ஜோதிடத்தில் நண்பர்கள்
நண்பர்கள் தினம் 4-8-2013
ஜோதிடரீதியாக நண்பர்களை அறிய அவரவர் ஜென்ம லக்னாதிபதியை அறிய வேண்டும்.
நண்பர்கள் எப்படி ஆகிறார்கள், ஒருவருடைய செயலும் எண்ணமும் மற்றொருவருக்கு
பிடித்தால் நண்பர், அது போலவே, லக்ன கிரகத்திற்கு எந்த கிரகம் நண்பரோ அந்த கிரக
லக்ன மற்றும் ராசிக்காரர்கள் நண்பர்களாக மாறுகிறார்கள். இதே போல் கணவன் கிரகமும்
மனைவி கிரகமும் நண்பர்கள் என்றால் என்றும் இன்பமே, மாறாக இருந்தால் . . . கேட்கவும் வேண்டுமோ? பேஸ் புக் நண்பர்களும்
இப்படி தான் அமைகிறார்கள். பேஸ் புக் நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின
வாழ்த்துக்கள்.
முதல் தர நண்பன் ஒருவனுக்காக ஒருவன் இருப்பது , இது போல் நாம் பார்க்க வேண்டுமானால், ரிஷப லக்ன காரருக்கும், கன்னி லக்ன காரர்களும் இணை பிரியாத நண்பர்களுக்கு எடுத்து காட்டு. இதே போல் துலா லக்னகாரனுக்கு மிதுன லக்னகாரன் இருவருக்குள் நட்பு சிறப்பாக இருக்கும்.
இரண்டாம் தர நட்பு எனபது, நீர் ஓன்று தந்தால் நான் ஒன்று தருவேன், இது போல் நட்பு பாராட்டுபவர்கள் மேஷ லக்ன காரரும், துலா லக்ன காரரும் ஆகும். இதே போல் நீயும் எதுவும் தர வேண்டாம், நானும் எதுவும் தரவேண்டாம் இருந்தாலும் நமது நட்பு சிறப்பாகவே இருக்கும், இது போல் உள்ளவர்கள், விருச்சிக லக்னமும், ரிஷப லக்னகாரனும் ஆகும்.
மூன்றாம் தர நட்புக்கு ஒரு உதாரணம், சிம்ம லக்னமும், கடக லக்னமும். இதில் ஒருவர் ஆதாயத்தையே பார்ப்பார், ஒருவர் அவரிடம் உள்ள மகிழ்ச்சியை பார்ப்பார், அதாவது, சிம்ம லக்ன காரன், கடக லக்ன நபரின் சந்தோசத்திற்கும் அவனது பேச்சிலும் மகிழ்ந்து போவான், ஆனால், கடகமோ, சிம்ம காரானிடம் இருந்து நமக்கு கிடைக்கும் உதவியை பார்ப்பான்.
நாலாம் தர நட்பு சற்று வித்யாசமானது. சிம்ம லக்ன காரனுக்கும் தனுசு லக்ன காரனுக்கும் உள்ள தொடர்பு. சிம்ம லக்ன காரனும் இவனிடம் எதிர்பார்க்கமாட்டான், கொடுத்தால் வாங்கிகொள்வான் . தனுசு லக்ன காராணம் எதையும் எதிர் பார்க்க மாட்டான், கொடுத்தாலும் வ எளிதில் வாங்க மாட்டான். பிகு அதிகம் பண்ணுவான், பிறகு வாங்கிகொள்வான் .
மற்ற லக்ன காரர்கள் நண்பர்களை அவ்வளவு எளிதில் நட்பு பாராட்ட மாட்டார்கள், அப்படியே இருந்தாலும், சிறிது காலம் மட்டும் இவர்கள் நட்பு தொடரும், ஆனால் யாருடனும் அதிகம் பகையும் இருக்காது, அதிக நட்பும் இருக்காது.
மேற்கூறிய உதாரணங்கள் குரு பார்ப்பதாலும், லக்ன த்தில் பாவ கிரகங்கள் இருப்பதாலும் மாறுபட வாய்ப்பும் உள்ளது.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
====================================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக