மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 10 செப்டம்பர், 2014

ஜோதிடனின் காதல் - விவேகசிந்தாமணி - Love


ஜோதிடனின் காதல் 




ஒரு நான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இரு நான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம்மொழியை கேட்டபடி ஈந்தாயா யின்
பெரு நான்கும் அறு நான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே

சகிக்க முடியா(து) இனிதே சகியே மானே.



இந்த பாடலின் பொருள்.


ஒரு நான்கு + ஈரரை + ஒன்று ஆன ஆறு (4 + (2x0.5) +1 = 6) ராசியாகியராசி மண்டலத்தில் ஆறாவது ராசியாகிய கன்னியே,

ஐந்து அரைகளோடு அரையையும் சேர்ந்த ( (5x0.5) + 0.5 = 3 )
மூன்றைக்குறிக்கும்  அதாவது வாரத்தின் மூன்றாவது நாளனா (செவ்வாய்) போன்ற அழகிய சிவந்த வாய் உள்ள பெண்ணே, 

இரு நான்கு+மூன்றுடன்+1 = 12 ((2x4) +3 +1 =12 )  நட்சத்திரத்தின் வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம (உத்திரம் என்றால் பதில் மொழி) சொல்லாய். 

நான் கேட்டபடி நீ தந்தால் பெருநான்கும் + அறுநான்கும்
(4 + (6x4)= 28 ) என்கின்ற தமிழ் வருடத்தின் இருபத்து எட்டாவது ஆண்டான ஜெய ஆண்டில் வெற்றி பெறுவாய். 

சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே 4+10+15=29
29 வருடமாகிய மன்மத ஆண்டு அதாவது உன் அழகை பார்த்த என்னை இந்த மன்மதன் படுத்தும் பாட்டை என்னால் சகிக்க இயலாது, எனவே இந்த நடப்பு ஆண்டான ஜய வருசத்திலேயே நம் திருமணத்தை முடிப்போம்.

இந்த பாடலின் ஆங்கில அர்த்தம்.


 “You young lady, I request you to give me your rosy lips.

 If you accept and heed to what I request, you will have 

victory in winning my heart. You need not tell me anything 

else (reasons or denial) today because, I am not able to 

torelate the effects of manmadha arrow (cupid’s arrow).”


காதலியை விட ஜோதிடமே மூச்சு.


       ஒரு ஜோதிடன், தன் காதலை வெளிபடுத்தும் வேளையில் கூட, ஜோதிடத்தையே உயிராக வைத்துள்ளான் என்பதை இந்த பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது. இதை புரிந்து கொள்ள கூடிய அந்த பெண்ணும் ஜோதிடராக இருந்தால் தானே இது புரியும். இந்த பாடலில் தனது காதலையும் தாபத்தையும் நாசூக்காக, அதே நேரத்தில் விரசம் இல்லாமல் தன் விரக தாபத்தை தெரிவித்த அழகு மெய்சிலிர்க்க வைக்கின்றது.

=========================================================================

(இந்த கிடைப்பதற்கறிய விவேகசிந்தாமணியின் பாடலை எடுத்து குறியிட்டு காட்டிய எனது அருமை நண்பர் பூவிழுந்த நல்லூர்

புலவர் N.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து மேலும் இது போன்ற பாடல்களை அவரிடம் இருந்து எதிர்பார்கின்றேன் ---> ஜோதிடமாமணி M. பாலசுப்ரமணியன்.)