மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 31 மே, 2015

ஓரக்கண், ஒன்றரை கண் side eye

ஜாடை கண், ஓரக்கண், 
ஒன்றரை கண், தோண்டி கண்,  ஆந்தைக்கண்,  
காக்கா கண் 





             ஜாடை கண், ஓரக்கண், ஒன்றரை கண், தோண்டி கண்,  ஆந்தைக்கண்,  காக்கா கண் போன்றவைகள் ஜோதிடத்தில் இரண்டாமிடம் பாதிப்பால் வருவது. குறிப்பாக சுக்ரனின் பாதிப்பு தான் இதற்கு காரணம். 

       சுக்ரன் இரண்டில் இருந்து சனியின் பார்வை படும்போது இது போன்ற கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் இவைகள் அதிர்ஷ்டம் என்று கூறுவதற்கு காரணமும் உண்டு. 

           இரண்டாமிடத்தில் சுக்ரன் தன ஸ்தானத்தில் இருக்கும்போது ஆடை, அணிகலன், குடும்பத்தில் குதுகலம் போன்றவை இருக்கும். இவர்களுக்கு எதிர்பாலினம் சீக்கிரம் வசியமாகி, சீக்கிரத்திலேயே அவர்களே இவர்களுக்கு விரோதமாக மாறுவார்கள்.

            குறிப்பாக இவர்களில் நிறையப்பேர் பெண்களாலே மரணத்தை கூட தழுவுவார்கள்.  கோளாறு உள்ள சுக்ரனை குரு திரிகோண பார்வையால் பார்த்துவிட்டால் இவர்கள் பெண்களை வென்றுவிடுவார்கள். 



=======================================================================

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002


=====================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக