ஆறாம்
ஆதிபதியின் அட்டகாசம்
இன்றைய
நவீன உலகில் மருத்துவம் அதிபயங்கர வளர்ச்சியை பெற்றுவிட்டது. ஒன்றே ஒன்று கடவுள் இன்னும் உள்ளான் என்று மனிதன் தெரிந்து கொள்ள இறந்த மனிதனை
மறுபடியும் பழையபடி உயிர் தர இயலவில்லை. வளர்ச்சி பெற்ற மருத்துவ வசதிகள் பல
இருந்தாலும், சிறிதாக உடல் நலம்
கெட்டாலும் இன்றும் மக்கள் ஜோதிடரை அணுகி வந்துள்ள வியாதியின் நிலைபாட்டினை
தெரிந்து கொள்கிறார்கள்.
அவரவர் ஜாதகத்தில் லக்னம் பெற்ற பலத்தினையும், ஆறாம் அதிபதியின் தன்மையை பொறுத்து வந்துள்ள வியாதி தற்காலிக மானதா இல்லை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வருமா என்று அறிய இயலும். நோய்கள் அவரவர் உடம்பு பெற்ற பௌதிக ரசாயன தன்மை மூலம் உடலில் உள்ள செல்களின் அழிவு மற்றும் வளர்ச்சியை பொறுத்து (Metabolism) நோய்கள் வருவதும் போவதுமாக உள்ளது. இந்த தன்மை நாம் பிறந்தவுடன் உள்ள ஜென்ம ஜாதக கிரகங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த தசா புக்திகளில் நோய்கள் நமது உடலில் வெளிப்படுகிறது. இதையே தான் நவீன மருத்துவ படிப்புகளும் சொல்கிறது.
ஜாதகத்தில் ஆறாம் அதிபதி கேந்திரங்களில் அமைந்த விட்டால் நோய் என்பதே பெரும்பாலும் இல்லாமல் போய்விடுகிறது. ஆறாம் இடங்களில் சரப கிரகங்கள் உட்கார்ந்து விட்டால் நோய்களை எதிர்க்கும் வல்லமை வந்து விடும். ஆறாம் அதிபதியின் தசா புக்தி வந்தால் கண்டிப்பாக அந்தந்த கிரகங்களின் காரக துவத்திற்கு ஏற்ப நோய்கள் வரும். இந்த ஆறாம் அதிபதியை பாதகாதிபதி பார்த்தால் நோய் அதிக உபாதை மற்றும் செலவுக்கு பிறகே போகும். இதே ஆறாம் அதிபதியை மாரகாதி பதி நோட்டம் இட்டால் இந்த நோயே அவரது மரணத்திற்கும் காரணமாக அமைந்து விடும்.
இந்த ஆறாம் அதிபதி ஜீவனாதிபதியை பார்த்துவிட்டால் நோயின் தன்மை முற்றி அவரது வேலையை ராஜினாமா செய்யும் அளவிற்கு செய்து விடும். இதே ஆறாம் அதிபதிக்கு ஏழாம் அதிபதி அல்லது சுக்ரன் தொடர்பு பெற்று விட்டால் கட்டிய மனைவியும் நோய் வந்த பிறகு கண்டுக்காமல் போய்விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதே ஆறாம் அதிபதியை லக்னாதிபதி பார்த்து விட்டால் ஜாதகரே அவரது விடா முயற்ச்சியால் நோயிலிருந்து விடுபடுவார். குரு ஆறாம் அதிபதியையோ அல்லது ஆறாம் இடத்தையோ பார்த்து விட்டால் கடவுளின் கருணைக்கு பிறகு நோயிலிருந்து பூரணமாக குணமாகி வெளியில் வந்து விடுவார்.
==============================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும்
தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு
அனுப்பவும்.
ஆக்கம்:
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர்,
ஜோதிடமாமணி
M .
பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள்
சங்கம்.
9443540743. Vellore.==============================================================================================================
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளது!!
பதிலளிநீக்குஅய்யா இனிய காலை வணக்கம் !!!!
பதிலளிநீக்குதங்களின் புத்தக வெளியீடு விழா மிக சிறப்பாக நடந்ததை நிழற்பட தொகுப்பு ஆல்பம் மூலம்
பார்த்து மகிழ்தேன் .
வாசகர்களின் கேள்விகளும் அதற்கான உங்களின் பதில் மிக அருமை .
"6ம் அதிபதியின் அட்டகாசம்" கட்டுரை எனக்கும் என் போன்ற பல்லாயிரம் வாசகர்களுக்கும்
மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
உங்களின் ஜோதிட விளக்கங்கள் , கட்டுரைகளை அன்புடன் வரவேற்கிறேன் .
என்றும் உண்மையுடன்
சோம பழனியப்பன்
மஸ்கட்