ஜாதகத்தில் பாவ கட்டத்தின் மூலம் அறிவது...!
முதல் பாவம்.
சுய
கௌரவம் , மன நலம், போன்றவைகள்.
2 பாவம்.
குடும்ப
நிலை, பண
கையிருப்பு நல வாக்கு, கல்வி நிலை, போன்றவைகள்.
3 பாவம்.
சகோதர
ஒற்றுமை, துணிச்சல், வெற்றி, போன்றவைகள்.
4 பாவம்.
அம்மாவின்
நலம், உயர்
கல்வி, புதிய வீடு வாங்குதல், வாகன வசதி, விவசாய பயிர்
விளைச்சல் போன்றவைகள்.
5 பாவம்.
குழந்தை
முன்னேறத்தம், குழந்தை பிறத்தல் நேர்த்தி கடன் செலுத்துதல், மாமா
வீட்டு உறவுகள் போன்றவைகள்.
6 பாவம்.
கடன்கள்,
தீடிர்
வியாதிகள், விரோதிகள் தொந்தரவுகள், கர்ப்பை
கோளாறுகள் போன்றவைகள்.
7 பாவம்.
கணவன்
மனைவி ஒற்றுமை, திருமணம் கை கூடுதல், வியாபாரத்தில் கூட்டாளிகளின்
நடவடிக்கைகள். போன்றவைகள்.
8 பாவம்.
பழைய
கடன்களின் தொடர் பிரச்சனைகள், பரம்பரை வியாதிகளின் வெளிப்பாடு,
பங்காளி
சண்டைகள், ஆயுள் கண்டங்கள், போன்றவைகள்.
9 பாவம்.
சௌபாக்கியங்கள்,
தந்தையுடனான
உறவுகள், குரு வழிபாடுகள், ஸ்தல யாத்திரை செல்லுதல், போன்றவைகள்.
10 பாவம்.
வியாபார
தொழில் அனுகூலங்கள், அலுவலக அபிவிருத்தி, வேலை வாய்ப்பு அமைதல், கர்ம
காரியங்கள் செய்தல், போன்றவைகள்.
11 பாவம்.
எதிலும்
லாபம் பெறுதல், மனைவி அல்லாத பிற பெண்கள் நேசம், அக்கா,
அண்ணன்
உறவுகள், போன்றவைகள்.
12 பாவம்.
செலவுகள்,
கணவன்
மனைவியின் அந்தரங்க மகிழ்ச்சி, போதையில் மயங்குதல், மோட்சசாதனை
செய்தல், போன்றவைகள்.
பாவ பலன்கள் ராசி பலன்கள் போலவே தானே உள்ளது, இதில் என்ன வித்தியாசம்...என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. வித்தியாசம் ஏதும் இல்லை தான், ஆனால் ஒரு கிரகம் உண்மையில் எத்தனையாவது ராசியில் உள்ளது என பார்த்தால் தானே பலன் கூற முடியும். உதாரணம், குரு லக்னத்திற்கு எட்டாமிடத்தில் உள்ளது என வைத்து கொள்வோம், உடனே உங்கள் பலன் ஆயுள் பற்றிய எண்ணங்கள் ஓடும்... பாவ கட்டத்தில் அதே குரு ஒன்பதாம் வீட்டிலோ அல்லது ஏழாவது வீட்டிலோ இருந்தால் நாம் நினைத்த பலன் தலை கிழாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதே போலவே செவ்வாய் கிரகம் 2-4-7-8-12 இல் இருந்தால் பெரிய தோஷம் என்கிறோம். இதை நாம் ராசி வைத்து மேலோட்டமாக முடிவு செய்கிறோம். ஆனால் உண்மையில் பாவ ஸ்புட ஆராய்ச்சி செய்தே உண்மையில் தோஷம் உள்ளதா இல்லை யோகம் உள்ளதா என பார்த்து பலன் கூற வேண்டும்.
உதாரண ஜாதகம் ஒன்றை பார்ப்போம்.
இவருடைய பிறந்த நேரப்படி கிரகங்கள் நின்ற டிகிரி விபரங்கள் பார்க்கவும்.
மேலே கண்ட கிரகங்களின் டிகிரி படி அவைகள் ராசி கட்டத்தில் தங்கியுள்ள நிலையை பாருங்கள்..
உதாரண ஜாதகர் திரு ராமசாமி அவர்களின் பிறந்த நேர குறிப்பு படி, அவருடைய லக்னம் துலாம்.
இரண்டில் கேது.
நான்கில் சுக்ரன் & மாந்தி.
ஐந்தில் சூரியன் & சனி.
ஆறில் புதன் & செவ்வாய்.
எட்டில் குரு & ராகு.
இனி இவருடைய பாவ கட்டத்தை பார்ப்போம்....
பலன் மாற்றம்.
லாப ஸ்தானாதிபதி சூரியன் பாவப்படி ஆறில் போய் விடுவதால் ராசி படி லாபம் என்று கூறியது மாறி, லாபமே இல்லை என கூறவேண்டியதாகியது .
இப்படி பலன்கள் முன்னுக்கு பின் மாறி விடுவதால், பாவகட்டப்படியே நாம் ஒரு ஜாதகர் பெறப்போகும் யோகங்கள் உண்மையா...இல்லை அவர் அனுபவிக்க போகும் கஷ்டங்கள் உண்மையா என தெளிவாக அறிய இயலும்.
===========================================================
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர்
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
===================================================================
நல்லதொரு விளக்கம் பார்த்த அனைவரூம் ராசி அல்லது நவாமசத்தை பலன் சொல்கிறார்கள் பாவகட்டத்தை அல்ல தங்களின் விளக்கம் அருமை.
பதிலளிநீக்குஜாதகத்தில் பாவ சக்ரப்படி தோஷங்களை நிர்ணயம் செய்தால்தான் சரியாக இருக்கும் என்பது அனுபவம். இன்றைய உலகில், கணினியில் பாவ சக்ரத்தை வெகு சுலபமாக கணிக்கும் வசதி இருப்பினும், வெகுபல ஜோஸ்யர்கள் ராசி சக்ர அடிப்படையில் கிரஹ, பாவ பலன்கள் மற்றும் தோஷங்களை கூறி வருகின்றனர். இது தவறல்லவா?
பதிலளிநீக்குPavakirakanam aththanai anral appady athanai therinthu kolvathu
பதிலளிநீக்குஒரு கிரகம் ராசி பரிவர்த்தனை பின் இன்னொரு கிரகத்துடன் சர பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் ஐயா ?
பதிலளிநீக்குFor example:
கும்ப ராசி சதயத்தில் "செவ்வாய்" - மேஷத்தில் "வக்ர சனியுடன்" ராசி பரிவர்த்தனை ஆகின்றது,
சதயத்திற்கு வந்த "சனி", கடக பூச நச்சத்திரத்தில் இருக்கு "ராகுடன்" சர பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் ?
இதுவரை யாரும் சொன்னதில்லை ஐயா, உங்கள் கருத்து கேட்க வேண்டுகிறேன்🙏