யுகாதி - விசு - தமிழ் வருடம்
ஜோதிட கருத்து.
தமிழ்
வருடம் சூரியனின் ஓட்டத்தை பொறுத்து அமைகிறது. அதாவது, சூரியன் மேஷ
ராசியின் முதல் டிகிரிக்குள் செல்லும் தேதியே தமிழ் வருடத்தின் முதல் ஆரம்ப நாள்
இதையே கேரள மக்களும் விசு என்று பின்
பற்றுகிறார்கள். தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்கள் சந்திரனின் ஓட்டத்தை பொறுத்து
புதிய வருடத்தை பின்பற்றுகிறார்கள்.வருகிற தமிழ் வருடத்தின் பெயர் ஸ்ரீ விஜய
வருசம். இதே பெயரையே தெலுங்கிலும் அழைக்கிறார்கள். ஆக வருடத்தின் பெயர் ஒன்றே தவிர,
ஆரம்ப
தேதிகள் மற்றும் மாறுபடுகிறது.
சந்திரனின்
அடிப்படையில் வரும் புதிய வருடத்தை "சந்திரமான வருசம் என்றும் தமிழ் நாட்டு
மக்கள் பின்பற்றும் சூரியனின் அடிப்படையில் வரும் வருடத்தை "சௌரமான
வருடம்" என்று அழைக்கிறோம். சந்திரமான வருஷத்தின் முதல் நாள் பங்குனி மாதம்
அமாவாசைக்கு பிறகு வரும் நாளான பிரதமை திதியே ஒவோவோருவருடமும் முதல் நாளாக
அமையும். ஆனால் தமிழ் வருடம் அப்படியல்ல. தமிழ் வருடத்தின் முதல் தேதி சூரியனின்
வேகத்தை பொறுத்து அமைவதால், முதல் நாள் எந்த திதியாக வேண்டுமானாலும்
வரலாம். ஆனால் நிச்சயம் வளர்பிறையில் தான் வரும்.
தமிழ்
பஞ்சங்க அடிப்படையில் பார்க்கும் போது தெலுங்கு வருடம் பிறக்கும் கிழமையின் கிரகம்
எதுவோ அதுவே நமது வருகிற தமிழ் வருடத்தின் ராஜாவாக கருதுகின்றனர்.
யுகாதி
என்பது யுகம் பிறப்பின் ஆரம்பம் என்று பெயர். இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னடம்
பேசுபவர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை, தமிழ் கூறும் உலக மக்கள் அனைவரும்
இதை கொண்டாடுகிறார்கள். நாமும் கொண்டாடுவோமா...?
யுகாதி
தின நல்வாழ்த்துக்கள். **** **** யுகாதி சுப கான்ச்சலு.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
====================================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக