மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 4 ஏப்ரல், 2015

கிரகணதோஷம் உண்மையில் பாதிக்குமா...?

கிரகணதோஷம் உண்மையில் பாதிக்குமா...?

      ஜாதக கட்டத்தில் ராகு கேதுவை சூரிய சந்திரர்கள் கடக்கும் போது தோஷம் ஏற்படுகின்றது. சூரியனுடன்  ராகு அல்லது கேது சேர்ந்தால் பிதூர் தோஷம். ஆத்மகாரகன் அடிபட்டு போய் விட்டான்.  தந்தை மகன் உறவு தடம் புரண்டது...இப்படி எல்லாம் பெசபடுகிறதே இது உண்மையா..?
இதே போல சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால் மாதூர் தோஷம், மனநிலை பாதிக்கபட்டவன், அம்மாவின் அரவணைப்பு அம்பேல்..இது போன்றவைகள் உண்மையா...?

         
       இது உண்மை என்றால் சந்திரன் 27 நாட்களில் ஒரு முறை ராகுவையும், ஒரு முறை கேதுவையும் கடந்து தானே செல்கின்றான்...?
சூரியனை எடுத்து கொண்டால் வருடத்தில் இரண்டு மாதங்கள் ஏறக்குறைய 60  நாட்களுக்கும் மேல் ராகு மற்றும் கேதுக்களுடன் தானே வாசம் பண்னுகின்றான்...?
    
        இவைகளை நாம் அப்படியே தோஷம் என எடுத்து கொள்வது தவறாக முடியும். இவைகளை ஸ்புடம் போட்டு ஆராய்ந்து அறிய வேண்டும். ஆனால், வருடத்தில் ஒரு முறை நடக்கும் சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ஆக இரண்டு முறை சூரிய சந்திரர்களுக்கு மாபெரும் தோஷம் தாக்கு கின்றது.

     பதினைந்து நாட்களுக்கு முன் நடந்த சூரிய கிரகணம் கூட ஓரளவு தோஷம் என்றாலும் கடகத்தில் உள்ள குருவின் பார்வையில் மீன ராசியில் சூரிய கிரகணம் நடந்தமையால் மேற்படி பாதிப்புகள் வெகுவாக குறைந்து விடும்.  









       இந்த வருடத்தின் உண்மையான கிரகண தோஷம் என்றால் இன்று (4-4-2015) நடந்ததே அது தான் அதிக தாக்கம் உள்ள தோஷகாலம். இன்று கன்னி ராசியில் ராகுவுடன் சேர்ந்த சந்திரனை சுப கிரகங்கள் யாரும் பார்வை இடவில்லை, குறிப்பாக குருவின் பார்வை கன்னி ராசியின் மீது படவேயில்லை. அதிலும் இன்று சந்திரனுடைய நட்சத்திர சாரத்திலேயே கிரகணம் நடந்தமையால், இன்று தோஷ நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு மேற்கூறிய பாதிப்புகள் கூடி இருக்கும்.

என்னதான் தோஷங்கள் நம்மை தாக்க நினைத்தாலும், சாஸ்திரங்களை சமைத்த சர்வேஸ்வரனை சாந்தபடுத்தினால் தோஷம் சந்தோஷமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. à Bala Jothidar

**************************************************************************************************

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002



1 கருத்து: