செவ்வாய் தோஷமா ?
கவலை இல்லை, முருகன் இருக்கிறான்.
ரத்த காரகன் செவ்வாய்.
செவ்வாய் கிரகம் நம் உடலில் உள்ள ரத்த அணுக்களுக்கு காரணமானதாக அமைகிறது, மேலும் பூமி, உத்தியோகம், சகோதர உறவுகள், மரபணு மாற்றங்கள், விந்தின் வேகம், வெறித்தனம், மிருக குணம், இப்படி பல துறைகளுக்கும் அங்காரகன் என்கின்ற செவ்வையே காரணமாகும். செவ்வாய் வீரியத் திற்குரிய கிரகம் என்பதால் கணவன் மற்றும் மனைவிக்கு இது சரியாக இருந்தால் தான் தாம்பத்யத்தில் தென்றல் தழுவும். மாறாக இருப்பின் இருவருக்குள் புழுக்கம் அதிகம் ஆகி வெடிக்கும். பெண்ணிற்கு செவ்வாய் வலுவாக இருக்கும் பொது, ஆண்ணின் ஜாதகத்திலும் செவ்வாய் வலுத்து இருக்க வேண்டும் என்று ஜோதிட அறிஞர்கள் கட்டாயப் படுத்துகிறார்கள்.
செவ்வாய் தோஷ இடங்கள்:
அதே போல் செவ்வாய் குடும்ப, சுக ஸ்தானங்களில் இருந்தால் குடும்பத்தில் சிறு சிறு சண்டைகளும், நேரத்திற்கு சாப்பாடு துணி மணி சௌகரியங்கள் குறைந்து காணப்படும். அயன சயன இடமான 12 இல் செவ்வாய் இருக்கும் போழ்து தூங்கும் போது மட்டும் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சத்தம் வெளியில் தெரிய வரும். செவ்வாய் களத்திற ஸ்தானமான 7இல் & மாங்கல்ய அல்லது ஆயுள் இடமான 8இல் இருப்பது மிக பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். சில நேரங்களில் தோஷம் குறைந்து உள்ளவர்கள் மனம் வெறுத்து விலகி போகவும் நேரிடும். இப்படி 7 அல்லது 8 இல் செவ்வாய் உள்ள பெண்கள் கணவனை நினைத்தாலே கதி கலங்கும். வெறுப்பு மேலோங்கும். இது போன்று அமைப்புள்ள செவ்வாயை குரு எங்கிருந்தாவது பார்த்துவிட்டால் எதற்கும் கவலை இல்லை. எப்படி பட்ட நிலைகளையும் சமாளிக்கும் ஆற்றல் கடவுளின் கருணையால் இயற்கையாகவே அமைந்துவிடும்.
"திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை".
|
|
CHEVVAI
|
CHEVVAI
|
CHEVVAI
|
RASI GUNDALI
|
| |
|
| ||
CHEVVAI
|
LAGNAM
|
CHEVVAI
|
|
"திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை".
இப்படி இல்லாத பட்சத்தில் கவலையே வேண்டாம், "திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை". செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை நம் தமிழ் கடவுள் முருகனே. முருகனை முறைப்படி வழிபட்டு திருநீறு பெற்று பூசிக்கொண்டால்
தோஷநிவர்த்தி நிச்சயம். செவ்வாய்க்கிழமைகளில் காலையும்,
மாலையும் நீராடி வழிபடுவது உத்தமம். செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை
மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின்
அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய்
தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும்
பிறக்கின்றன. இப்படி செய்வதால் சிங்கமாக தெரிந்த கணவன் சிரித்து வருவான். கதியை கலக்கிய கணவன் கதளி பழமாகவும் கற்கண்டாகவும் மாறுவான்.
இதே போல் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களுக்கு முருகனை முழுவதுமாக சரணடைந்தால் முன் செய்த வினைகள் முற்று பெறுவதுடன் மனைவியின் கண்களுக்கு உத்தம புருஷனாக தெரிவான். விந்து குறைகள் விலகுவதுடன் விரும்பிய மகனை பெறுவான்.
முருகனை நினைத்தாலே. . . .
செவ்வாய்கிழமை
விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்த பின் துவரை வழங்கவேண்டும். அதன்பிறகு
சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றைத் தரவேண்டும்.
செவ்வாய்திசை,
செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள்
செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மை தரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நவரத்தினத்தில் ஒன்றான செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து
கொள்ள வேண்டும். இத்தோஷம் உள்ள
பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் அம்மனையும்,
மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கிவிடும். ஆக எப்படி பட்ட தோஷம் உள்ள கணவனை ஒரு பெண் அடைந்தாலும், அல்லது தோஷம் உள்ள மனைவியை ஒரு ஆண் அடைந்தாலும், முருகனை தினமும் மனத்தால் வழிபட்டாலே மகிழ்ச்சி கடலில் நீந்தலாம். முருகா சரணம்.
composed by Jothidamamani M.Balasubramanian,M.A., Founder, VARA, Vellore-2.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக