மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 29 டிசம்பர், 2018

பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம் 

https://youtu.be/dZSehS9TIHk

இரண்டு கிரகங்கள் தத்தமது வீடுகளை exchange செய்து கொண்டு இருப்பது.
இதனால் இரண்டும் ஆட்சி பெற்ற பலத்தை பெரும்.
இதை ராசியில் மட்டும் பார்ப்பது சிறந்தது.

நல்ல பரிவர்த்தனை நல்ல யோகம் தரும்.
லக்கினாதிபதியுடன் 2, 3, 4, 5, 9, 10 போன்றவர்களின் பரிவர்த்தனை யோகம் தரும்.
இது போல நல்ல இடங்களின் அதிபதிகள் பரிவர்த்தனை யோகம் தரும்.

கூடாத பரிவர்த்தனைகள்:
1&12 = துர்பாக்கியம், ஊர் பகை
1&6 = வியாதி 
2&12 = வறுமை.
5&6 =  சுகம் தராத குழந்தைகள்.
7&8 =  சுகம் தராத மனைவி.

https://youtu.be/dZSehS9TIHk



சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

WhatsApp No. 9443540743


Youtube: Astro Bala Vellore




கேந்திராதிபத்ய தோஷம்.

கேந்திராதிபத்ய தோஷம்.   
 

கேந்திரம்= Assembling place..
இந்த இடங்களில் அமைதியையும் நிஜ சந்தோஷத்தையும் விரும்பக்கூடியவர்கள் இருக்க விருப்பம் இருக்காது.
அந்த வகையில், சுக்ரன்.. இவர் காரகங்களில் உயிர் காரகமான களத்திரம் ஏற்ற இடம் வீடு.. எனவே இவர் இரண்டில், நான்கில், ஐந்தில், ஒன்பதில், இருப்பது சந்தோசத்தை கூட்டும். இவருக்கு இந்த கேந்திரங்களான 7, 10 பிரச்சனைகளை தான் தரும்.
இதே போல புதன்.. அறிவு பூர்வமான சிந்தனைகளை வைக்க அதற்கென்று இருக்கக்கூடிய இடம் தான் சிறந்தது. நம் வீட்டில் கூட பிள்ளைகளை, ஹாலில் படிக்க வேண்டாம், சத்தம் உண்டு, தனிமையான இடத்தில் போய் படிக்கவும் என்கிறோம்... இதனால் சந்தடி நிறைந்த இடமான கேந்திரங்கள் புதனுக்கு அறிவை விருத்தி செய்ய இயலாது... எனவே இவருக்கு இந்த கேந்திரங்களில் இருக்கும்போது படிப்பு குறையலாம், ஆனால் காசு சம்பாதிப்பதில் கவனம் போகும்.
அதிக சுபர் என்கிற குரு, அலாதியான அமைதியே ஆனந்தத்தை தரும் என்பதால் குரு என்பவர்கள் எங்கோ ஆளாரவம் அற்ற இடங்களை தேர்வு செய்வதால், கேந்திரங்கள் சுத்தமாக பிடிப்பது இல்லை.
இது தான் கேந்திராதிபதி தோஷம்.
மேலும் விபரமறிய..

https://youtu.be/ExTlUQIVPJI



செவ்வாய், 18 டிசம்பர், 2018

காதலும் லக்கினமும் lagna and love

காதலும் லக்கினமும் 

லக்ன சுக்ரன் காதலுடன் காமம்.
லக்ன குரு அடக்கிவைக்கப்பட்ட காமம்.
லக்ன ராகு கண் பட்டாலே காமம்.
லக்ன கேது காதூரத்தில் காமம்.
லக்ன செவ்வாய் கம்பங்கொல்லையில் காட்டெருமை காமம்.
லக்ன புதன் காதலே ஒரு காமம்.
லக்ன சனி சகதியில் கால் இடறி விழ்ந்த காமம்.
லக்ன சந்திரன் ஆவேசம் பேசினாலும் ஆறிப்போன காமம்.
லக்ன சூரியன் காலம் பார்த்து கால்வைத்தாலும் ரன்அவுட்.
💞
ராகு குழுவின் காதலை மட்டும் மேலும் அறிய
இதை கிளிக் செய்யவும்..

👇🏼
https://youtu.be/SjO76r3HqNo

சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

WhatsApp No. 9443540743


Youtube: Astro Bala Vellore



சன்னியாசி ஜாதக அமைப்பு Samiyaar Horoscope

சன்னியாசி ஜாதக அமைப்பு

இல்லற சந்நியாசியின் 
ஜாதகத்தில் சந்நியாசி யோகம் இருந்து குடும்ப ஸ்தானம் பலப்பட்டு இருக்கும். குடும்பதிபதியோ அல்லது குடும்ப ஸ்தானத்தையோ குரு பார்வை பட்டு இருக்கும்.

சன்னியாசி ஜாதக அமைப்பு..

சனி & கேது சம்பந்தம் 
 சனி 7இல் & 8-இல் ராகு 
 12க்கு செவ்வாய் & சனி பார்வை.
ஒரு ராசியில் நான்கு கிரகங்களுக்கு மேல் அமர்ந்து அங்கு ராகுகேது சேராமலும், கிரகங்கள் அஸ்தமன தோஷம் பெறாமலும் இருப்பின் சந்நியாசியே.

இந்த மேலே உள்ள அமைப்பு கேந்திர கோணங்களில் அமைந்து விட்டால் அவர் தான் பேமஸ் சாமியார்.

மேலும் பல தகவல்கள் அறிய..   https://youtu.be/y8sHZGEG03s


சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.


WhatsApp No. 9443540743


Youtube: Astro Bala Vellore

திருக் பலம் Drik Palam

திருக் பலம்.. அதாவது திருஷ்டி... பார்வை பலம்...

உள்வட்ட கிரகங்களான சூரி, புத, சுக், சந் போன்றவர்களுக்கு ஒரே பார்வையான சப்தம பார்வை மட்டும்.
வெளிவட்ட கிரகங்களுக்கு மட்டுமே கூடுதலாக ஷ்பெஷல் பார்வைகள் உள்ளது.
அதனால் தான் உள்வட்ட கிரக பார்வைகளின் பலத்ததை விட வெளிவட்ட கிரகங்களான செவ், குரு, சனி போன்றவற்றின் பார்வைகளுக்கு பலம் அதிகம்.
அதிலும், சப்தம பார்வைகளை விட ஸ்பெஷல் பார்வைகளுக்கு கூடுதல் பலம் உண்டு.
சனியின் பார்வை அதிக பலம் பொருந்தி இருந்தாலும் சனி பார்த்த ஒரு ராசியை குருவும் தனது ஸ்பெஷல் பார்வையால் பார்த்து விட்டால் அந்த பாவம் எப்படியும் வளர்ச்சி பெற்று விடும்.
சனி & செவ் இருவரும் ஒரு பாவத்தை நோட்டமிட்டால் அந்த பாவம், குருவும் பார்க்காமல் போனால் அந்த பாவகாரகத்துவங்கள் அந்த ஜாதகருக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.
ராகு கேதுவிற்கு 3-7-11 பார்வை உண்டு என பல கருத்து நிலவினாலும், இவர்களுக்கு ஸ்தானபலம் மட்டுமே உள்ளது என்றும் பார்வைபலம் இல்லை என்பதே எனது கருத்து.
சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

WhatsApp No. 9443540743


Youtube: Astro Bala Vellore




கேந்திரங்கள் kenthirangal

கேந்திரங்கள் 

பணம்-மனைவி-சுகம் 
தொழில்-களத்திரம்-செளகரியம்
10-7-4
ஜாதகபடி அறிவது எப்படி..?
கேந்திரங்கள்.. Square

உத்தியோகம் புருஷ லட்சணம்.
மனைவி உள்ள வரை சாப்பாடு துணி  பஞ்சமில்லை

ஆக, பணமும் தொழிலும் இருப்பின் களத்திர சுகமான கணவன் மனைவி உறவு தானாக அமையும்.

சுகம் தரும் மனைவி அமைந்து விட்டால் நேரத்திற்கு செளகரியம் கியாரன்டி.

இம்மூன்றும் அமைந்துவிட்டால் லக்னம் அதாவது ஜாதகர் வாழ்க்கை தொடர்ந்து ஓடும்.

பத்தாவது கேந்திரமான ஜீவன ஸ்தானம் பலம் பெற்றால் ஏழாமிடமான களத்திர பாவம் பலம் பெறும்.
ஏழாமிடம் பலம் பெற்றால் வீடு சுகம் வாகன பாவமான நாலமிடம் தானாக பலமாகிவிடும்.

இந்த 10-7-4 மூன்று கேந்திரங்களும் பலம் பெற்று விட்டால் ஜாதகர் குஷி தான்.

மேலும் விபரமறிய... இதை கிளிக் செய்யவும்..




https://youtu.be/ZKiooccEytw



சித்தாந்த ரத்னாஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

WhatsApp No. 9443540743




Youtube : Astro Bala Vellore 
 https://www.youtube.com/channel/UCITKVO5Tc99EMCw8KCIiqjw