அட்சய திரிதியின் ஜோதிட
ரகசியங்கள்.
அட்சய திரிதியை என்கின்ற நாள் நம் அனைவருக்கும் ஒரு பெரிய வர பிரசாதமான நாள் . நம் தமிழகத்தில் உள்ள மக்கள் இந்த நாளை வெறும் தங்கம் வாங்கும் நாளாக மட்டுமே பயன்படுக்கின்றனர். இந்த நாளின் உள்ளர்த்த ரகசியங்கள் நிறைய பேருக்கு தெரியாமல்
உள்ளது.
பாற்கடலில் பள்ளிகொண்டு இருக்கும் பரமாத்மாவின் ஆறாவது அவதாரமான
பரசுராமன் அவதாரம் எடுத்த நாள். மேலும் இதே நாளில் தான் விநாயகரின் துணை கொண்டு
வியாசர் மகரிஷி மகாபாரத்தை தொகுக்க ஆரம்பித்தார் .
சிவபெருமானின் ஜடாமுடியில் கட்டுண்ட கங்கை மாதா பகிரதனின்
பெரும் முயச்சியால் நம் பாவங்களை போக்க பூமியில் குதித்த நாள் இந்த நாளே .
சதுர்யுகங்களில் கிருதாயுகம் முடிந்து 1296000 ஆண்டுகள் கொண்ட திரேதாயுகம் ஆரமபித்த நாளாக இதை கருதுகிறார்கள் . கிருஷ்ணபரமாத்மாவின் பால்யநண்பன் சுதாமா என்கின்ற குசேலன் 27 பிள்ளைகளை பெற்று
வறுமையில் வாடிய பின் தன் மனைவியின் தூண்டுதலின் பேரில் வறுமையை துடைக்க அரிசியில்
செய்த அவலுடன் கிருஷ்ணரை சந்தித்த நாள் இந்த அட்சய திரிதியை நாளே. அதாவது குசேலன்
கோட்டிஸ்வரன் ஆனநாள்.
ஆதிசங்கரர், ஒரு ஏழையின்
வறுமை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடி கூரையை பீய்த்து கொண்டு தங்ககாசுகள் கொட்டிய
நாள் இந்த இனிய நாளே.
ஜோதிட ரகசியம்:
இந்த நாள்
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், வளர்பிறை
என்கின்ற சுக்லபட்சத்தில் வரும் மூன்றாவது திதியான திரிதியையில் வரும். இதை ஊன்றி
கவனித்தால் இதன் ரகசியம் தெரியும். சித்திரை மாதம் அமாவாசை நாளன்று சூரியனும்
சந்திரனும் சேர்ந்து இருக்கும். வளர்பிறை 3-வது திதியில், அதாவது சூரியனில் இருந்து சுமார் 12 X 3 = 36 டிகிரி தள்ளி சந்திரன் இருப்பான். அப்படி என்றால், சூரியன் சித்திரை மாதம் மேஷத்தில் உச்சம் பெற்று இருப்பார்.
இதற்கு 36 டிகிரி என்றால் நிச்சயம் சந்திரன் ரிஷபத்தில்
இருப்பார் அல்லவா. ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெற்று மிக பலத்துடன்
விளங்குகிறார்.
ஆக, ஒவ்வொரு அட்சயதிரிதியை
தினத்தன்றும் நவகிரகங்களில் நாயகன் நாயகியாக திகழும், சூரிய சந்திரர்கள் உச்சம் பெற்று உலக மக்களுக்கு
அம்மையப்பனாக அருள் பாலிக்கின்றனர். எனவே இந்த நாளில் நாம் எது செய்தாலும்
சிறப்பாகவே அமைந்துவிடும். அட்சய என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் என்னவென்றால்
என்றும் குறைவில்லாத வளமும் வெற்றியும் என்பதாகும். எனவே தான் இந்த நாளில் நாம் எதன் மீது ஆசை பட்டு வாங்குகிறோமோ அது நம் வாழ்நாள் முழுவதும் குறைவில்லாமல் என்றும் நம்மிடம் இருக்கும். இதனால் நமது மக்கள் தங்கத்தை வாங்கி அணிந்து கொள்கின்றனர். தங்கம் அவர்களிடம் ஓரளவு
சேரும் என்பதும் உண்மையே.
மகாலக்ஷ்மியை குபேரன் தவமிருந்து செல்வத்தை பெற்ற நாள்
என்பதால், நாமும் இந்த நல்ல நாளில் மகாலட்சுமி பூஜையை கண்டிப்பாக
செய்யவேண்டும். முக்கியமாக மகாலக்ஷ்மியின் அம்சம் தங்கத்தை விட வெள்ளியில்
உள்ளதால், அதவாது சுபிட்சத்தை தரும் மகாலக்ஷ்மியின் அம்சமான சுக்ரனின் உலோகம் வெள்ளியே. எனவே நாம் வெள்ளியில்
மகாலட்சுமி உருவம் பொரித்த டாலர் அல்லது செயினை வாங்கி பூஜை செய்து அணிவது மிக
சிறப்பை தரும்.
முக்கியமாக தாம்பத்ய குறையுள்ள தம்பதிகள்
இந்த அட்சய திருதிய நாளில் தங்கத்தை வாங்கி அணிந்தால் சந்தோசம் வருமே தவிர, இவர்களை தொடர்ந்து தனித்தனியே படுக்கவைக்கும் என்ற
ரகசியத்தை யாரும் அறிந்திலர். தங்கத்திற்கு பதிலாக வெள்ளியை வாங்கி பூஜை செய்து
வழிபட்டால், தம்பதியருக்குள் இருக்கும் தடைகள் நீங்கி அன்னியோனியம்
மலரும். இதற்கு காரணம், தங்கம் குருவின் அம்சம், வெள்ளியோ
சுக்ரனின் அம்சம்.
வாங்க வேண்டியது
வாங்க கூடாதது:
தங்கம் வாங்கலாம் ஆனால் கடன் வாங்கி வாங்க கூடாது. debit கார்டு மூலம் வாங்கலாம், ஆனால் கிரெடிட்
கார்டு மூலம் வாங்க கூடாது. கடன் வாங்கி வாங்கினால், எப்படியும் அந்த
வீட்டில் இருந்து மகாலட்சுமி வெளியேறுவது திண்ணம்.
வெள்ளி காசுகள், வெள்ளி விளக்குகள், வெள்ளி காப்புகள்
இவை எல்லாம் வாங்கலாம்.
வைரம் பதிந்த மூக்குத்தி, தோடு, நெக்லஸ் போன்றவை
வாங்குவது மிக சிறப்பை தரும்.
ஆடம்பர வீடு,
பங்களா, விலை உயர்ந்த கார்கள் வாங்கலாம். சொல்லப்போனால் செல்வத்தின் செழிப்பு என
கருதும் எதை வாங்கினாலும் சிறப்பே. கடன் வாங்கி வாங்க கூடாது.
ஏழைகளுக்கும் அட்சய
திரிதியை:
என்ன பணக்காரர்களுக்கு மட்டுமே அட்சய திரிதியை போலும், ஏழைகள் தங்கம் வெள்ளி வாங்க இயலாதே என்று நினைக்க வேண்டாம், முக்கியமாக இந்த நாளில் வாங்க வேண்டியவை:
முதலில் அம்மா அப்பாவின் ஆசிர்வாதங்கள். இதனால் பெரும்
பாக்கியங்களை அடையமுடியும். முக்கியமாக சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானம்
பாதிக்க பட்டவர்கள் கண்டிப்பாக இதை அனுஷ்டித்தால் சுகம் தன்னாலே தேடி வரும்.
குருவின் ஆசிர்வாதம் கண்டிப்பாக அவசியம் வாங்க வேண்டியது.
இந்த நாளில் பெறும் ஞானஉபதேசம் மற்றும் ஆசிர்வாதம் இறைவனை காட்டவைக்கும். மனிதனின்
பிறப்புக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும். ஞானவிசயங்கள் மற்றும் ஆயகலைகள் அனைத்தும்
நம்மை வந்து சேரும். என்றும் மகிழ்ச்சி பொங்கும்.
குடும்பத்திற்கு தேவையான மிக முக்கியமான
சர்க்கரை, அரிசி, பருப்பு, உப்பு, தண்ணீர் புஷ்பம், மஞ்சள், குங்குமம் இவைகளை
வாங்கி பூஜையில் வைத்து அன்னபூரணி மற்றும் மகாலக்ஷ்மியை இந்த இனிய நாளில்
வழிபட்டால், பசி பிணி போவதுடன் என்றும் தீர்கசுமங்காலி யோகத்தை அடைய முடியும்.
தானம் தருமம் இந்த நாளில் செய்தால் நம் ஜென்மத்திற்கும்
இந்த புண்ணியம் தொடரும். இறுதி நாட்களில் நம்முடன் இருக்கும் பிள்ளை
பெண்டாட்டிக்கு மற்றும் யாருக்கும் துன்பம் தராமல் இந்த பூஉலகை விட்டு விண்ணுலகம்
செல்ல முடியும்.
ஆஸ்பத்திரி செலவுகள், மருந்து மாத்திரை வாங்குவதை இந்த நாளில் தவிர்த்தல் மிக
சிறப்பை தருவதுடன் ஆரோக்கியமான சுழலை என்றும் ஏற்படுத்தும். அவசியம் வாங்க வேண்டி
இருந்தால் முன்னாளே வாங்கி வைத்து கொள்வது நலம்.
இந்த நாளில் கொஞ்ச நேரமாவது ஈஸ்வரதியானம், தவம் முதலியவற்றை பழகவேண்டும். குறைந்தது ஜெபம் செய்வது
மிக்க நன்று.
இது போன்ற
அட்சய திரிதியை என்கின்ற இனிய நாள் வருகிற 1-5-2014 ஆம் தேதி
மதியத்திற்கு மேல் அனுஷ்டிக்கலாம். எல்லா வளமும் இறைவன் அருளால் பெறலாம்.
>>> சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
Both Online & Direct Astrology
Classes are undertaking
செல்: 9443540743.
=======================================================================================================
ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப்
பட்ட ஜோதிட சம்பந்தமான ஆலோசனைகள் தேவைபடுவோர் கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு கடிதம் அனுப்பவும்.
====================================================================================================