மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 17 நவம்பர், 2012

காதல்--> கலப்பு திருமணம் Love--> Intercaste Marriage


 

காதலால்
பெருகிவரும் கலப்பு திருமணங்கள்.
ஒருதலைமுறைக்கு முன்னர் காதல் திருமணம் எனபது ஆயிரத்தில் ஒன்று என்று இருந்தது. கடந்தபத்து ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணங்களும் சமுதாயத்தில் சாதாரணமாக நடக்கிறது என்றும் இது ஏறக்குறைய 10 முதல்15 % க்குள் இருந்தது. தற்போது, குறிப்பாக கடந்த ஒன்டரை வருடமாக இது மிகவேகமாக பரவி 40 முதல் 45 % வரைவளர்ந்து உள்ளது. அதுவும் நகரங்களில் படித்தவர்களிடம் அதுவும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் வேலைசெய்யும் ஆண் பெண்களிடம் அதிகம் உள்ளது. இக்காலங்களில் காதல் திருமணம் மட்டும் அல்லாமல் கலப்பு திருமணமாகவும் அமைகிறது.
இதற்கு ஜோதிடம் ரீதியிலும் காரணங்கள் பலமாக உள்ளது. கடந்த ஒன்டரை வருடமாக போக காரகன் என்கின்ற ராகு தனது உச்ச ராசியில் இருப்பதே. ராகு விருச்சிக ராசியில் அதிஉச்சம் பெறுவதாலும், இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்த சனிபகவானின் மூன்றாவது விசேஷ பார்வை விருச்சிக ராசியில் படுகிறது. எனவே கண்டதும் காதல் என்கின்ற முறையில் வெளித் தோற்றத்தை பார்த்து மயங்கி விழுவதே ஆகும். கடந்த ஆறு மாதங்களாக சனி பகவான் துலா ராசியில் சஞ்சரிப்பதால் ஏற்கனேவே போட்ட திட்டங்கள் படி மிக விரைவாக கலப்பு திருமணங்கள் நிகழ்கின்றது. குரு ரிஷப ராசியில் இருந்து பார்ப்பதால் இப்படிப்பட்ட திருமணங்கள் பெற்றோர்களின் வெளி சம்மதத்தின் பேரில்  நடந்து கொண்டு இருகின்றது.
 இந்த சுழ்நிலை வருகிற 23 டிசம்பர் 2012 வரை தொடரும். அதற்கு பிறகு ராகு துலா ராசியில் புகுவதாலும், அங்கு ஏற்கனேவே சனி பகவான் கொடி கட்டி பறப்பதால் இதுமாதிரி காதலால் ஏற்பட்ட கலப்பு திருமணங்கள் வெகு ஜோராக நடக்கும். இதில் ஒரு மாற்றம் என்னவென்றல் குரு பார்வை ராகுவிற்கு இல்லாததால் பெற்றோர்களின் சம்மதம் கேட்காமல் யாருக்கும் தெரியாமல் சொல்லப்போனால் சில தீய நண்பர்கள் முன்னிலையில் திருமணங்கள் பதிவு அலுவலகங்களில் நடந்தேறும். வருகிற ஜூன் 2013 க்கு பிறகு குரு பார்வை சனிக்கும் ராகுவிற்கும் கிடைப்பதால் தகராறு ஏற்பட்டு காவல் நிலையங்களில் பெற்றோர்கள் எதிரில் திருமணங்கள் நடக்கும்.
ஜூலை 2014 க்கு பிறகு, காதலாவது கத்திரிக்காயாவது என்று பேசுவார்கள். காதல் திருமணங்கள் வெகுவாக குறையும். காரணம் ராகு உண்மையில் ஜனங்களுக்கு சில நன்மைகள் செய்யும் இடமான கன்னி ராசிக்கு பிரவேசம் ஆகிறார். அப்போது காதல் மலரும், ஆனால் அது திருமணத்திற்கு வழி அதிகம் வகுக்காது. காதலர்கள் பணம் சம்பாதிப்பதற்காக பெரும் பகுதி நேரங்களை செலவு செய்வார்கள். அந்த காலங்களில் ராகுவிற்கு சப்தமத்தில் இருக்கும் ஞான காரகனான கேதுவை உச்ச குரு பார்ப்பதால் நாட்டில் ஆன்மிகம் தழைத்து ஓங்கும். அவ்வமயம் குலவழக்கு படி திருமணங்கள் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனும் உண்மையான ஆன்மிக குருமார்களின் வழி காட்டுதலின் படியும் திருமணங்கள் நடைபெறும். மேலும் இந்த காலகட்டங்களில் சத்புத்திரர்கள் தோன்றுவார்கள். ராகு 2016 இல் சிம்ம ராசி க்கு போவதால் காதல் மலரும் முன்னே கசந்து விடும். ஆக இது போன்ற மாற்றங்கள் கால  புருஷ தத்துவ படி இயக்கப்படுகிறது.
Composed by Jothidamamani M.Balasubramanian, Founder, VARA, Vellore.
 


6 கருத்துகள்:

  1. 2014 க்கு பின்னர் காதல் திருமணம் இருக்காதா காதலர்கள் யோசிக்க வேண்டியது

    பதிலளிநீக்கு
  2. அய்யா இனிய காலை வணக்கம்!!!!

    தங்களின் புதிய பதிவுகள் கிடைக்க பெற்றோம் .

    உங்களின் தொடர்பு தாமதமாக கிடைத்துள்ளது .

    கலப்பு திருமணங்கள் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ள வகையில்

    அமைந்தது .குழந்தை பாக்கியம் , செவ்வாய் தோஷம் கட்டுரை மிக

    துல்லியமாகவும் அனுபவ நடைமுறையிலும் மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள் .

    என்னுடைய சந்தேகங்களுக்கு உங்கள் கட்டுரைகள் நல்ல விளக்கம் தந்தது .

    உங்கள் பதிவுகளை அன்புடன் வரவேற்கிறேன் .

    என்றும் மறவாத அன்புடன்

    சோம பழனியப்பன்

    மஸ்கட்

    பதிலளிநீக்கு
  3. ராகுவைப்பற்றி புதிய கோனத்தில் புதிய செய்திகள், நல்ல அலசல் நன்றிகள் அய்யா
    -Thanusu

    பதிலளிநீக்கு
  4. Really the information given on the following heading is 100% true.





    காதலால் பெருகி வரும் கலப்பு திருமணங்கள் - ஓர் ஆய்வு கட்டுரை




    Just keep on praying the god, to continue and live life peacefully. May god bless all the sufferers.




    Thanks for your service.



    Regards,
    Subramanian G

    பதிலளிநீக்கு
  5. thanks for your daily messages. i and my friend is join your jothida class @postal via. please send details in my mail id : kgbkalin@gmil.com

    பதிலளிநீக்கு