மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 31 ஜூலை, 2014
வியாழன், 24 ஜூலை, 2014
ஆடி அமாவாசை, தை அமாவாசை அர்த்தம் Adi/Thai Amavasai
சூரியனும்
சந்திரனும் ஆடி மாதத்தில் அதாவது கடக ராசியில் சஞ்சரிக்கும் தினமே ஆடி அமாவாசை
திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இது வருகிற 26-7-2014 சனிகிழமை அனுஷ்டிக்கபடுகிறது.
சூரியனும்
சந்திரனும் ஒன்றாக சேரும் நாள் அமாவாசை. அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில்
சந்திரன் வருகிறது மற்றும் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருகிறது. ஜோதிட ரீதியாக
சொல்ல போனால் சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில், ஒரே நட்சத்திரத்தில், ஒரே
பாகையில் ஒன்றாக சேரும் நேரமே அமாவாசை. இது ஒவ்வொருமாதமும் வருகிறது.
இதில் மிக
முக்கியமாக கருதபடுவது நான்கு அமாவாசைகள்.
காலபுருஷ
தத்துவப்படி கேந்திர ராசிகளான கடகம், துலாம், மகரம் & மேஷம் இவைகள் முக்கியமாக
கருதப்படுகிறது. வருஷத்தில் இரண்டு அயனங்கள், அதாவது சூரியன் வடக்கு நோக்கி பயணம்
செய்யும் உத்தராயணம் மற்றும் தெற்கு நோக்கி பயணம் செய்யும் தட்சிணாயணம்.
உத்தராயனத்தில்
இரண்டு அமாவாசைகள் முக்கியம். ஓன்று உத்தராயணம் தொடங்கிய உடன் வரும் முதல் அமாவாசை.
இது மகர அமாவாசை அல்லது தை அமாவாசை. என்பர்.
உத்ராயனத்தின்
மத்தியில் சூரியன் தனது அதிபயங்கர வெப்பத்தை வெளியிடும் மாதத்தில் வரகூடிய
அமாவாசை. இதற்கு பெயர் சித்திரை அமாவாசை அல்லது மேஷ அமாவாசை.
இதேபோல தக்ஷினயத்தில்
இரண்டு முக்கியம். ஓன்று தட்சிணாயணம் தொடங்கிய உடன் வரும் முதல் அமாவாசை. இது கடக அமாவாசை
அல்லது ஆடி அமாவாசை என்பர். இதில் மனோகாரகன் சந்திரன் ஆட்சி. ஆத்மகாரகன் சூரியன் மனோகாரகன்
வீட்டில் இருப்பதால் ஆடி அமாவாசை அனுஷ்டிப்பவர்களுக்கு ஆத்மாவும் மனமும் அதாவது
உடலும் உள்ளமும் உண்மையில் அமைதிபெறும்.
தக்ஷினயத்தின்
மத்தியில் சூரியன் தனது வெப்பத்தை மறைக்கும் மாதத்தில் வரகூடிய அமாவாசை. இது
புரட்டாசி மாதத்தில் வரகூடிய மகாளய பட்சம் கழிந்த பின்னர் வரும். இதற்கு பெயர் ஐய்பசி
அமாவாசை அல்லது துலா அமாவாசை என்பர். சூரியன் நீச்சம் பெற்று துலாத்தில் நுழைவதால்
இதற்கு துலாஸ்நானம் என்றும் கூறுவார்கள்.
பூர்வபுண்ணிய தோஷம்:
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ
துணைபுரிவது இந்த அமாவாசை விரதங்கள். இந்த நாட்களில் நம்
முன்னோர்களை நினைத்து செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் நினைத்ததை
நடத்தி வைக்கும் சக்தி கொண்டது.
இது போன்ற சிரார்த்த
காரியங்களை சமுத்திர கரைகளிலும் அல்லது ஆற்றங்கரை, குளக்கரை போன்ற இடங்களில்
செய்வது உசிதம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் சகல பித்ரு தோஷங்களை நீக்கும் புண்ணிய
ஸ்தலமாக விளங்குகிறது. தந்தையை
இழந்த ஆணும் கணவனை இழந்த பெண்ணும் மட்டும் இந்த திதி தர்பணத்தை செய்யலாம். ஆடி
அமாவாசை தை அமாவாசை நாட்களில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடுமுடி, பவானி கூடுதுறை,
திருப்புட்குழி, வேதாராண்யம் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் திரளாக கூடி
பிதுர்தற்பனத்தை சிரர்த்தையுடன் செய்கிறார்கள்.
பரிகார நேரம் இதுவே:
பிதுர்காரகனான சூரியனும் மாதுர்காரகனான சந்திரனும்
சேரும் இந்த நாட்களில்
அமாவாசை திதியில் செய்யும் காரியங்கள் வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், தோஷம் கழித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை செய்யலாம்.
எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும்
அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை
திதியன்று பரிகாரம் செய்வது உடனடி பலனை தரும்.
கர்ப்பம் தங்காமல், அடிகடி கருகலைதல்
நடப்பவர்களின் வீட்டில் அமாவாசை விரதம் இருப்பின் உடனடி குழந்தை பிறப்பு ஏற்படும்.
முண்டம், தண்டம், பிண்டம்:
வடதேசத்தில் முண்டம், தண்டம், பிண்டம் என்றே
முறையாக பித்ருபுஜை செய்கின்றனர்.
முண்டம்: அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் தலை
மொட்டை அடித்துக்கொண்டு, பித்ருக்களை வணங்கி அட்சய வடத்தின் வேர்பாகத்தை
தரிசிக்கின்றனர்.
தண்டம்: காசியில் கங்கையில் பஞ்சநதி சிரார்த்தம்
செய்து அன்னபூரணி, விஸ்வநாதர் மற்றும் காலபைரவர்க்கு தண்டம் சமர்பித்தல் என்கின்ற தலைவணங்கி
அட்சய வடத்தின் மத்திய பாகத்தை தரிசிக்கின்றனர்.
பிண்டம்: கயையில் மக்கள் அரிசி மாவினால
செய்யப்பட்ட பிண்டபிரசாதத்தை தன் பித்ருக்களுக்கு படைத்து, அவர்களின் திருப்தியை
அறிந்து அவர்களிடம் இதுவரை செய்த பாவங்களை மன்னிக்க வேண்டி, அட்சய வடத்தின் நுனி
பாகத்தை தரிசிக்கின்றனர்.
ஆக அட்சய வடத்தின் அடி பாகத்தை முண்டம்
முறையிலும், மத்திய பாகத்தை தண்டம் முறையிலும், நுனி பாகத்தை பின்னட முறையிலும்
வழிபடுகின்றனர். அட்சய வடம் ஆலமரத்தை குறிக்கும். ஆலமரம் போல் எங்கள் சந்ததிகள்
தொடர்ந்து இருக்க வேண்டும் என வேண்டுவதே இந்த முறை.
திருவண்ணமலையில்
அண்ணாமலையார் தனது பக்தன் வல்லாள மகாராஜாவை தந்தையாக நினைத்து இன்றளவும் தர்ப்பணம்
செய்கிறார்.
கும்பகோணம்
சாரங்கபாணி பெருமாள் தன் பக்தனுக்காக தர்ப்பணம் செய்கிறார்.
திலதர்ப்பனபுரியில்
ஸ்ரீ ராமன் , ஜடாயுவை தந்தையாக பாவித்து தர்ப்பணம் செய்கிறார்.
செங்கல்பட்டு நென்மேலி
என்ற ஊரில் உள்ள பெருமாளின் பேரே சிரார்த்த சம்ரட்சன பெருமாள் என்ற பெயருடன்
கோவிலின் அருகில் உள்ள குளக்கரையில் நித்ய சிரார்த்தம் தம் முன்னோர்களுக்காக இன்றும் செய்கிறார்.
இந்த லிஸ்ட்
சொல்லபோனால் தொடர்ந்து கொண்டே போகும்..
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
Both Online & Direct Astrology Classes are undertaking
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
====================================================================================================
சனி, 12 ஜூலை, 2014
ஆன்லைன் ஜோதிடம் - ONLINE ASTROLOGY
ஆன்லைன் ஜோதிடம்
ONLINE ASTROLOGY
அன்புடையீர், வணக்கம்.
உங்களை போன்ற வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிறைய
பேர்கள் ஜோதிடம் படிக்க விருப்ப படுவதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டம்.
ONLINE ASTROLOGY CLASS thro email.
Duration:
One month to 3 months.
Minimum Course Fees.
பாடங்களை ஒரு தனியான் பிளாக்கில் உங்களுக்கு தந்து, அதில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை வாரம் ஒரு முறை
ஈமெயில் chat மூலம் செய்யப்படும். மேலும் வாரந்திர டெஸ்ட் ஓன்று உண்டு. Answer
Sheet செக் செய்து
மதிப்பெண்கள் கூட வழங்கப்படும்.
ஜோதிடத்தில் உங்கள்
ஆர்வத்தை பொருத்து
நீங்கள் மூன்று மாதத்திலும்
முடிக்கலாம்,இல்லை ஒரு மாதத்திற்குள் கூட முழு பாடங்களை முடிக்கலாம்.
பாடத்திட்டம் (syllabus)
, ஆரம்பம் முதல் (ie.
A ,B ,C ,D முதல்) அஷ்டவர்க்கம்
வரை (25பாடத்திட்டங்கள்) உண்டு. ஆன்லைன் மூலம் படிப்பவர்களுக்கு ஒரே ஒரு முறை நேரடி சந்திப்பு (optional
) உண்டு. குறைந்த சேவை கட்டணம் உண்டு. உங்களுக்கு, மேற்கூறிய நடைமுறைகள் ஏற்புடையதாக இருப்பின்,
உடனடியாக உங்களை
பற்றிய முழு விபரத்துடன்
(பெயர், வயது, படிப்பு,
இருக்கும் இடம், ஜோதிட ஆர்வம், ஜோதிட முன் அனுபவம், etc.) தொடர்பு கொள்ளவும். email: jothidananban@gmail.com
இப்படிக்கு,
அன்புடன்,
A.N. ராஜாராமன்,
அமைப்பாளர்.
சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ,வேலூர் – 632002
Siva Astrological Research Bureau, Vellore-2
|
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
கௌரவ ஜோதிட பேராசிரியர்,சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
|
சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர், கடந்த 2001 முதல் நேரடி ஜோதிட வகுப்புகள் கட்டணம் வாங்கிகொண்டு நடத்தி வருகிறது. தற்போது 20வது (20th Batch) வகுப்புகள் நடந்து கொண்டுள்ளது. நேரடி வகுப்புகள்
ஒவ்வொரு ஞாயிறு மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். மொத்தம் 25 வகுப்புகள்.
தோரயமாக ஆறு மாதம் ஆகும். வகுப்பு இறுதியில் ஜோதிட பட்டமளிப்பு விழா ஓன்று வைத்து
வகுப்புகளில் தேறிய மாணவர்களுக்கு "ஜோதிடஸ்ரீ" என்கின்ற பட்டத்தை
கொடுத்து கெளரவிகின்றோம். இதில் படித்த மாணவர்களில் நிறைய பேர் மக்களுக்கு ஜோதிடம் பார்க்கின்றனர். மேலும், படித்த மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை புத்தூட்ட பயிற்சியாக ஜோதிட workshop நடத்துவோம். இந்த ஆறுமாத பயிற்சிக்கு மிக குறைந்த கட்டணம் வாங்குகிறோம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை
ஜோதிட கருத்து கூட்டங்களையும் நடத்துகிறோம்.
ஜோதிடம் ஓர் அறிவியலை விட உயர்ந்த மெய்ஞானம். ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி.
அனைவரும் படிக்க வேண்டியது. அவரவர்கள் வாழ்க்கையை செம்மையாக வைத்து கொள்ளவும், ஆபத்தில் உற்ற துணையாகவும் ஜோதிடம்
செயல்படுகிறது. நம்மை சுற்றியுள்ளவர்களை பற்றியும் தெரிந்து கொண்டு நம்மை
பாதுகாத்து கொள்ளவும் உதவுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)