மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 29 ஜூன், 2014

திருஷ்டி ஜோதிடத்தில் பார்ப்பது எப்படி..? Dristi dosam

திருஷ்டி ஜோதிடத்தில் பார்ப்பது எப்படி..?

            “கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்கிறார்களே..? அப்படி என்றால் என்ன? கண்ணால் அடிக்க முடியுமா? மேலோட்டமாக பார்த்தால் கதை விடுகிறார்கள். என்று தான் எண்ணத்தோன்றும்.

          இப்படி இருக்க நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை அந்திமாலையில் வீட்டில் அமரவைத்து கையில் ஏதேதோ வைத்து கொண்டு சுற்றி போடுகிறார்கள். கடைகாரர்கள் கடைக்கு திருஷ்டி சுற்றுகிறார்கள். கிரகபிரவேசத்தில் வீட்டிற்கு திருஷ்டி சுற்றுகிறார்கள். சரி நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் போது சுற்றுகிறார்கள். பிரயாணம் ஆரம்பிக்கும் போது வாகனத்திற்கு திருஷ்டி சுற்றுகிறார்கள். திருமண நிகழ்வுகளில் பல தருணங்களில் அடிகடி புதுமண தம்பதியர்களுக்கு சுற்றிபோடுகிறார்கள். இவ்வளவு ஏன், அர்த்தஜாமபூஜை கோவிலில் நடந்த உடன் சாமிக்கே திருஷ்டி சுற்றிபோடுகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன், திருஷ்டியின் திருவிளையாடல்களை.

நல்லவர்கள் திருஷ்டி:

     அப்படி இந்த திருஷ்டியில் என்ன தான் அடங்கி உள்ளது? இதை ஜோதிடத்தில் பார்த்தால் திருஷ்டி தோஷம் என்கிறார்கள். திருஷ்டி யோகம் உள்ளதா? அதுவும் உண்டு என்று தான் ஜோதிடம் கூறுகிறது. தோஷம் எனபது தீமை, யோகம் என்பது நன்மை. ஆக ஒருவர் நன்மை விளைய வேண்டும் என்று பார்த்தால் திருஷ்டி யோகம் ஆகின்றது. பெரிய பற்று இல்லாத சாதுக்களின் முகதரிசனம், பெற்றோர்கள் ஆசிர்வாதம் செய்யும் போதுள்ள அவர்கள் தரிசனம், வெல் விஷ்சர் (Well Wisher) களின் முகதரிசனம், குருவாக வருபவரின் கருணை கடாட்சம் போன்றவை நிச்சயம் திருஷ்டி யோகமாகும். இவைகள் அவர்களை நன்கு வாழ வைக்கும்.

தீயவர்கள் திருஷ்டி:

    பொறாமை படைத்தவர்களின் பார்வை, உள் ஓன்று வைத்து புறமொன்று பேசுபவர்களின் பார்வை, அடுத்தவன் உயர்ந்து விட்டானே என்று பொருமுபவர்களின் விஷப்பார்வை, இவையெல்லாம் திருஷ்டி தோஷத்தை விளைவித்து விடும். மனிதர்களில் எத்தனை குணங்கள். நல்லது, கெட்டது. அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அவர்களே அவருடைய பார்வை கெட்ட பார்வையோ என்று ஓர் இடத்தில் மனம் வருந்துகிறார். இவர் திருத்தணி முருகனை மனமுருகி வேண்டுகிறார், அப்படி இருந்தும் முருகன் அவருக்கு எளிதில் காட்சி தரவில்லை, அதற்கு அவர் “ கண்ணேறு படுமென்று கனவிலேனும் கட்டென்றால் கட்டுகில்லையோ என்று தன் கண் திருஷ்டி முருகனை கெடுத்து விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இதிலிருந்து, என்ன தெரிகிறது, கண் திருஷ்டி உண்டு என்றும், அது மனிதன் இடத்தில் மட்டும் தான் உள்ளது என்றும் தெரிகிறது.

திருஷ்டி யார் மீது விழும்.

   சரி, நாம் ஜோதிடத்தில் கண் திருஷ்டி யார் யார் மீது படும் என்பதை பார்ப்போம். லக்னம் நின்ற ராசி உயிர். சந்தரன் நின்ற இடம் உடல். லக்னமாகிய உயிர் வெளியில் தெரியாது. வெளியில் தெரியும் ஒரு பொருளை தானே நாம் பார்க்க முடியும், அப்படி என்றால் கண் திருஷ்டி  சந்திரன் அம்சமான உடல் மீது தானே படும். ஆக திருஷ்டி பார்க்க சந்திரன் நின்ற ஸ்தானத்தை பிரதானமாக எடுத்து கொண்டால் சரியாக அமையும்.

திருஷ்டி தோஷம் ஏழையை கூட தாக்குமா?
     
       ஜாதகத்தில் ஜென்ம சந்திரனுக்கு கேந்திரங்களில் சுக்ரன், செவ்வாய், சனி, சூரியன், ராகு இருப்பவர்களுக்கு இந்த திருஷ்டி தோஷம் எடுத்தகையாக அமைந்துவிடும். இதே போல் சந்திரனுடன் சுக்ரன் இணைந்து இருந்து மேற்படி கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகரை திருஷ்டி தோஷம் உண்டு இல்லை என்று பண்ணிவிடும்.  இதில் சில விதி விலக்குகள் உள்ளது. சந்திரன் நின்ற ராசியில் ராகு, கேது, சூரியன் இவர்கள் சேர்ந்து இருந்தால் திருஷ்டி தோஷம் இவர்களை திரும்பி கூட பார்க்காது. செவ்வாய், சனி இவர்கள் இருவரில் ஒருவர் சந்திரனை பார்த்தால் திருஷ்டி தோஷம் அதிகம் இருக்கும், சொல்லப்போனால் இவர்கள் பணக்காரராக இருந்தாலும், இல்லை பரம ஏழையாக இருந்தாலும் இவரை யார் பார்த்தாலும் அவர்கள் இவர் மீது கண் திருஷ்டி போடுவது திண்ணம்.

திருஷ்டி யோகம் யாருக்கு?

      ஜாதகரின் ராசியை சுபராகிய குரு தனது 5-9 பார்வைகளால் மட்டும் பார்த்தால், இவர்களுக்கு திருஷ்டி யோகம் ஏற்பட்டு விடும். குரு தனது சப்தமபார்வையாக பார்த்தால் மற்ற கிரகங்களால் ஏற்பட்ட திருஷ்டி தோஷம் நிவர்த்தி ஆகுமே தவிர இவருக்கு யோகம் ஏற்படுவது சற்று ஆராய வேண்டியதே. அடுத்த சுபரான சுக்ரன் சந்திரனை பார்த்தாலும் மற்ற திருஷ்டி தோஷத்தை குறைக்க முடியுமே தவிர, திருஷ்டி யோகத்தை தர இயலாமல் போகிறார், மாறாக, இவரே கூட திருஷ்டி தோஷத்தை விட மிகப்பெரிய களத்திர தோஷத்தை உருவாக்கி ஜாதகனை கேவலப்படுத்தி விடுவார். இதெற்கெல்லாம் ஜோதிடத்தில் சூட்சும  விதிகள் உள்ளது.

திருஷ்டி தோஷத்திற்கு விமோச்சனம்:

எது எப்படியோ, ஜென்ம சந்திரனை குரு கேந்திரத்தில் இல்லாமல் பார்த்தால் எப்பேற்பட்ட திருஷ்டி தோஷம் இருந்தாலும் அது தெய்வபலத்தால் இல்லாமல் போய் சந்தோஷத்தை ஜாதகன் அடைவான் என்பது உறுதி.  இப்படி கிரக அமைப்பு இல்லாதவர்கள் கவலை படவேண்டாம், உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டுங்கள், அவர் அதை ஆராய்ந்து பார்த்து, உங்கள் ஜாதகத்திற்குரிய விமோசனத்தை தருவார். பிறகு உங்களுக்கே விபரம் தெரிய வரும்.


(யார் யார் கண் திருஷ்டி போடுவார்கள் என்று கூட ஜோதிடத்தில் கூற இயலும், அதை வேறு ஒரு கட்டுரையில் பேசுவோமே..)

by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக