மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 14 ஜனவரி, 2015

மகரசங்கராந்தி

பொங்கல் – மகரசங்கராந்தி











        பொங்கல் பண்டிகையை வடநாட்டில் மகர சங்கராந்தி என்று கொண்டாடுகிறார்கள். மகரம் என்றால் மகர ராசி. சங்கரன் என்றால் சூரியன். மகரசங்கராந்தி என்றால் சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நாள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் நுழையும் போது, மகர ராசிக்குள் நுழைவதை மட்டும் ஏன் பிரத்தியேகமாக கொண்டாடுகிறோம். என்றால் அங்கு தான் சூட்சுமம் உள்ளது.

           சூரியன் பூமத்தியரேகைக்கு வடக்கில் உள்ள கடகரேகை முதல் தெற்கில் உள்ள மகரரேகைக்கும் இடையில் போய்வந்து கொண்டு இருக்கிறார். வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் முதல்நாள் தான் கடகசங்கராந்தி என்பர். அதாவது தக்ஷிணாயன கால ஆரம்பம். ஆடி மாதம் முதல் நாள். சூரியன் மிதுன ராசியில் இருந்து கடகராசியில் காலடி வைக்கும் நாள். தேவர்களுக்கு தக்ஷிணாயன காலம் இரவுபொழுது என்றும் கூறுவர்.

        வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் காலத்திற்கு பெயர் தட்சிணாயனம். தெற்கில் மகரரேகையை தொட்டவுடன், அடுத்த வினாடியே சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கின்றார். அதுவே மகரராசியில் சூரியன் நுழையும் முதல் நாள். இதற்கு பெயர் உத்திராயன புண்ணிய கால ஆரம்பம்.

       உத்திராயன கால ஆரம்பமே மகரசங்கராந்தி என்பதால், தேவர்களுக்கு பகற்பொழுது ஆரம்பிக்கும் நாள் என்பதால், உத்திராயன காலத்தில் ஞானமார்க்கம் சிறந்து விளங்கும் என்ற கருத்தும் உள்ளது.

      மகாபாரதத்தில் பீஷ்மர் தான் மரண முள்படுக்கையில் படுத்து கொண்டு இருக்கும்போது தனது இறப்பு உத்திராயன புண்னியகாலத்தில் இருக்கவேண்டும் என்பதால், தனது உயிரை உத்திராயணம் ஆரம்பிக்கும், மகரசங்கராந்தி என்கின்ற பொங்கல் பண்டிகை கழிந்த பின்னரே உயிரை விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

      இப்படி பட்ட புண்னியகாலத்தின் முதல் நாள், சூரியனின் வருகையினால் தான் நடகின்றது என்பதால், புதிய பானையில், புதிய அரிசி போட்டு புது பொங்கல் கொண்டாடுகின்றோம் நாம்.  பொங்கல் பொங்குவது போல் இந்த ஜோதிட விளக்கத்தை அறிந்து கொண்ட உங்கள் வாழ்வு சர்க்கரை பொங்கலாக பொங்கி இனிக்கட்டும்........Wish  you & your family a Very HAPPY PONGAL – MAGARASANKARAANTHI………. 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.


ஞாயிறு, 11 ஜனவரி, 2015

கூடாரவல்லி வைபவம்.

கூடாரவல்லி வைபவம்.

11-1-2015  - மார்கழி-27 தேதி கன்னி பெண்களுக்கு கணவனை காட்டும் நாள்.     விமரிசையாக கொண்டாடபடுகிறது.

ஆண்டாள் இந்த நாளில் தான் கனவில் கண்ட கணவனான ரங்கமன்னார் காட்சி தந்த நாள். 
27
நாட்கள் பாவை நோன்பினால் நினைத்ததை நடத்திய காட்டிய கூடாரவல்லி நாள்.






கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் நாளைக்கு ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு சென்று மனதார பிரார்த்தித்து உங்கள் வீட்டிருக் அருகில் கண்ணில் கண்ட பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வளையல், போன்ற மங்கல பொருட்களை வழங்குங்கள். அடுத்த கூடாரவல்லிக்குள் உங்கள் வாழ்க்கை துணையுடன் ஸ்ரீ ஆண்டாள் & ரங்கமன்னாரை பார்ப்பீர்கள்.



ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.


காதலர்களுக்கு வரபிரசாதமான வைபவம் - மார்கழி-27 தேதி நாளைக்கு கூடாரவல்லி நோன்பு. நினைத்தவரையே திருமணம் முடித்து வைக்க கூடியது. தற்கால காதலர்கள் கண்டதை நினைத்தாலும், நல்லது என்று நம்ம ரங்கமன்னாருக்கு தெரிந்தால் நிச்சயம் திருமணத்தை நடத்தி வைப்பார். நீங்கள் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த அளவு வளையல், பூ, பொட்டு மஞ்சள் போன்றவற்றை உங்களை விட வயதில் முதிர்ந்தபெண்களுக்கு வழங்கி அவர்களிடம் ஆசிபெறுங்கள். ஆண்களாக இருந்தால் சர்க்கரைபொங்கல் தந்து ஆசிபெறுங்கள்.






திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது






உங்கள் வீட்டில் செல்வம் இல்லையா....?
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி இல்லையா...?
உங்கள் வீட்டில் உங்கள் கணவர்/மனைவி உங்களுடன் அனுசரணையாக இல்லையா.........?
இதற்கு
நீங்கள் கவலையே படவேண்டாம்...........நாளைக்கு மார்கழி 27 கூடாரவல்லி வைபவம்.........இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.........மனதார ஸ்ரீ ஆண்டாளை வேண்டிக்கொண்டு.........ஆண்டாள் அவளுடைய காரியம் வெல்ல ஸ்ரீ ரங்கமன்னார் ஆனா ஸ்ரீ ரங்கநாதருக்கு "அக்காராடிசில்" என்கின்ற சுவையான ..........அட நாம் அடிகடி செய்வோமே........சர்க்கரைபொங்கல் அது தாங்க...........செய்து............என்ன கொஞ்சம் நெய் அதிகம் உற்ற வேண்டும்.........அதிகம் என்றால் என்ன தெரியுமா.......பொங்கல் நெய்யில் மிதக்கும்படி.......இதை செய்து நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் இவர்களை நினைத்து வழிபட்ட பின்னர் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அனைவருக்கும் நாளை முழுவதற்கும் யாருக்கும் இல்லை என்று சொல்லாத அளவிற்கு நாளை இரவு வரை வருபவர்களுக்கு வாரி வாரி வழங்குங்கள்........என்ன பட்ஜெட் இடிக்குமே என்று மட்டும் நினைக்காதீர்கள் ........ கவலையே படாமல் செலவு செய்து எல்லோருக்கும் கொடுங்கள்........உங்கள் வீட்டில் நீங்கள் நினைத்த அளவிற்கு செல்வம் வந்து கொட்டும், மகிழ்ச்சியில் மிதப்பீர்கள், உங்கள் கணவரோ/மனைவியோ உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள்.......இவை அனைத்தும் அன்று ஆண்டாள் கண்டது என்று மட்டும் நினைக்காதீர்கள்..........இன்று வரை கண்கூடாக நடந்து கொண்டு இருக்கும் செயல்...........இதையும் மீறி உங்களுக்கு சந்தேகம் வந்தால் நாளைக்கு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் / பெருமாள் கோவிலுக்கு சென்று பாருங்கள் ..........நீங்களே புரிந்துகொள்வீர்கள். ........ இல்லை என்று கூறாமல் "அக்காரடிசில்" அள்ளி கொடுங்கள்........உங்கள் வீட்டிற்க்கு ஸ்ரீ ஆண்டாளே வந்து குடிகொள்வாள்.




சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002