மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 24 ஜனவரி, 2013

நோய் வரும் காலம். Time of Disease

நோய் வரும் காலம்.

                   ஜோதிட ரீதியாக சில நோய்கள் சில கால கட்டங்களில் தோன்றி சில காலம் உடலில் தங்கி பிறகு மறைகிறது. சில நோய்கள் மட்டும் உயிர் பிரியும் வரை தொடர்ந்து கூடவே வருகிறது. அவரவர் ஜாதகத்தில் ஆறாம் இடம் குறுகிய கால நோய்களையும், எட்டாம் இடம் தொடர் நோய்களையும் நமக்கு அறிவிகின்றது. பொதுவாக ஆறாம் இடத்தில் எந்த விதமான கிரகம் இருக்கிறது, யார் பார்க்கிறார்கள், அந்த வீட்டின் அதிபதி போன்ற காரணங்கள் தான் ஒருவரின் நோயை அறிவிகின்றது.
               
                 "மணி, மந்திர, ஒளஷதம்" என்பது ஒருவருக்கு நோய் வந்த பிறகு நீக்கும் வழிகள். இவை முன்றையும் உபயோகிக்கும் முறையை நமக்கு தெரிவிப்பது அவரவர் ஜாதக கட்டமே. ஜோதிடம் மூலம் ஒருவருக்கு எந்த கிரகத்தினால் நோயில் ஏற்பட்டது என்பதை பல சோதனைகள் மூலம் அறிந்த பின்னர், அந்த கிரகத்திற்குறிய மணி என்கின்ற ரத்தினத்தை உபயோகிப்பதாலும், அந்தந்த கிரகத்தின் அதிதேவதையின் மந்திரத்தை உச்சரிபத்தின் மூலமும், அந்தந்த கிரகத்தின் தன்மையான பித்தம், சிலோத்துமம், வாதம் என அறிந்து அதற்கு ஏற்ற மருந்தை தருவதின் மூலம் ஒருவரின் பிணியை நீக்க முடியும்.
                  ஜோதிட ரீதியாக சில நாளில், சில திதிகளில், சில நட்சத்திரத்தில் உதயமாகும் நோய்கள் சீக்கிரத்தில் முடியும், தொடர் வியாதியாக மாறும் போன்ற தகவல்களை நமது ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் முன்கூட்டியே நமக்கு அறிவித்துள்ளனர். அவைகள் யாதெனில்:
                ஞாயிற்று கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி யுடன் கூடிய திருவாதிரை, ஆயில்யம், மகம் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும்,
                  செவ்வாய் கிழமையில் வரும் நவமி திதியுடன் சுவாதி, கேட்டை, பரணி நட்சத்திரங்கள் சேர்ந்தாலும்,
                  சனிக்கிழமையில் வரும் சதுர்த்தசி திதியுடன் பூரம், பூராடம், பூரட்டாதி நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் இந்த தினங்களில் ஆரம்பித்த நோய் மரண பயத்தை தரும் எனபது விதி.
                   மேலும், கரணங்களில் சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம், சகுனி ஆகிய நான்கு கரணங்களிலும் ஆரம்பித்த நோயும் பிராண பயத்தை உண்டு பண்ணும்.   ஜென்ம நட்சத்ரம்,அதற்கு 3, 5, 7-வது நட்சத்திரங்களில் ஆரம்பித்த நோய் தீராக்கவலையிலேயே முடியும். இதே போன்று, சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி, சஷ்டி, அஷ்டமி, துவாதசி, அமாவாசை போன்ற திதிகளில் ஏற்பட்ட நோய்கள் சில நாட்கள் தொடர்ந்து பிறகு முடியும். வியாதியால் பீடிக்கப்பட்டு இருக்கின்றவர்களுக்கு சந்திராஷ்டம நாட்களிலும், ஜென்ம நட்சத்திரதிற்கு 88-வது பாதமாகிய வைநாசிக பாதத்தில் கெட்ட கிரகங்கள் பிரவேசிக்கும் பொழுது மரண பயம் வந்து வந்து போகும்.
                  மேற்கூறிய மரண பயம் வருமே ஒழிய மரணம் சம்பவிக்காது. மரணம் சம்பவிக்க வேண்டுமானால், அவரவர் ஜென்ம ஜாதகத்தில் மரணம் வருவதற்குறிய கால கட்டம் வந்தால் தான் வரும். மரணம் வராத இது போன்ற காலங்களை தான் கண்டம் என்கின்றோம்.
                   எப்படிப்பட்ட நோய்கள் வந்தாலும், அந்தந்த கிரக ஆதிதேவதையை ஆரதனை செய்வதன் மூலமும், லோகத்திற்கே வைத்தியநாத சுவாமி யாகிய, தன்வந்திரி மந்திரம் மற்றும் ஹோமம் மூலமாகவும் நோய்கள் தீரும். ஒரு சிலருக்கு, அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தனதருமங்களை செய்து கொள்வதன் மூலமாகவும் நோய்கள் தீரும். நோய்கள் வந்த பிறகு வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் முதன் முதலில் வைத்தியம் பார்த்தால் நோய்கள் நீச்சயம் நிவர்த்தி ஆகும்.



=========================================                =========================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
ஆக்கம்:


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
 M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

 

================================                                 =================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக