மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 16 பிப்ரவரி, 2013

லக்னாதிபதி நீச்சமா? (கேள்வி-பதில்-1)



ஜோதிட கேள்வி பதில்  -  16-2-2013     

லக்னாதிபதி நீச்சமா?
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்!!! ஜோதிட சம்பந்தமான ஒரு பொது கேள்வி இது.. பொதுவாக பிறந்த ஜாதகத்தில் லக்னாதிபதி தான் உயிர் என்று கூறுகிறீர்கள், அப்படிப்பட்ட லக்னாதிபதி நீச்சமடைந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கை நன்றாக இருக்காதா? உதரணத்திற்கு மிதுன லக்னாதிபதி புதன் மீனத்தில் நீச்சமடைந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கை போராட்டமா? என் சந்தேகத்திற்கு அறிவுரை கூற வேண்டுகிறேன்...

நன்றி
ஷ்யாம்


அய்யா ,
உங்கள் கேள்வி ஒரு நல்ல கேள்வி. எல்லோரும் கேட்க கூடிய ஒன்றே. லக்னாதி பதி நீசம் பெற்றதாலே அவர் வாழ்க்கை பொய் விட்டது என்று இல்லை. அவர் நீச பங்கம் பெறலாம். அவர் நின்ற ராசி அதிபதி பலம் பெற்று இருக்கலாம். அவர் நின்ற நட்சத்ர அதிபதி பலம் பெற்று இருக்கலாம். லக்னத்தை அல்லது லக்னாதி பதி யை சுப கிரகம் பார்க்கலாம். லக்னம் கெட்டாலும் லக்னத்தில் உள்ளவர் பலம் பெறலாம். லக்னம் போனாலும் பூர்வ புன்யாதி பதி அல்லது பக்கியாதி பலம் பெறலாம். ஆக இப்படி பல விதமான சோதனைகளை செய்த பிறகே அவரது வாழ்க்கை கெட்டு விட்டதா என்று கூற முடியும். முடிவாக ஜாதக ரீதியில் அவர் வாழ்க்கை கெட்டே போய் இருந்தால் இருக்கவே இருக்கிறது கடவுள் துணை.

.


எம். பாலசுப்ரமணியன்,எம். .,

 ஜோதிடர் & நிறுவனர்,

Vellore Astrology Researchers Association,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,

VELLORE-632002 cell: 9443540743.

வேலூர் - 632002 செல் 9443540743


    



2 கருத்துகள்:

  1. பலரும் குழப்பும் ஒரு அமைப்பிற்க்கு நீங்கள் அருமையான பதில் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. சிம்ம ராசி சிம்ம லக்னம் நட்சத்திரம் உத்திரம் சூரியன் துலாமில் நீச்சம் சுக்ரன் துலாமில் வக்ரம் இப்படி இருந்தா என்ன பன்றது ஐயா

    பதிலளிநீக்கு