"நீச்ச பங்க ராஜயோகம்"
பெயர் ........................
பிறந்த தேதி – 11-அக்டோபர்-1984 அதிகாலை மணி 03-22
இலக்கிணம் சிம்மம்
இராசி மேஷம்.
நட்சத்திரம் – அஷ்வினி 2ம் பாதம்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
...எனக்கு ராசியில் சனிஸ்வரன் உச்சம் ,,, அம்சத்தில் நீசம் ..அம்சத்தில் செவ்வாயும் நீசம் ...
இந்த மாதிரி அமைப்பு எப்படி
பலன் தரும்? இது நீச பங்கமா?
எனக்கு கொஞ்சம் விளக்கவும் ?
டியர் திரு-------------
உங்கள் ஜாதகத்தில் சனி
துலாத்தில் இருந்து உச்சம் பெற்றாலும், அம்சத்தில் நீச்சத்தில்
இருப்பதால் சனியின் உச்ச பலன் போய் நீச்ச பலனே இருக்கும் என்று பொதுபடையில்
சொல்லலாம். உங்கள்
ஜாதக அமைப்பு படி சனிக்கு "நீச்ச பங்க ராஜயோகம்" இல்லை. மேலும் நீச்சபங்க ராஜயோகம் கிழ்கண்ட அமைப்புகள் மூலம் கிரகங்கள்
அடையும்.
1.நீச்சன் நின்ற ராசிநாதன் சந்திரகேந்திரம் பெறுவது. அதாவது
சந்திரன் நின்ற இடத்திற்கு 1-4-7-10 இடங்கள் எதாவது ஒன்றில் நீசகிரகம் நின்ற
ராசிக்கு அதிபதி கிரகம் நிற்பது.
2. நிச்சனை நிச்சன் பார்ப்பது. அதாவது நீச்சம் பெற்ற ஒரு
கிரகத்தை மற்றொரு நீச்ச கிரகம் பார்த்தால், இரண்டு நீச்சகிரகங்களும் நீச்சபங்க ராஜயோகத்தை அடையும்.
3.நிச்சன் நின்ற ராசிநாதன் ராசி கட்டத்தில் ஆட்சி அல்லது
உச்சம் பெறுவது.
4.ராசியில் நிச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் ஆட்சி அல்லது
உச்சம் பெறுவது.
5.ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நீச்சபங்கம் பெற்றாலும் , மற்ற நீச்சம் பெற்ற
கிரகங்களுக்கும் நீச்சம் அடிபட்டு போய் எல்லா நீச்ச கிரகங்களும் நீச்சபங்கம்
ராஜயோகத்தை அடையும்.
இன்னும் இதுபோல் சில ஜோதிடநுணுக்கமான விதிகளின்படி
கிரகங்கள் பலன் செய்யும்.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
====================================================================================================
Good Message Sir
பதிலளிநீக்குGood Message Sir
பதிலளிநீக்குGood Message Sir
பதிலளிநீக்குthanks for your comments
நீக்கு