சந்திரனும் சஞ்சலமும்
வேகமாக செல்லும் சந்திரன் சம்சார வாழ்க்கையில் சஞ்சலத்தை ஏற்படுத்தும்
நேரங்கள்:
பெரும்பான்மையோருக்கு கோட்சார சந்திரன் நெருப்பு ராசிகளில்
பிரவேசிக்கும் வேளையில் மனகிளர்ச்சி, கோபம், அதிக உற்சாகம், உணர்வு மேலோங்குதல்
போன்றவை நிகழும்.
கோட்சார சந்திரன் நிலராசிகளில் இருக்கும்போது பணத்தை பற்றிய சிந்தனைகள்,
பற்றாக்குறை, நிலையாமை, பேராசைகள் போன்ற எண்ணங்களில் திளைத்து இருக்க வேண்டி
வரும்.
கோட்சார சந்திரன் காற்று ராசிகளில் சஞ்சாரம் செய்துகொண்டு
இருக்கும்போது மற்றவர்களுடன் தொடர்புகள் கூடுதல், ஆண் பெண் உறவுகளை நினைத்து ஏங்குதல்,
போன்ற சிந்தனைகளுக்கு ஆட்படுவர்.
கோட்சார சந்திரன் நீர் ராசிகளில் பிரவேசிக்கும் காலத்தில்
குழப்பங்கள், தன்னை தானே தாழ்த்தி கொள்ளுதல், அதிக ஈரக்க தன்மை போன்ற நிகழ்வுகளில்
நம் மனம் ஆட்கொள்ளும்.
மேற்கண்ட காலகட்டங்களில் கோச்சார சுப/பாவகிரகங்கள் பார்ப்பதை வைத்து எண்ணங்கள்
கூடவும் குறையவும் செய்யும்.
*************************************************************************
சித்தாந்த
ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட
பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
*************************************************************************