மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 29 டிசம்பர், 2014
செவ்வாய், 9 டிசம்பர், 2014
ஏழரை சனி மூன்று சுற்றுக்கள் Seven and half Sani
ஏழரை சனி சுற்றுக்கள்
மூன்று சுற்றுக்கள்.
ஏழரை
சனி மூன்று சுற்றுக்கள் வரும். மங்கு
சனி, பொங்கு
சனி &
மரணசனி. ஆனால்
இது உண்மை அல்ல என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது உண்மை என்றால் எல்லா மனிதனும் 60 வயது முடிந்தவுடன் மரணத்தை தழுவுகின்றானா...? இல்லையே..! மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் விம்சோத்தாரி முறையில் மனிதனுக்கு 120 வருடங்கள் ஆயுள் என்று கூறுகிறார்கள். இந்த முறையை தான் நமது இந்தியாவில் மட்டுமல்லாது உலகநாடுகளில் உள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் பின்பற்றுகிறார்கள். இதன்படி மனிதனுடைய
ஆயுள் 120 ஆண்டுகள் என்று உறுதியாகின்றது.
நான்கு சுற்றுகள்.
இதில்
முதல் 30 ஆண்டுகள் = மங்கு சனி காலம்.
அடுத்த
30 ஆண்டுகள் = பொங்கு சனி காலம்
அடுத்த
30 ஆண்டுகள் = குங்கு சனி காலம்
கடைசி
30 ஆண்டுகள் = மரண சனி காலம்.
இதன்
விளக்கம் வேண்டுமானால்
மங்குசனி.
மங்கு
சனி என்பது 30 வயதிற்குள் வரும் ஏழரை சனி ஆகும். இந்த காலகட்டத்தில் வரும் கஷ்டமோ
சுகமோ ஜாதகருக்கு தெரியாது. இது அவருடைய தந்தைக்கு தான் தெரியும். எனவே இந்த
காலத்தில் கஷ்டம் இருந்தாலும் அதை சுலபமாக கழித்துவிடமுடியும். இந்த காலகட்டங்களில் தந்தைக்கு பொருளாதார துறையில் ஆரம்பத்தில் கஷ்டங்கள் கொடுத்து முடிக்கும் தருவாயில் தந்தைக்கு பணவிசயங்களில் வளர்ச்சியை தந்துவிடுகிறது. இது கண்கூடு.
பொங்குசனி.
பொங்குசனி
என்பது 30 வயது முதல் 60 வயதுக்குள் வருவது. இதில் பல பொருளாதார மற்றும்
மனகஷ்டங்கள் வந்தவண்ணம் இருக்கும். இருந்தாலும் இதனால் முதலில் பிரச்சனைகள் பல
இருந்தாலும் முடிவில் யோகத்தை செய்வதால் இந்த பொங்குசனி யோகசனியாகவே இருக்கும். இந்த ஏழரை வருடகாலங்களில் தந்தைக்கு நிறைய பிரச்சனைகள் வரலாம். தந்தையின் ஜாதகம் சரியாக இருந்துவிட்டால் இந்த காலகட்டத்தை தந்தை எளிதில் தண்டிவிடுவார்.
குங்கு சனி.
குங்கு
சனி என்பது 60 வயது முதல் 90 வயதுக்குள் வரும் ஏழரை சனி ஆகும். இதில் உடல்
குன்றுவது. அதாவது குறைந்துகொண்டே வருவது. உடலில் சக்திகள் அடுத்தடுத்து குறைந்து
கொண்டே வருவது.
மரணசனி.
மரணசனி
என்பது 90 வயது முதல் 120 வயதுக்குள் வரும் ஏழரை சனி. இந்த காலகட்டத்தில் தான் நம்
முன்னோர்கள் மரணத்தை தழுவினார்கள்.
இன்றைய
உணவுமுறை பழக்கம், சமுதாய மாற்றங்கள், ஒழுக்கமின்மை போன்ற பல்வேறு காரணமாக குங்குசனியும் மரணசனியும்
ஒன்றினைந்து மரணசனி என்ற பெயரில் அழைக்கபடுகிறது.
குறிப்பு: ஜம்பு மகரிஷி வாக்கியம் மூலமும் உரையும் என்ற நூலில் ஆசிரியர் திரு செ.தேவசேனாதிபதி அவர்களின் கூற்றும், ஆசிரியர் புலியூர் பாலு அவர்கள் தான் எழுதிய கோச்சார பலன்கள், பத்திரிகைகளுக்கு ராசிபலன் எழுதுவது எப்படி என்ற தனது நூலில் இந்த நான்கு சுற்றுக்களை பற்றி விபரமாக கூறுகிறார்.
====================================================================
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ
ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
===============================================================================
வியாழன், 27 நவம்பர், 2014
மேஷலக்னமும் துரியோதனனும் Thuriyothana Lagna
மேஷலக்னமும்
துரியோதனனும்
இதிகாசங்களில்
வரும் பாத்திரங்களிலே முதல் இடத்தை பிடிப்பவர் துரியோதனன் என்றால் மிகையாகாது.
காலபுருஷ ராசியின் முதல் ராசியான மேஷமே இவனது லக்னம். துரியனின் வாழ்க்கையின்
பெரும்பங்கு மேஷலக்ன காரனுக்கு ஒத்துவரும். அதில் சில. . .
செவ்வாய்
யுத்தகாரகன் என்பதால் யுத்தம் என்றால் இனிப்பாக மாறியது துரியோதனனுக்கு.
ராஜாக்களுக்கெல்லாம்
ராஜாவாக இருந்தான்.
செவ்வாயின்
ரத்தபாசமான சகோதர பாசம் அதிகம் உள்ளவன் ஆனாலும் இதே சகோதரர்களே மாபெரும் எதிரிகள்.
ரத்தம் சூடேறுவதால் கோபம் இவனது பலவீனம்.
திரிகோனாதிபதி
சூரியன் என்பதால் இவனது புகழ் பரவாத இடமே இல்லை. ஒன்பதாமாதி குரு என்பதால்
இவனுக்காக குருவே ஓடிவந்து காப்பது. குரு துரோனச்சாரி கூடவே இருந்தது.
மேஷலக்னகாரனுக்கு
4 & 9 யோகாதிபதிகள் என்பதால், இவன் உயிர் இருக்கும் வரை அம்மா காந்தாரியும், அப்பா திருடரஷ்ட்ரனும் கூடவே இருந்து பாசமழை பொழிந்தது.
செவ்வாய்க்கு
புதன் எதிரி என்பதால், நயவஞ்சக மாமன் சகுனியின் நஞ்சு, பிற்காலத்தில் அவன் நெஞ்சை உடைத்தது. சனி பாதகாதி என்பதால்
சகுனி வடிவில் சனி.
நண்பனுக்காக
உயிரை தருபவன் மேஷலக்னகாரன், கர்ணனை நண்பனாக்கினான் அவன் என்ன செய்தாலும்
கண்மூடித்தனமாக நம்பியது.
வெளுத்ததெல்லாம்
பால் என்ற எண்ணம் கொண்டவர் மேஷ லக்னகாரர்.
இவரை ஏமாற்றுவது மிக எளிது என்பதால் இவனுக்கு கெட்டபெயரை தந்து மற்றவர்கள்
நல்லவர்களாக தோன்றினர். நம்பி மோசம் போவது.
சூழ்ச்சி என்றால்
தெரியாத இவன் சுழ்ச்சியாலே வஞ்சிக்கபடுகிறான்.
குடும்பாதிபதி சுக்ரன்
என்பதால் பணிவிடையில் குறைவைக்காத பானுமதி மனைவியாக வாய்த்தது. மாரகாதிபதி சுக்ரன்
என்பதால், பெண்ணின் காரணமாக மரணத்தை தழுவுகிறான்.
மரணமே வரும்
என்று தெரிந்தாலும் முன் வைத்த காலை பின்வைக்காமல் இருப்பது.
இப்படி பல
விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்......
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர்
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
=====================================================
புதன், 26 நவம்பர், 2014
விநாயகர் ஜாதகம் Vinayaga Jadhaga
வினை தீர்க்கும் விநாயகர் ஜாதகம்.
லக்னாதிபதி
செவ்வாய் வீரதீர ஸ்தானத்தில் இருந்து யோகாதிபதி குருவின் பார்வையும் படுவதால்
எதிர்த்த அனைவரையும் வெற்றிகொள்ளும் திறமை உள்ளதால் கஜமுகா சூரனை வென்று
வெற்றிக்கொடி நாட்டினார்.
லக்ன கேதுவை குரு பார்ப்பதால்
ஞானத்தின் உச்சானியாக இருந்து, ஓங்காரத்தின்
மொத்த வடிவமாகவே அமைந்த்விட்டார். ஹஸ்த சந்திரன் என்பதால் பொறுமை அமைதிக்கு இவரே காரணமானவர். எழில் களத்திர தோஷமும் சுக்ரன் நீச்சமும் லக்ன உச்ச
கேதுவும் இவருக்கு இல்லறத்தில் நாட்டம் குறைந்தது
.
ஒரு ஜாதகத்தின் இரண்டு கிரகம்
ஆட்சி, ஒரு கிரகம் உச்சம் பெற்றாலே சிறப்பான ஜாதகம். இங்கு
உச்சனை உச்சன் பார்ப்பதால் நீச்ச யோகத்தை பெற்ற குருவும் செவ்வாயும், தான் பெற்ற
நீச்சத்தை வேறொரு ஜோதிடவிதியின் மூலம் தனது உச்ச அந்தஸ்தை தக்கவைத்து கொண்டனர்.
அந்த வேறொரு விதி என்னவென்றால், நீச்சன் நின்ற
ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றால், நீச்சபங்க
ராஜயோக விதிப்படி கன்னியில் நீச்சம் பெற்ற சுக்ரன், புதனின்
உச்சபலத்தால் சுக்ரனின் நீச்சம் நீங்கி அவரும் உச்ச அந்தஸ்தை அடைகிறார். ஒரு
ஜாதகத்தில் ஒருவருக்கு நீச்சம் நீங்கினால் நீச்சம் பெற்ற அனைவருக்கும் நீச்சம்
நீங்கும் என்ற மற்றொரு ஜோதிட விதிப்படி ரிஷபத்தில் நீச்சம் பெற்ற ராகுவிற்கும்
நீச்சம் நீங்குகின்றது.
ஆக, இவரது
ஜாதகத்தில் கேது, செவ்வாய், குரு, புதன், சுக்ரன், ராகு ஆகிய ஆறு கிரகங்கள்
உச்ச அந்தஸ்துடனும், சூரியன் ஆட்சி பெற்றதும் மட்டுமல்லாமல் திக்பலம்
பெற்றதும், சுக ஸ்தானாதிபதி சனி சப்தம கேந்திரத்தில் நின்று
அவரும் திக் பலம் பெறுகிறார். இவரது ஜாதகத்தில் சில குறைகள் இருந்தாலும், அதிக நிறைகள்
உள்ளதாலும், நம் வினைகளை போக்கும் ஞானகாரகனாக விளங்குகிறார் நம்
விநாயகர்.
================================================================
M . பாலசுப்ரமணியன், M .A ,
கௌரவ ஜோதிட
பேராசிரியர்,
சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ,
வேலூர் – 632002
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்
========================================================================
திங்கள், 24 நவம்பர், 2014
குறுக்கு புத்திக்காரன்
குறுக்கு புத்திக்காரன்
நிறைய பேர்
மற்றவர்களை திட்டும் போது கேட்டுஇருப்பீர்கள் அவர் குறுக்கு புத்திக்காரன்.
குறுக்கு என்றால் என்ன நேர் வழி ஓன்று இருக்க குறுக்குவழியில் சென்று விரைவில்
இலக்கை அடைவது. இது நல்லதுதானே என்று எல்லோரும் நினைப்பீர்கள். அவருக்கு நல்லது
தான், ஆனால் சமுதாயத்திற்கு கெட்டது
அல்லவா.
ஜென்ம லக்னத்தில் ராகு நின்றால் மனிதனுக்கு இது போன்ற குறுக்கு புத்தி
வருமாம். லக்னத்தில் ராகு நின்றவர்கள் அசகாய சூரர்களாக இருப்பார்கள். அவர்கள்
எண்ணம் செயல் இரண்டும் ஒன்றே ஆகும். எடுத்தததை எப்பேற்பட்டாவது முடித்து
விடக்கூடிய சக்தி இவர்களிடம் உள்ளது. என்ன குறுக்கு புத்தி காரன் என்ற பெயர்
இவருக்கு ஏற்பட்டுவிடும், அதுவும் இந்த பெயரை இவர்கள் முன்னாலேயே கூறினாலும் இவர்கள் அதைப்பற்றி கவலை
படாமல் வேறு ஏதோ ஒரு குறுக்குவழியில் மனம் சென்று கொண்டுஇருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர்
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
அவசரபுத்திகாரன்.
அவசரபுத்திகாரன்.
லக்னத்தில் செவ்வாய் இருந்தால்
அந்த ஜாதகனை எல்லோரும் அவசரபுத்தி காரன் என்பார்கள். அதுவும் லக்னம் அக்னி ராசியாக
இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் அதிவேக அவசரக்காரன் என்ற பெயரை எடுத்துவிடுவான்.
ஒரு சிலர் இவர்களை அவசரகுடுக்கை என்று கூட கூறுவார்கள்.
செவ்வாய் இயற்கையாகவே
நெருப்பு கிரகம் என்பதால் நெருப்பில் பட்ட அனைத்தும் நல்லது கெட்டது பாராமல் உடனே
(பொறுமையாக இல்லாமல்) கருகி விடுவதால் லக்னத்தில் செவ்வாய் உள்ளவர்கள் நாம் நல்ல
செயல் செய்கிறோமா அல்லது மற்றவர்களுக்கு தீமை செய்கிறோமா என்று கொஞ்சம் கூட
சிந்திக்காமல் தடாலென்று ஒரு காரியத்தை செய்துவிடுவதால் இவர்கள் அவசரபுத்தியும்
அதே நேரத்தில் செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் இவர்களுக்கு ரத்தம் உடனே சூடேறி
கோபக்கனல் வீசும்.
உண்மையில் இவர்கள் மனதில் பட்டவைகளை ஒளிவு மறைவு இன்றி வெளியில்
கொட்டுபவர்கள். இதனால் இவர்களை மற்றவர்கள் அணுகும்போது உஷாராக அணுகுவார்கள் மேலும்
ஒரு சிலர்கள் இவர்களை கொஞ்சம்
ஒதுக்கி கூட வைத்துவிடவும் கூடும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர்
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
மந்தபுத்திகாரன்
மந்தபுத்திகாரன்
லக்னத்தில் மந்தன் என்கின்ற சனி
உடகார்ந்து விட்டால் ஜாதகனுக்கு மந்தம் தட்டும். எதிலும் அவன் மந்தம் என்பார்கள்.
சனி லக்னத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு ஒரு முறை சொன்னால் புரியாமல் பேந்த பேந்த
பார்ப்பார்கள். அதனாலேயே இவர்களை டியுப் லைட் (tubelight)
என்று கூட கூறுவார்கள். இவர்களின் சோம்பல் காரணமாக இவர்கள் தங்கள்
இளவயதில் இலவட்டங்களுக்கே உரிய ரோமிங்-இல் ஈடுபடமாட்டார்கள்.
இவர்களுக்கு ஒரு
வித்தை புரிந்துவிட்டால், அது இவர்களுக்கு சுட்டுபோட்டாலும்
மறக்காது. உண்மையில் இவர்களில் ஒரு சிலர் அசகாய காரியவாதிகள். தங்களது கொள்கையில் அழுத்தம்
உள்ளவர்கள், யாருக்காகவும்
பணிந்து செல்லும் குணம் இவர்களுக்கு கிடையாது. நியாயம் நேர்மை பற்றி இவர்கள்
அதிகம் பேச மாட்டார்கள் ஆனால் இவர்களின் செயல்களில் அது கண்டிப்பாக இருக்கும்.
***************************************************************
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர்
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)