மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 27 ஏப்ரல், 2013

வரவு எட்டணா... செலவு பத்தணா.. expenses

வரவு எட்டணா...    செலவு பத்தணா..  


 

             ஜாதகம் பார்க்க வருபவர்களில் பெரும்பாலோர் எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை, கையில் பணம் எப்பொழுதும் இருப்பதே இல்லை என்று புலம்புவதை கேட்டிருக்கிறோம். இதற்கு காரணம் தான் என்ன? அவர்களிடம் கேட்கும் போது நிறைய சம்பாதிக்கிறோம், பல வழிகளில் பணமும் வருகிறது, இருந்தாலும் போதவில்லை என்று சொல்கிறார்கள்.
                  இவர்கள் ஜாதகத்தை ஆராயும் போது அனைவருக்கும் புலப்படுவது விரையஸ்தனத்தில் பல பாவிகள் கூட்டு சேர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு பலவழிகளில் பணம் செலவாகும். முக்கியமாக தீய மற்றும் கேளிக்கை போன்ற நிகழ்வுகளினால் விரையம் ஆகும். உதரணமாக, கேது இருப்பின் தானமாக செய்வார்கள், அதை பெறுபவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வீண் பண்ணுவார்கள். இதனால் இவரது தானம் வீண் செலவாக முடியும். 12-இல் ராகு இருப்பவர்கள், தனது சுயதேவைக்கு தேவையில்லாத காரியங்களில் செலவு செய்து அற்ப இன்பத்தை பெறுவார்கள். உதரணமாக,  இப்படிபட்டவர்கள் மது, மங்கை போன்ற வகைகளில் இருப்பதை செலவு செய்துவிட்டு, பிறகு அதிக பணத்தை தண்டமாக செலவு செய்து விட்டேனே என்று வருந்துவார்கள்.  பன்னிரண்டில் சனி இருப்பவர்கள், நிலம் வாங்கி நஷ்டம் அடைந்து, பிறகு அதை விற்று மறுபடியும் வேறு ஒரு இடத்திற்கு முன்பணம் தருவார்கள், பிற்காலத்தில் அதையும் விற்கதான் செய்வார்கள்.
                     சுபகிரகமான சுக்ரன் இருப்பின், நகை & விதவிதமன ஆடைகள் வாங்கி அதிகம் போடாமல் வீண்விரையம் செய்து விடுவார்கள். இருந்தாலும் செலவு செய்தபிறகு வறுத்த படமாட்டார்கள். குரு இருப்பின் மற்றவர்களுக்கு உணவு அளிப்பது மற்றும் பூஜை புனஸ்காரங்களுக்கு மகிழ்ச்சியுடன் செலவு செய்வார்கள்.
                 இதே போன்று பன்னிரண்டாம் அதிபதி குடும்பஸ்தானத்தில் இருந்து விட்டால் குடும்பத்திற்காக எல்லாம் செலவு செய்த பிறகும் பற்றாகுறை பட்ஜெட். சொல்ல போனால் இவர்கள் வாழ்வில் வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற நிலை இறுதி வரை இருக்கும். இந்த அதிபதி ஐந்தில் அமர்ந்தால் குழந்தைகளுக்காக பணத்தை செலவு செய்வார்கள். விரையாதிபதி என்கின்ற இந்த பன்னிரண்டாம் அதிபதி லக்னத்திலேயே இருந்துவிட்டால் எல்லாம் தன் தேவைக்காகவே செலவு செய்வார்கள். இவர்களை எப்பொழுதும் தீய நண்பர்கள் சூழ்ந்து இருப்பார்கள். இவர்களை ஜாதகரே ஒதுக்கினாலும் இது போன்ற நண்பர்கள் இவரை விடமாட்டார்கள்.  சிலர் சதாகாலமும் போதையினால் தன்நிலை மறந்து உலகத்தையும் மறப்பார்கள்.


                
              லக்னத்திற்கு அதிபதியே பன்னிரண்டாம் விட்டில் இருந்து விட்டால், சிலர் தனது, உடல், பொருள், ஆவி போன்ற அனைத்தையும் மதுவிற்கோ அல்லது மங்கைக்கோ அர்ப்பணித்து விடுவார்கள். இவர்கள் மதுக்கடை அல்லது விபச்சாரிகளின் வீடுகளே கதி என்று இருப்பார்கள். இவர்களுடைய உயிர் மேற்கூறிய இடங்கள் அல்லது சாலை ஓரங்களில் தான் பிரியும். ஜோதிட சாஸ்திரத்தில், இதற்கெல்லாம் விடுவு உண்டா என்று சிலர் கேட்பது எனக்கு தெரிகிறது, இது போன்ற ஜாதகம் உள்ளவர்கள் சிலருக்கு கண்டிப்பாக விமோச்சனம் உண்டு, அவைகளை மற்ற கிரகங்களை கொண்டு தான் முடிவு செய்ய முடியும்.
 

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
 
 
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002  cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================


 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக