப்பு.
 
                  பொதுவாக லக்னாதிபதி அஷ்டமாதி பதியுடன் சேரக்கூடாது, அப்படி சேர்ந்தாலும், கேந்திரங்களில் இருக்க கூடாது, அப்படி கேந்திரங்களில் இருந்தாலும் அஷ்டமாதி வலு பெற கூடாது. இப்படி பட்ட கிரக நிலை இருந்தால் கெட்ட பலன்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புகளுடன் அஷ்டம ஸ்தானத்தில் பாவிகள் உட்கார்ந்து விட்டால் அந்த ஜாதக குழந்தை பன்னிரண்டு வயது வரை எந்த நேரத்திலும் கண்டங்களை சந்திக்க நேரும். இவைகளுக்கும் மேலாக குரு லக்னத்தையோ அல்லது லக்னாதிபதி யையோ பார்த்து விட்டால் கவலை இல்லை, இல்லை என்றால் தொடர்ந்து குல தெய்வ வழிபாடு வுடன் நித்ய பூஜை ஒன்றே வழி.
                   
                தேய்பிறை சந்திரன் எழிலும், ஆறுக்குரியவன் மறைந்தும் இருந்து இவர்கள் இருவருடன் பாவர்கள் சேர்ந்து சம்பந்தம் பெற்றால் ஜாதகருக்கு வீபத்தினால் உடல் உறுப்புகள் வெட்டு பட்டு தீடீர் ஊனம் ஏற்படவும் வாய்ப்பு.
லக்னாதி பதி அல்லது எட்டுக்குரியவன் குளிகன் எனபடுகின்ற மாந்தியுடன் கூடி 6-8-12 இடங்களில் சுபர் பார்வை இன்றி இருப்பவர்கள் தங்கள் விரோதிகளால் அல்லது கொடியவர்களால் துன்புறுத்த பட்ட பின்னே இறப்பார்கள்.
 
             சனியுடன் ராகு கூடி லக்னத்தில் நின்று அன்றைய தினம் அமாவாசை திதியாக   இருந்து விட்டால் ஜாதக கை கால்கள் இரண்டுமே இழக்க நேரிடும், இதே நிலை சனி ராகுவிற்கு பதில் சுக்ரனுடன் கேது அமைந்து விட்டாலும் 
அமையும், ஆனால்  இந்த செயலை செய்தவர் இவருக்கு இன்பத்தை தந்த வேறு பாலினமாகும். அதாவது ஆண்ணாக இருப்பின் மனைவி அல்லது மனைவி போன்று இருந்த பெண்ணாக இருக்கலாம்.
 
 
 
                   எப்படி பட்ட கிரக தோஷ அமைப்புகள்  இருந்தாலும் குரு பார்வைக்கு பலம் அதிகம் என்பதால் ஜாதகத்தில் தீய இடங்களை குரு பார்த்து விட்டால் எந்த கவலையும் பட தேவை இல்லை. அப்படி குரு பார்வை இல்லாமல் இருப்பவர்கள் தெய்வ அனுகிரகத்துடன் உள்ள மனித ரூபத்தில் உள்ள உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் ஒருவரை உங்கள் குரு நாதராக ஏற்று கொண்டு செயல் பட்டால் சாத்சாத் பரப்ரம்ஹமன குரு வடிவான இறைவனே நம் பொருட்டு இப்பூவுலகில் இறங்கி வந்து நம்மை காப்பது திண்ணம்.=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.http://www.facebook.com/Balajothidar


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி


M . பாலசுப்ரமணியன், M .A ,


நிறுவனர்,


வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.


செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================
 

1 கருத்து: