மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 15 ஆகஸ்ட், 2013
புதன், 14 ஆகஸ்ட், 2013
ஆய கலைகள் அறுபத்து நான்கு 64 arts
ஆய கலைகள் அறுபத்து நான்கு
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்
3. கணிதம்;2. எழுத்தாற்றல் (லிபிதம்
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
====================================================================================================
மரணம் எப்பொழுது ? when death?
மரணம் எப்பொழுது சம்பவிக்கின்றது?
ஜோதிடப்படி மரணம் எப்பொழுது சம்பவிக்கின்றது? இதற்கு விடை பெரும்பாலும் ஜோதிடர்கள் சொல்லுவது கிடையாது. காரணம் பிறப்பும் இறப்பும் இறைவன் கையில். உண்மைதான். இருந்தாலும் தோராயமாக சொல்லமுடியும்.
ஒரு மனிதன் எப்பொழுது நிம்மதியாக இருக்கின்றான் என பாருங்கள். உதரணமாக பாதகாதிபதி தசை நடகின்றது அப்பொழுது அவனுக்கு பாதகமான செயல்கள் நடக்கும். அவனை அதிகம் துன்பபட வைக்கும். அந்த நேரத்தில் மரணம் சம்பவித்தால் அவன் துன்பத்தில் இருந்து விடுதலை பெற்றுவிடுவான் என்பதால் இந்த காலங்களில் பெரும்பாலும் மரணம் சம்பவிக்காது, ஆனால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் வரும்.
ஒரு மனிதன் எப்பொழுது நிம்மதியாக இருக்கின்றான் என பாருங்கள். உதரணமாக பாதகாதிபதி தசை நடகின்றது அப்பொழுது அவனுக்கு பாதகமான செயல்கள் நடக்கும். அவனை அதிகம் துன்பபட வைக்கும். அந்த நேரத்தில் மரணம் சம்பவித்தால் அவன் துன்பத்தில் இருந்து விடுதலை பெற்றுவிடுவான் என்பதால் இந்த காலங்களில் பெரும்பாலும் மரணம் சம்பவிக்காது, ஆனால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் வரும்.
இதே போல் பார்த்தால் மாரகாதிபதி தசை எப்படி இருக்கும்? இந்த தசையில் மாரகத்தை தருவானா என்றால், ஆராய்ச்சி செய்த ஜாதகங்களை பார்க்கும் பொழுது அப்பொழுதும் மரணம் அதிகம் சம்பவிப்பதில்லை. காரணம், இக்காலங்களிலும் மரணமே பரவாயில்லை, இறைவனே இந்த நரக வேதனையில் இருந்து காப்பாத்து அல்லது உயிரை எடுத்து கொள் என்று பல பேர் கூற கேட்டு இருப்பிர்கள். அப்படி பார்த்தால் மரணம் எபொழுது தான் வரும் என்ற கேள்வி தோன்றும்.
இதற்கு ஒரு சிறந்த விளக்கத்தை உங்களுக்கு முன் வைக்கின்றேன். ஒருவன் புதிய சட்டையை எப்பொழுது வாங்கி அணிவான்? சந்தோஷமான காலத்தில், அதாவது மகிழ்ச்சி மற்றும் நிம்மதியில் இருக்கும் போது பழைய சட்டையை வீசிவிட்டு புதிய சட்டையை அணிகின்றான்.
இதற்கு ஒரு சிறந்த விளக்கத்தை உங்களுக்கு முன் வைக்கின்றேன். ஒருவன் புதிய சட்டையை எப்பொழுது வாங்கி அணிவான்? சந்தோஷமான காலத்தில், அதாவது மகிழ்ச்சி மற்றும் நிம்மதியில் இருக்கும் போது பழைய சட்டையை வீசிவிட்டு புதிய சட்டையை அணிகின்றான்.
அதே போல் தான், ஒருவனுக்கு யோகாதிபதி தசை நடக்கும் போது, அனைத்து வசதிகளும் வந்து சேரும். இந்த காலங்களில் அவனுடைய ஜென்ம ஜாதகபடி ஆயுள் பரியந்தம் கணக்கு செய்து பார்த்து அந்த காலமும், இந்த காலமும் சேரும் போது கோச்சாரமும் கொஞ்சம் சறுக்கும் போது, மேலும் அவனது பிள்ளையின் கர்ம நேரமும், மனைவியின் மாங்கல்ய காலம் முடியும் நேரமும் அமைந்து இருந்து, இந்த யோகாதிபதி தசையில் அவனவன் லக்னாதிபதி யாரோ அவரது சூட்சும அல்லது ஆதிசுட்சும காலங்களில் புதிய சட்டையை அணிவது போல் மரணத்தை தழுவி, மகிழ்ச்சியாக புதிய பிறவியை எடுக்க முற்படுவான்.
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
செய்திமலர் ஆகஸ்ட் 2013 August- 2013
செய்திமலர் ஆகஸ்ட் 2013
August- 2013
Seithimalar
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
====================================================================================================
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
ஜோதிடத்தில் நண்பர்கள் Friendship
ஜோதிடத்தில் நண்பர்கள்
நண்பர்கள் தினம் 4-8-2013
ஜோதிடரீதியாக நண்பர்களை அறிய அவரவர் ஜென்ம லக்னாதிபதியை அறிய வேண்டும்.
நண்பர்கள் எப்படி ஆகிறார்கள், ஒருவருடைய செயலும் எண்ணமும் மற்றொருவருக்கு
பிடித்தால் நண்பர், அது போலவே, லக்ன கிரகத்திற்கு எந்த கிரகம் நண்பரோ அந்த கிரக
லக்ன மற்றும் ராசிக்காரர்கள் நண்பர்களாக மாறுகிறார்கள். இதே போல் கணவன் கிரகமும்
மனைவி கிரகமும் நண்பர்கள் என்றால் என்றும் இன்பமே, மாறாக இருந்தால் . . . கேட்கவும் வேண்டுமோ? பேஸ் புக் நண்பர்களும்
இப்படி தான் அமைகிறார்கள். பேஸ் புக் நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின
வாழ்த்துக்கள்.
முதல் தர நண்பன் ஒருவனுக்காக ஒருவன் இருப்பது , இது போல் நாம் பார்க்க வேண்டுமானால், ரிஷப லக்ன காரருக்கும், கன்னி லக்ன காரர்களும் இணை பிரியாத நண்பர்களுக்கு எடுத்து காட்டு. இதே போல் துலா லக்னகாரனுக்கு மிதுன லக்னகாரன் இருவருக்குள் நட்பு சிறப்பாக இருக்கும்.
இரண்டாம் தர நட்பு எனபது, நீர் ஓன்று தந்தால் நான் ஒன்று தருவேன், இது போல் நட்பு பாராட்டுபவர்கள் மேஷ லக்ன காரரும், துலா லக்ன காரரும் ஆகும். இதே போல் நீயும் எதுவும் தர வேண்டாம், நானும் எதுவும் தரவேண்டாம் இருந்தாலும் நமது நட்பு சிறப்பாகவே இருக்கும், இது போல் உள்ளவர்கள், விருச்சிக லக்னமும், ரிஷப லக்னகாரனும் ஆகும்.
மூன்றாம் தர நட்புக்கு ஒரு உதாரணம், சிம்ம லக்னமும், கடக லக்னமும். இதில் ஒருவர் ஆதாயத்தையே பார்ப்பார், ஒருவர் அவரிடம் உள்ள மகிழ்ச்சியை பார்ப்பார், அதாவது, சிம்ம லக்ன காரன், கடக லக்ன நபரின் சந்தோசத்திற்கும் அவனது பேச்சிலும் மகிழ்ந்து போவான், ஆனால், கடகமோ, சிம்ம காரானிடம் இருந்து நமக்கு கிடைக்கும் உதவியை பார்ப்பான்.
நாலாம் தர நட்பு சற்று வித்யாசமானது. சிம்ம லக்ன காரனுக்கும் தனுசு லக்ன காரனுக்கும் உள்ள தொடர்பு. சிம்ம லக்ன காரனும் இவனிடம் எதிர்பார்க்கமாட்டான், கொடுத்தால் வாங்கிகொள்வான் . தனுசு லக்ன காராணம் எதையும் எதிர் பார்க்க மாட்டான், கொடுத்தாலும் வ எளிதில் வாங்க மாட்டான். பிகு அதிகம் பண்ணுவான், பிறகு வாங்கிகொள்வான் .
மற்ற லக்ன காரர்கள் நண்பர்களை அவ்வளவு எளிதில் நட்பு பாராட்ட மாட்டார்கள், அப்படியே இருந்தாலும், சிறிது காலம் மட்டும் இவர்கள் நட்பு தொடரும், ஆனால் யாருடனும் அதிகம் பகையும் இருக்காது, அதிக நட்பும் இருக்காது.
மேற்கூறிய உதாரணங்கள் குரு பார்ப்பதாலும், லக்ன த்தில் பாவ கிரகங்கள் இருப்பதாலும் மாறுபட வாய்ப்பும் உள்ளது.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
====================================================================================================
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)