லக்னத்தில் சர்பகிரகங்கள் இருந்தால் சாப்பாடு கிடைக்குமா...?
ஆண்
ராசிகளில் உள்ள லக்ன கேது உறவுகளும், பந்தங்களும் நம்மிடம் ஒட்டி உறவாட வேண்டும் என
நினைப்பார், அப்படி உறவுகள் உரிமையோடு உறவாட வரும்போது உம்மென்று இருந்து உறவுகளை
ஓடவிட்டுவிடுவர். இதே போல தான் பெண் ராசிகளில் உள்ள லக்ன கேது வசதி வாய்ப்புகள்
நம்மை தேடி வரவேண்டும் என்று இருப்பவர்கள். அப்படி அவர்களை வாய்ப்புகள் தேடி
போனாலும் அவைகளை உதறிவிட்டு வாழ்வதே வாழ்க்கையாக இருப்பார்கள்.
லக்ன கேது உள்ளவர்கள் பெரும்பாலும் திருவாசகத்தில் கையாளப்பட்ட
வார்த்தையான “நெறியில்லா நெறிதன்னை நெறியாக நினைத்து” அமைந்த
நிலையான வாழ்க்கையை நிலைகுலைத்து விட்டு இறைவனை நிந்திப்பார்கள்.
ஆண்ராசிகளில் உள்ள லக்ன ராகு உறவுகள், பந்தங்கள், காதலர்கள் மீது
அபரிமிதமான நெருக்கங்களை தாமே வளர்த்துகொண்டு தீடீர் என்று தவறாக தாமே
நினைத்துகொண்டு இவர்களை கழற்றி விட்டுவிட்டு மேற்கண்ட உறவுகள் நம்மை ஏமாற்றி விட்டதாக
இறுதியில் தன்னைத்தானே ஏமாற்றி கொள்வர். இவர்கள் அடிகடி வாழ்க்கையில்
சொந்தபந்தநட்புக்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
பெண் ராசிகளில் உள்ள லக்ன ராகு உலக பொருள்கள் அனைத்தையும் தமதாக்கி
எக்ஸ்பிரஸ் வேகத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டு இறுதியில் அந்த பொருள்களே அவர்களுக்கு
அல்லலை கொடுக்குபோது, அந்த பொருள்களை விட்டு விட்டு வேறு பொருள்கள் மீது வேட்கை
திரும்பும்.இவர்கள் அடிகடி வாழ்க்கையில் இடமாற்றங்களை சந்திப்பார்கள்.
பொதுவாக, லக்ன கேது உள்ளவர்கள் ஆரம்பத்தில் இருந்து அய்சாட்டியம்
பண்ணி அமைதியற்று இருப்பார்கள், ஆனால் லக்ன ராகு இருப்பவர்கள் அனைத்தையும்
அனுபவித்து அமைதியற்று இருப்பார்கள். எது எப்படியோ, லக்னத்தில் சர்பகிரகங்கள்
இருப்பவர்கள் அமைதியற்று தான் இருப்பார்கள். சுருங்ககூறின், சாப்பிடாமல் கஷ்டபடுவது ஒரு ரகம், அதிகம் சாப்பிட்டுவிட்டு
கஷ்டபடுவது அடுத்த ரகம்.
*********************************************************************
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க
கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
*********************************************************************