மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

தித்திக்கும் திருமண வாழ்வு - SWEET MARRIED LIFE

SWEET MARRIED LIFE


தித்திக்கும் திருமண வாழ்வு



தித்திக்கும் திருமண வாழ்வு

                            திருமணம் என்கின்ற திருப்பு முனையில் நிற்கும் ஒவ்வொரு இளைஞனும் இளைஞ்சியும் தனக்கு வரும் திருமண துணையை பற்றி கனவு காண்கிண்றனர். நல்ல அழகுடன் தங்களை புரிந்து நடக்கும் பெண் தேவை என்று எல்லோரும் எதிர்பார்கிறார்கள் ஆனால் இயற்கையில் ஒரு சிலருக்கு மட்டுமே அவரவர் ஜென்மஜாதக அடிப்படையில் எதிர்பார்த்த படியே   கடவுள் தருகிறார். பலர் பேர்கள் திருமண வாழ்வில் தித்திப்பு இல்லை, நிறைய பேர்கள் வாழ்வில் தித்திப்புக்கு பதில் எட்டிக் கசப்பே மிஞ்சுகிறது.
                 பொதுவாக பெண்ணோ ஆணோ தன் ராசிக்கு 5 அல்லது 9 ஆவது ராசியில் பிறப்பவரை மணப்பது உடல் பொருந்தம் இருக்கோ இல்லையோ மனம் பொருத்தம் கண்டிப்பாக இருக்கும்.  இவர்கள் மானசீகமாக மனதுக்குள் ஒருவரை ஒருவர் காதலித்து கொண்டே வாழ்வார்கள். இந்த இருவரின் எண்ண அலைகள் ஒரே பாதையில் செல்வதற்கு காரணம் அவரவர் ஜென்ம சந்திரன் திரிகோண ராசிகளாக வருவதே காரணம்.
            திருமண தாம்பத்திய  வாழ்வில் கணவனை மனைவி விட்டுக் கொடுக்காமலும், மனைவியை கணவன் விட்டுக் கொடுக்காமலும், எங்கு சென்றாலும் இணை பிரியாமலும் கைக்கோர்த்தபடி செல்வதருக்குரிய ஜாதக அமைப்பு என்னவென்றால் அவரவர் லக்னாதிபதி   தத்தம் ஏழாம் அதிபதியுடன் இணைந்து இருப்பதே காரணம். இந்த 1 & 7 அதிபதிகள் இணைப்பை சுபர்கள் பார்த்தால் கேட்கவே வேண்டாம், இவர்கள் வாழும் பகுதியில் இவர்கள் ஒரு IDEAL COUPLE என்று பெயர் எடுப்பார்கள்.
           ஏழாம் அதிபதியோ அல்லது சுகரனோ ஆட்சி பெற்று இருப்பின் குடும்பத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மனைவி வந்தவுடன் பெற்று கொள்வாள்.
           ஏழாம் அதிபதி சுப கிரகமாக இருந்து, சுபர் பார்வை பெற்று லக்னத்திற்கு சுக ஸ்தானமான நாலாம் வீட்டில் நின்றால் கணவனுடைய சுகங்களுக்கு எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாமல் பார்த்து கொள்வாள். நல்ல சுவையான உணவுகளை உடம்பு ஏற்றுகொள்வதற்கு ஏற்ற படி சமைப்பாள்.சுருங்க கூறின் ஒரு தாய் எப்படி மகனுக்கு உணவு படைப்பளோ அப்படி செய்வாள்.
            ஏழு, எட்டு இடங்கள் சுத்தமக இருந்து, ஏழாம் இடத்தை ஒன்பதாம் அதிபதி பார்த்தாலும், அல்லது, சுப கிரகங்களில் குரு சுக்ரன் பார்த்தாலும் வாழ்வில் எபோதும் தித்திப்பு இல்லை என்றாலும், கசப்பு இல்லாமல் வாழ்க்கை ஓடும்.
            எழம்மாதி சுப அம்சம் பெறாவிட்டாலும், இரண்டாம் வீட்டை சுபகிரகம் பார்த்து விட்டால் மனைவியும் கணவனும் தித்திப்பில் திளைக்காவிட்டலும் வெளி உலகத்திற்கு நல்ல தம்பதியர்கள் போல் தெரிவார்கள்.

 composed by Jothidamamani M.Balasubramanian, Founder, VARA, Vellore


( மனைவி ஒரு மண்டை இடியா  ? - இந்த கட்டுரையை விரைவில் எதிர்பாருங்கள்.)

 

சனி, 22 டிசம்பர், 2012

WONDERS IN SIXTH BHAVA . ! ஆறாம் பாவத்தின் அதிசயங்கள்

 
 

WONDERS IN SIXTH BHAVA . !

 

ஆறாம் பாவத்தின் அதிசயங்கள் 


An article written by

Jothidamamani M.Balasubramanian,M.A.,
Founder, VARA, Vellore-2,
Scan copy published for the sake of Astrologers and person interested in Astrology.




வியாழன், 20 டிசம்பர், 2012

குரு பலம் இல்லாமல் திருமணமா?

 
Guru Palam is need for marriage ?
 
குரு பலம் இல்லாமல் திருமணமா? 


An article written by
 Jothidamamani M.Balasubramanian,M.A.,
Founder, VARA, Vellore-2,
in Gnanasinthamani Jothida magazine in tamil in month of  November 2004, in page 64.
Scan copy published for the sake of Astrologers and persons interested in Astrology.
 
 
 
குரு பலம் இல்லாமல் திருமணமா?
  

செவ்வாய், 18 டிசம்பர், 2012

Photos Free Camp & Jothidar Meeting 16-12-2012


வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம், வேலூர்-2
நடத்திய
இலவச ஜோதிட முகாம் மற்றும் ஜோதிட கருத்தரங்கம் 

புகை படங்கள் மற்றும் கருத்துகள்
 
நாள்: 16-12-2012
இடம்:

மகளிர் மன்றம், Auxilium College Road, காந்தி நகர், வேலூர்-6.

 

ஜோதிட ஸ்ரீ S. வெங்கடேசன், செயலாளர் வரவேற்புரை வாசிக்கிறார் .

 
வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைக்கிறார்.

 
 

 

ஜோதிட சிகரம் Prof. K. சண்முகம்,சங்க தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினர் வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்களுக்கு மாலை அணிவித்து கெளரவிக்கிறார்.


 

         சைவ சித்தாந்த ரத்னா, ஜோதிட மாமணி , பஞ்சாங்க கணிதர்..            M. பாலசுப்ரமனியன், M.A., சங்க நிறுவனர் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார்.



 
சங்க தலைவர் Prof. K. சண்முகம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்துகிறார்.



 
சங்க நிறுவனர் M. பாலசுப்ரமனியன், அவர்கள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி விவரிக்கிறார்.

 
விழாவின் சிறப்பு விருந்தினர் வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்.


 
விழாவின் சிறப்பு விருந்தினர் வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்கள்  முதல் இலவச ஜோதிட சேவையை துவக்கி வைக்கிறார். 

 
ஜோதிடஸ்ரீ D.சத்தீஸ்வரி அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.



ஜோதிட வித்தகர் R. ஜெயராதே, B.A. (Astro),  சங்க துணைத் தலைவர் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.



ஜோதிட ஸ்ரீ R. ரவி ராஜன் துணைச் செயலாளர் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.


 
நமது சங்க நிறுவனர் அவர்கள் ஜோதிடர் கலைச்செல்வன் அவர்களிடம் உரையாடுகிறார்.
 

 
ஜோதிட ஸ்ரீ மேரு மதிவாணன் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.

 
நமது சங்க நிறுவனர் அவர்கள் ஜோதிடர் கலைச்செல்வன்  மற்றும் 
ஜோதிட சிகரம் D. ரவிக்குமார், D.A. (Astro), சங்க சிறப்பு செயலாளர்
அவர்களிடம் உரையாடுகிறார்.


 

ஜோதிடஸ்ரீ கெஜவல்லி, செயற்குழு உறுப்பினர் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.


 
சங்க தலைவர் Prof. K. சண்முகம் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.





 
சங்க ஜோதிடர் சரவணா அமிர்தம் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.

 
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் ஜோதிடர் J. பழனிச்சாமி அவர்கள்  இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.



பிற்பகல் கருத்தரங்கை தலைவர் Prof. K. சண்முகம் அவர்கள் துவக்கி
உரை யாற்றுகிறார்.
 
பிற்பகல் கருத்தரங்கில் சங்க நிறுவனர் M. பாலசுப்ரமனியன், அவர்கள்  ஜோதிடர்களை வரவேற்று 
உரை யாற்றுகிறார்.







 

ஜோதிடர் D. சிவலிங்கம் சங்க கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் ஜோதிடமும் தொலை தொடர்பும் என்ற தலைப்பில் பேசுகிறார்.







ஜோதிட ஸ்ரீ R. ரவி ராஜன் துணைச் செயலாளர் அவர்கள்
ஜோதிட சூட்சுமங்களை பற்றி பேசுகிறார்.





 





 

ஜோதிட ஸ்ரீ M. சுரேஷ் பாபு,M .A , துணைச் செயலாளர் ஜோதிடத்தில் சுவையை அறிவது பற்றி பேசுகிறார்.


 

ஜோதிடஸ்ரீ D.சத்தீஸ்வரி, செயற்குழு உறுப்பினர் அவர்கள் குஜனும் திருமண வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசுகிறார்.





ஜோதிடஸ்ரீ ஈஸ்வரையா, செயற்குழு உறுப்பினர் அவர்கள்
பக்கத்து வீட்டை பார்க்கும் ஜாதகம்
என்ற தலைப்பில் நகைசசுவையுடன் பேசுகிறார்.

 

ஜோதிடஸ்ரீ கெஜவல்லி, செயற்குழு உறுப்பினர் அவர்கள் 
பயமில்ல ஜாதகர் நிலை
பற்றி பயமில்லாமல் பேசுகிறார்.

 
 

ஜோதிடஸ்ரீ S. வெங்கடேசன், B .A  செயலாளர் அவர்கள்
தண்ட செலவு செய்பவர் யார் யார்
என்ற தலைப்பில் விரைய பாவத்தை பற்றி பேசுகிறார்.



ஜோதிட சிகரம் D. ரவிக்குமார், D.A. (Astro), சங்க சிறப்பு செயலாளர்
அவர்கள்  கிரகமும் மின் வெட்டும் என்ற தலைப்பில் கிரகங்கள் சக்தி குறைவதே 
அவரவர் ஜாதகத்தில் மின் வெட்டு என்று பேசுகிறார்.
 உரையாடுகிறார்.


காஞ்சிபுரம் ஜோதிடசிகரம் வடிவேலு அவர்கள்
திருமண பொருத்தத்தில் யோனி பொருத்தம்
சிறந்தது என்றும் நட்சத்ர யோனி மிருகமும், லக்னம் நின்ற நட்சத்ர மிருகமும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஒரு புதிய கருத்தை ஜோதிடர்களின்  முன் ஆய்வுக்கு வைத்து பேசினார்.
 
காட்பாடி விஜி ராவ் நகர் ஜோதிடர் ஜோதிடபாரதி P.T. சுப்பிரமணி அவர்கள் ஜோதிட இரகசியங்களை பேசுகிறார்.





 

ஜோதிட பாரதி B .செந்தில் வேலன் அவர்கள் துல்லிய கணக்கே பலன் சொல்லும் என்று ஜாதக கணக்கிற்கு முக்கிய துவம் தர வேண்டும் என்று பேசுகிறார்.











                         ஜோதிடபாரதி குமரகுரு அவர்கள் ஜோதிட ஆராய்ச்சி அதிமாக செய்ய வேண்டும் என்றும் இதற்கு ஜோதிடர்கள் தாங்களாகவே முன் வரவேண்டும் என்றும் இதற்கு ஆகும் செலவிற்கு முதலில் பணம் நான் தருகிறேன் என்று ஜோதிடர்களை துல்ல செய்து பேசினார்.

 
இறுதியாக காட்பாடி மதி நகர், (திருநகர் அருகில்)
ஜோதிடபாரதி S . அருண் பாலாஜி அவர்கள் பேசுகிறார்.
 
 
விழாவின் இறுதியில்  வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்
 
சார்பாக 2013 ஆண்டு காலண்டர்களை வந்திருந்த ஜோதிடர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பிறகு  ஜோதிடஸ்ரீ R. சாமு பொருளாளர் அவர்கள் நன்றி நவின்றார். நட்டு பண்ணுடன் விழா இனிது நிறைவுற்றது.
 
விழாவின் முழு பொறுப்புகளை கவனித்து வந்த நமது 
 
சங்க செயலர் S. வெங்கடேசன்
 
அவர்களையும்,
 அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட சங்க துணைசெயலாளர்
 
ஜோதிடசிகரம் S. ஆறுமுகம்
 
அவர்களையும் சங்க நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பாராட்டினார்கள்.