மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஏழரை சனி மூன்று சுற்றுக்கள் Seven and half Sani

ஏழரை சனி சுற்றுக்கள்

 


மூன்று சுற்றுக்கள்.   

     ஏழரை சனி மூன்று சுற்றுக்கள் வரும். மங்கு சனி, பொங்கு சனி & மரணசனி. ஆனால் இது உண்மை அல்ல என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது உண்மை என்றால் எல்லா மனிதனும் 60 வயது முடிந்தவுடன் மரணத்தை தழுவுகின்றானா...? இல்லையே..! மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் விம்சோத்தாரி முறையில் மனிதனுக்கு 120 வருடங்கள் ஆயுள் என்று கூறுகிறார்கள். இந்த முறையை தான் நமது இந்தியாவில் மட்டுமல்லாது உலகநாடுகளில் உள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் பின்பற்றுகிறார்கள். இதன்படி மனிதனுடைய ஆயுள் 120 ஆண்டுகள் என்று உறுதியாகின்றது.

நான்கு சுற்றுகள்.


இதில் முதல் 30 ஆண்டுகள் = மங்கு சனி காலம்.
அடுத்த 30 ஆண்டுகள் = பொங்கு சனி காலம்
அடுத்த 30 ஆண்டுகள் = குங்கு சனி காலம்
கடைசி 30 ஆண்டுகள் = மரண சனி காலம்.

இதன் விளக்கம் வேண்டுமானால் 

மங்குசனி.


மங்கு சனி என்பது 30 வயதிற்குள் வரும் ஏழரை சனி ஆகும். இந்த காலகட்டத்தில் வரும் கஷ்டமோ சுகமோ ஜாதகருக்கு தெரியாது. இது அவருடைய தந்தைக்கு தான் தெரியும். எனவே இந்த காலத்தில் கஷ்டம் இருந்தாலும் அதை சுலபமாக கழித்துவிடமுடியும். இந்த காலகட்டங்களில் தந்தைக்கு பொருளாதார துறையில் ஆரம்பத்தில் கஷ்டங்கள் கொடுத்து முடிக்கும் தருவாயில் தந்தைக்கு பணவிசயங்களில் வளர்ச்சியை தந்துவிடுகிறது. இது கண்கூடு.

பொங்குசனி.

பொங்குசனி என்பது 30 வயது முதல் 60 வயதுக்குள் வருவது. இதில் பல பொருளாதார மற்றும் மனகஷ்டங்கள் வந்தவண்ணம் இருக்கும். இருந்தாலும் இதனால் முதலில் பிரச்சனைகள் பல இருந்தாலும் முடிவில் யோகத்தை செய்வதால் இந்த பொங்குசனி யோகசனியாகவே இருக்கும். இந்த ஏழரை வருடகாலங்களில் தந்தைக்கு நிறைய பிரச்சனைகள் வரலாம். தந்தையின் ஜாதகம் சரியாக இருந்துவிட்டால் இந்த காலகட்டத்தை தந்தை எளிதில் தண்டிவிடுவார்.

குங்கு சனி. 

குங்கு சனி என்பது 60 வயது முதல் 90 வயதுக்குள் வரும் ஏழரை சனி ஆகும். இதில் உடல் குன்றுவது. அதாவது குறைந்துகொண்டே வருவது. உடலில் சக்திகள் அடுத்தடுத்து குறைந்து கொண்டே வருவது.

மரணசனி.

மரணசனி என்பது 90 வயது முதல் 120 வயதுக்குள் வரும் ஏழரை சனி. இந்த காலகட்டத்தில் தான் நம் முன்னோர்கள் மரணத்தை தழுவினார்கள்.
இன்றைய உணவுமுறை பழக்கம், சமுதாய மாற்றங்கள், ஒழுக்கமின்மை போன்ற பல்வேறு காரணமாக குங்குசனியும் மரணசனியும் ஒன்றினைந்து மரணசனி என்ற பெயரில் அழைக்கபடுகிறது.
குறிப்பு: ஜம்பு மகரிஷி வாக்கியம் மூலமும் உரையும் என்ற நூலில் ஆசிரியர் திரு செ.தேவசேனாதிபதி அவர்களின் கூற்றும், ஆசிரியர் புலியூர் பாலு அவர்கள் தான் எழுதிய கோச்சார பலன்கள், பத்திரிகைகளுக்கு ராசிபலன் எழுதுவது எப்படி என்ற தனது நூலில் இந்த நான்கு சுற்றுக்களை பற்றி விபரமாக கூறுகிறார்.










====================================================================


 சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002


===============================================================================