மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 29 ஜூன், 2013

மாத விலக்கு மாறுவது ஜோதிடத்தில் தெரியுமா..? - mensus problems

மாத விலக்கு மாறுவது ஜோதிடத்தில் தெரியுமா..?
 
 
                                                   ஜோதிடம் கலைகளில் கண்போன்றது. இதன் மூலம் நாம் எதையும் பார்க்கலாம். இது ஒரு ஞானக்கண் என்றால் மிகையாகாது. 
ஜோதிட சாஸ்திரப்படி, மாதவிலக்கினால் கஷ்டப்படும் பெண்கள் யார் யார், அவர்கள் எப்படிப்பட்ட உடல் வலியை வருத்ததுதுடன் அனுபவிக்கின்றனர் என்பதை அவரவர் ஜென்ம ஜாதகம் காட்டிவிடும். சில பெண்கள் மாதவிலக்கு வரும் தேதியை நினைத்த உடனே முகம்வாடிவிடுவார்கள். சிலர் ஏன் இந்த கொடுமையை பெண்களுக்கு மட்டும் கொடுத்தீர்கள் என்று இறைவனிடம் மானசீகமாக சண்டை போடுவார்கள். ஆனால் ஒரு குழந்தை அம்மா என்று கூப்பிடும்போது இந்த கஷ்டம் காணாமல் போய்விடும். தாய்மை பேறு என்கின்ற உயர்ந்த இடத்தில் பெண்களை இறைவன் வைத்துள்ளான் என்பதை பிறகு தெரிந்து கொள்வார்கள்.
                          ஜென்ம ஜாதகத்தில் ரத்தத்திற்கு காரகன் செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால் இந்த மாதந்திர கஷ்டத்தை அனுபவித்தே ஆகவேண்டும். ராகு கிரகம் லக்னத்தில் அமர்ந்து விட்டால் மாதத்தில் பத்து நாட்களுக்கும் மேல் உதிரபோக்கு தொடர்ந்து இருக்கும். லக்னத்தில் கேது என்கின்ற நாகபாம்பு இருந்துவிட்டால், மாதவிலக்கு என்பது மாறி மூன்று மாதத்திருக்கு ஒரு விலக்கு, அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு விலக்கு, ஒரு சிலருக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை என்று கூட ஒழுங்கற்ற நிலையை தந்துவிடும். இதன் கொடுமை என்னவென்றால், அதிக உதிரபோக்கு இருந்துவிட்டால் கூட பரவாயில்லை, இதை போன்ற வேதனை வேறு இல்லை என சொல்லும் அளவுக்கு எது எபொழுது நடக்கும் எனபது தெரியாமலும், ஒரே டென்ஷன், uneasiness, restlessness, போன்ற நிலைகளை ஏற்படுத்தி விடும். ஒரு சிலருக்கு மனநலம் கூட பாதிக்ககூடும்.
                    லக்னத்தில் செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் வித்தியாசமான விலக்கு ஏற்பட்டு உடல்நலம் அதிகம் பாதிக்கும். மேலும் திரிகோணங்களில் ராகு அல்லது கேது  இருந்துவிட்டால் சுபநிகழ்வுக்கு செல்லும்போது இது நடந்து விடும். மேலும், சில பெண்களின் கணவர்கள் இவர்களிடம் காரணமே இல்லாமல் சண்டை போட்டு, மேலும் பெண்களை வேதனைக்கு ஆளாக்குவார்கள். இந்தியா போன்ற நம் நாடுகளில் பெண்களே பெண்களை வெறுப்பார்கள். இவைகளை ஜோதிடத்தில் முன்கூட்டியே ஓரளவு அறிந்து அதற்குரிய கிரகநிலைகள் உள்ளதா என தெரிந்துகொண்டு கிரகதேவதைகளை முறையாக வழிபடுவதால் கஷ்டங்களை குறைக்க இயலும்.
                                                                                 ......M.பாலசுப்ரமணியன்,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
 

2 கருத்துகள்: