மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 17 ஆகஸ்ட், 2016

“கோச்சார வசாத்” - Kochchaara Vasaath

“கோச்சார வசாத்”  
  இன்றைய நாள் யோகம் தருமா இல்லையா என்பதை அறிய அஷ்டவர்க்க முறையில் காண்பது. இதற்கு பெயர் கோச்சார வசாத் என்பர்.
ஒருவர் பிறந்த ஜாதகப்படி அவரது பின்னஷ்ட வர்க்க சக்கரப்படி, ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் நிற்கும் போது எவ்வளவு பரல்கள் வாங்கி உள்ளது என்பதை சார்ட் மூலம் அறியலாம்.

       இன்றைய பலத்தை அறிய இன்று கோச்சார கிரகங்கள் நிற்க கூடிய இடங்களில் , அவரது ஜென்ம ராசி படி பின்னஷ்ட வர்க்க சக்கரப்படி எடுத்து போடவேண்டும். மொத்தம் கூட்டினால், சராசரியை விட கூட வந்தால் அன்றைய தினம் அந்த ஜாதகருக்கு யோகதினமாக “கோச்சார வசாத்” படி சொல்லலாம்.

உதாரண ஜாதகம்:
பெயர்:A  
DOB: 1-1-1980
time: 10.00 am @ Vellore
ஜென்ம ராசி:





இதன் படி இவரது ஜென்ம ஜாதகத்தில் உள்ள பின்னஷ்ட வர்க்க சக்கரம்.





பலன் பார்க்கும் நாள்: இன்று. 17-8-2016 (பார்க்கும் நேரம்;காலை 9 மணி.)
Today





sooriyan simmam  (As per jenma Jadhaga’s Pinnastavarga Soorian in Simmam gets 4 parals)
Chandra=makaram (Chandran in Makara gets only 2 parals)
chevvaai=viruchchika  (Chevvaai in Viruchchiga gets 4 parals)
Budan=simmam  (Budan in Simma gets only 4 parals)
Guru=Kanni  (Guru in Kanni gets 5 parals)
Sukran=Simmam  (Sukran in Simmam gets only 3 parals)
Sani=Viruchchiga  (Saturn in viruchchiga gets 5 Parals)

ஆக,
சூரியன் 4 பரல்
சந்திரன் 2 பரல்
செவ்வாய் 4 பரல்
புதன் 4 பரல்
குரு 5 பரல்
சுக்ரன் 3 பரல்
சனி 5 பரல்
ஆக மொத்தம் = 27

அஷ்டவர்க்கத்தில் மொத்தம் 337/12= 28.08333
இன்று நமக்கு கிடைத்தது 27
 பரல்கள் என்பதால் இன்று average சராசரி நாள். என அறியலாம்.

இதை அவரவர்கள் அனுபவித்து பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள்.

==========================================================================



சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002




ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

KulaDeivam குலதெய்வத்தை கூப்பிடுவது எப்படி..?

குலதெய்வத்தை கூப்பிடுவது எப்படி..?




நம் குடும்பத்தை காப்பது நமது குலதெய்வத்தை விட வேறு ஒருவர் இல்லை. நாம் கூப்பிடும்போது ஓடிவருப்பவள் தான் நமது குலதெய்வம். குலதெய்வத்தை கொண்டாடுபவனுக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் என்பது முற்றிலும் உண்மை. குடும்பத்தில் காலா காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கும், திருமணம் முடித்தவர்களுக்கு சந்ததி தோன்றுவதற்கும், தொழில் வியாபார அபிவிருத்தி அடைவதற்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நடத்தி தருபவர் 

பொதுவாக ஐந்தாமிடத்தை வைத்து குலதெய்வத்தை குறிக்கலாம் என்றாலும், இது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. காரணம் ஒரு வீட்டில் இரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் இருக்குபோது ஒவ்வொருவருக்கும் ஐந்தாமிடம் வேறுபாடும் போது, அந்த வீட்டிற்குரிய குலதெய்வம் கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படும்.

குடும்பத்தின் கோத்திரம் தெரிந்தால், கோத்திர பங்காளிகளிடம் சென்று அறிந்து கொள்ள முடியும். ஒரு சிலருக்கு கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் சூத்திரங்கள் மாறுபடும். அப்பொழுதும் சில குழப்பங்கள் தோன்றும்.

ஐந்தாமிடம் பெண் ராசியாக இருப்பின் அம்மன், அம்பாள் போன்றவர்கள் என்பதும், ஆண் ராசியாக இருப்பின் அய்யனார், கருப்பன், என்பதுமாக பார்கின்றனர். ஒரு சிலர் ராசியின் அதிதேவதை கொண்டு குலதெய்வத்தை குத்துமதிப்பாக கூறுவார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தில் தந்தை தாத்தா குலதெய்வத்தை சென்று வணங்கும்போது அடுத்து வரும் பிள்ளைகளும் தொடர்வார்கள். இவர்களின் தொடர்ச்சி எப்பொழுது விடுபடுகிறது என்றால், அந்த குடும்பத்தில் தாத்தா மற்றும் அவருக்கு முந்தைய தலைமுறையில் சில பெரும்பாவங்களை செய்யும்போது பிறக்கும் பேர குழந்தைகளுக்கு ஐந்தாமிடம் பாவகிரகங்களின் ஆதிக்கத்தில் வந்துவிடுகிறது. இதனால் குலதெய்வ வழிபாடு நின்றுவிடுகிறது. இதற்கு தான் குலதெய்வ சாபம் என்கின்றனர்.

ஒரு சிலருக்கு ஜாதகமே இல்லாமல் போகக்கூடிய நிலை இருக்குபோது, இந்த ஐந்தாமிடத்தை பற்றி கூட தெரிந்து கொள்ள இயலாமல் போகிறது.
ஆக, இந்த ஐந்தாமிடத்தை வைத்தோ, ஒன்பதாமிடத்தை வைத்தோ மிக சரியாக கணிக்க இயலாது. இதற்கும் மேலாக இறைவனின் அருள் இருந்தால் தான் குலதெய்வமே கூட கண் முன் தோன்றும். இது சில நேரங்களில் பிரசன்னத்தின் மூலமாக அறியலாம்.

சில குடும்பங்களில் பூவாடைகாரி என்று புடவையை மடித்து வைத்து வணங்கிவருவார்கள். அதாவது, பூவும் பொட்டுவுடன் ஒரு கட்டுகழுத்தி என்கின்ற சுமங்கலி பெண் இறந்து விட்டு இருக்கும்போது, அந்த பெண்மணி நம் குடும்பத்தை காப்பாள் என்ற ஐதீகம்.

 சில நேரங்களில் அசரீர் மூலமாக அறியலாம்.கோத்திரம் அறிந்து, அந்தந்த கோத்திர ரிஷிகளின் நட்சத்ர, கோவில் அல்லது தெரிந்த சமாதிகளுக்கு சென்று வழிபடலாம்.

அடுத்து,

ஒரு சிறிய வழி ஓன்று உள்ளது, நாம் இருக்கும் இடத்தின் எல்லை தெய்வத்தை வணங்கி, குலதெய்வத்தை காட்டும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். அதற்காக சிறு காணிக்கைகளை வீட்டில் போட்டு கொண்டு வரவேண்டும். இந்த வேண்டுதல் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் உங்கள் குலத்தில் உங்கள் உறவினர்களாக உள்ள ஒருவர் மூலம் நிச்சயம் உங்கள் குலதெய்வம் தெரியவரும்.

அடுத்து

மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை அனைவரும் அறிவர், எனவே குலதெய்வம் தெரியாதவர்கள் தாய்தந்தையரை வணங்கினாலே போதும். இல்லை உங்களது அஞ்ஞானத்தை யார் போக்கினாரோ அவரையே நீங்கள் குருவாக நினைத்து வந்தாலே போதும்.

அடுத்து

பிரசன்னத்தின் மூலம் அன்றைய பிரசன்ன கட்டத்தில் உதயத்தையும், உதயத்தில் நின்றவரையும் வைத்து அறியமுடியும்.

அடுத்து

உங்களுக்கு குழப்பம் வருவதாக உணர்ந்தால், கவலையே படவேண்டாம், நமது இந்து மதம் ஆறு மதங்களை கொண்டது என்றாலும், இவை ஆறும் சேர்ந்து இரண்டு பெரிய பிரிவுகளாக சைவம், வைஷ்ணவம் என்று உள்ளது. எனவே உங்கள் மரபு சைவ மரபாக இருப்பின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு (அல்லது சிதம்பரம்) சென்றோ, வைஷ்ணவமாக இருப்பின் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு (அல்லது திருப்பதி) சென்றோ தொடர்ந்து வழிபட்டு வந்தால் குலதெய்வம் ஒரு நாள் உங்கள் முன் வந்து நிற்கும்.


(என்ன இவர் ஜோதிட ரீதியாக கூறி முடிக்காமல், ஆன்மீகத்தில் முடித்துவிட்டாரே என்று தாங்கள் நினைக்க தோன்றும். ஜோதிட ரீதியாக எந்த மார்க்கமாக குலதெய்வத்தை குறிப்பிட்டு கூறினாலும், சில வருடங்களுக்கு பிறகு, அதில் மனதிற்குள் சந்தேகம் ஏற்படுவதையும், சில நாட்கள் கழித்து அதையும் தொடராமல் விட்டுவிடுவதும் அனுபவத்தில் காண்கிறேன்.)  


 ================================================================

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002

====================================================================


திங்கள், 8 பிப்ரவரி, 2016

சந்திரனும் சஞ்சலமும்

சந்திரனும் சஞ்சலமும் 



வேகமாக செல்லும் சந்திரன் சம்சார வாழ்க்கையில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் நேரங்கள்:

பெரும்பான்மையோருக்கு கோட்சார சந்திரன் நெருப்பு ராசிகளில் பிரவேசிக்கும் வேளையில் மனகிளர்ச்சி, கோபம், அதிக உற்சாகம், உணர்வு மேலோங்குதல் போன்றவை நிகழும்.

கோட்சார சந்திரன் நிலராசிகளில் இருக்கும்போது பணத்தை பற்றிய சிந்தனைகள், பற்றாக்குறை, நிலையாமை, பேராசைகள் போன்ற எண்ணங்களில் திளைத்து இருக்க வேண்டி வரும்.

கோட்சார சந்திரன் காற்று ராசிகளில் சஞ்சாரம் செய்துகொண்டு இருக்கும்போது மற்றவர்களுடன் தொடர்புகள் கூடுதல், ஆண் பெண் உறவுகளை நினைத்து ஏங்குதல், போன்ற சிந்தனைகளுக்கு ஆட்படுவர்.

கோட்சார சந்திரன் நீர் ராசிகளில் பிரவேசிக்கும் காலத்தில் குழப்பங்கள், தன்னை தானே தாழ்த்தி கொள்ளுதல், அதிக ஈரக்க தன்மை போன்ற நிகழ்வுகளில் நம் மனம் ஆட்கொள்ளும்.


மேற்கண்ட காலகட்டங்களில் கோச்சார சுப/பாவகிரகங்கள் பார்ப்பதை வைத்து எண்ணங்கள் கூடவும் குறையவும் செய்யும்.

*************************************************************************


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002

*************************************************************************