நவராத்திரி என்றால் என்ன..؟
நவராத்திரி - ஒன்பது ராத்திரி - இந்த ஒன்பது ராத்திரியும் நமது பாராசக்தியை வெவேறு தேவதையாக பாவித்து வணங்குவது. ஒவொவொரு சக்தி தேவியாக வழிபாட்டு இறுதியில் இந்த அனைத்து சக்தியையும் சேர்த்து தசமி திதியில் அதி பயங்கர சக்திவாய்ந்த அன்னை பாராசக்தியாக வழிபடுகிறோம். ஒன்பது நாள் இரவு சக்திபுஜை விரதம் இருந்து செய்து வந்தால் பத்தாவது நாள் நாம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதை நிச்சயம் அடைவோம், அதனால் தான் " விஜயதசமி " என்கின்றோம்.
நவராத்திரி விரதம்: புரட்டாசி அமாவாசையின் மறுநாள் பிரதமை திதியில் இருந்து
நவமி திதி வரை பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் கொலு பூஜை செய்து
கன்னிப்பெண்கள் & சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்கும பிரசாதங்கள் தந்தால்
துன்பங்கள் நீங்கி வீட்டில் செல்வம் நிலைக்கும்.
நவராத்திரிவிரதம் இருப்பதால் நாம் சரஸ்வதி, லக்ஷ்மி, ஈஸ்வரி
என்கின்ற முப்பெரும் தேவியர்களின் அருளை ஒரே நேரத்தில் பெறுகின்றோம்.
ஸ்ரீராமன் இந்த நவராத்திரியில் ராவணனுடன் போர்புரிந்து தசமி திதியில் துர்காவை
வழிபட்டதால் வெற்றி கிடைத்ததாக சிலர் கூறுகின்றனர்.
துர்க்கை பத்து நாட்கள் போர் புரிந்து மகிஷாசுரனை வென்ற தசமி திதியில் தசரா
விழா கொண்டாடப்படுகின்றது.
ஜென்ம ஜாதகத்தில் ராகு கேதுவால் உள்மனதிற்குள் ஏற்படும் பயத்தை போக்க இந்த
நவராத்திரி விரதம் மிகசிறந்த உபாயமாகும்.
தசமி வெற்றியின் திதி என்பதால் இன்றைய நாளில் வணிகர்கள் புதுகணக்கை துவக்கி
லாபத்தை அடைகின்றனர். குழந்தைகளுக்கு அட்சர ஆரம்பம் இன்றைய நாளில் செய்கின்றனர்.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
====================================================================================================