மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 4 மே, 2013

மாந்தி உதயமாகும் நேரம். Maanthi raising Sign

மாந்தி உதயமாகும் நேரம்.



                  மாந்தி என்கின்ற குளிகன் ஒவ்வொரு நாளும் கிழமையை பொறுத்து வானவீதியில் உதயமாவதாக கூறப்படுகிறது.அந்த நாழிகையில் கிழ்வானத்தில் உதயமாகும் லக்னம் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியில் மாந்தி நிற்பதாக கூறப்படுகிறது.
                   உதாரணம் திங்கட்கிழமை ஒரு குழந்தை பகலில் பிறந்ததாக கருதினால், அன்று பகல் 22 நாழிகைக்கு மாந்தி கிழ்வானத்தில் உதயமவதாக கருதபடுகிறது. அந்த 22 நாழிகையை உதயாதி நாழிகை போல் பாவித்தால் எப்படி லக்னம் நின்ற ராசி அமைப்போமோ அந்த விதமாகவே குளிகன் @ மாந்தி நின்ற ராசியை காணவேண்டும்.
               மாந்தி ஒவ்வொரு கிழமையும், பகலில் ஒரு நேரத்திலும், இரவில் ஒரு நேரத்திலும் உதயமாகிறார். அதர்கூரிய அட்டவணை உள்ளது. அதன் படி பார்த்து நாம் கணக்கிட வேண்டும்.
கிழமை.
பகல் அல்லது இரவு
உதயமாகும் நாழிகை.
 
ஞாயிறு
பகல்
26
இரவு
10
 
திங்கள்
பகல்
22
இரவு
6
செவ்வாய்
பகல்
18
இரவு
2
 
புதன்
பகல்
14
இரவு
16
 
வியாழன்
பகல்
10
இரவு
22
 
வெள்ளி
பகல்
6
இரவு
18
 
சனி
பகல்
2
இரவு
14


            
                      இரவு நாழிகை கணக்கு போட வேண்டுமாயின் கொடுக்கப்பட்ட நாழிகையுடன் அன்றைய அகஸ் பொழுதை கூட்டிக்கொள்ள வேண்டும்.  மாநதியின் உதயத்தை பார்ப்பது போலவே, எமகண்டன்,அர்த்தபிரகரணன், காலன் போன்றவர்களின் உதய அட்டவணை உள்ளது.
அன்புடன்,

 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.

 

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.




====================================================================================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக