மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 20 மார்ச், 2014

“இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே” ஜோதிட பழமொழி Proverb

“இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே ஜோதிட பழமொழி
 
                                தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசப்படும் பழமொழி “இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே. ஒரு காரியத்தை செய்ய முற்படும் போது நாம் பகலில், அதிலும் ஏறுமுகத்தில் தான் செய்கிறோம். காரணம் ஆத்ம காரகனான சூரியனின் பிரகாசம் நாம் செய்யும் ஒவ்வொரு சத்காரியங்களிலும் இருந்தால் அதில் ஒரு வெற்றி, பொலிவு ஆத்மதிருப்தி இருக்கும்.
                             உதாரணம் உழவு வேலை, அலுவலக வேலை, கல்வி இப்படி சத்துள்ள விஷயங்களை பகலிலும், அசத்துள்ள  காரியங்களை மாலை அல்லது இரவில் சந்திரனின் சாந்தமும் சந்தோஷமும் இருக்கும் நேரங்களில் செய்கிறோம். மனைவியுடன் சினிமாவிற்கு செல்பவர் காலை காட்சிக்கு செல்வது கிடையாது, மாலை காட்சி அல்லது இரவு காட்சிக்கே செல்வதை பார்ப்பீர்கள்.
                              அப்படி அவசியமாக செய்ய வேண்டும் என்றால் இரவில் கூட செய்து விடுங்கள், ஆனால் அரவில் அதாவது ராகுவின் ஆட்சி காலத்தில் செய்யாதீர்கள், காரணம் அவ்வமயம் நாம் செய்யும் காரியங்கள் நமக்கே தெரியாமல் பிரச்சனையில் முடியும் என்பதாகும்.
                             அரவு வேலை என்பது ஒவ்வொருநாளின் ராகு காலம் மட்டுமல்ல, நாம் தேர்ந்தெடுக்கும் லக்னநேரத்தில் லக்னத்தில் ராகு இருக்க கூடாது மேலும் நாம் செய்யும் காரியத்தை பொறுத்து அந்தந்த பாவத்தில் ராகு இருக்க கூடாது என்பதாகும்.
                               குடும்ப விஷயம் பேசும்போது அந்த நேரத்தின் லக்னத்திற்கு இரண்டில் ராகு இருக்க கூடாது, மனைவியிடம் தனித்து பேசும்போது ஏழில் ராகு இருக்க கூடாது. (மனைவியிடம் தனித்து பேசக்கூடிய நேரம் ஏது? என நினைப்பது புரிகிறது, அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் தருகிறேன்.)
 
ᴥᴥ M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம். 9443540743

வெள்ளி, 14 மார்ச், 2014

கேட்டை கோட்டை கட்டும். ஜோதிட பழமொழி. proverb

கேட்டை கோட்டை கட்டும். 
ஜோதிட பழமொழி.       Proverb
 
கேட்டை நட்சத்திரம் காலபுருஷனின் மறைவு ஸ்தானமான எட்டாம் இடமான விருச்சிகத்தில் இருந்தாலும், இந்த நட்சத்திரத்தில் உதித்தவர்கள் கோட்டை கட்டுவார்கள். மன்னர்கள் தான் கோட்டை கட்டுவார்கள், நாம் எப்படி கட்டமுடியும் என்று பெரும்பாலோர் சொல்லுவார்கள், இதை விட சிலர் ஒரு படி மேலே சென்று இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை விட்டு விடுவார்கள் என்றும் கிண்டல் பண்ணுவார்கள்.
ஆனால், கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டையை போன்ற விசாலமான,  அதிலும் மிக முக்கியமான பாதுகாப்பு வளையங்கள் பல வைத்து பெரிய வீட்டை கண்டிப்பாக கட்டுவார்கள். இவர்கள் வீட்டை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இவர்களின் பெட் ரூமை அடைய குறைந்தது ஐந்து வாசல்களை கடந்து செல்ல வேண்டி வரும். இது நிதர்சனமான உண்மை. இதை நீங்கள் சற்று உற்று நோக்கினால் ஜோதிட உண்மை புரியும்.
ஒரு சிலர் கோட்டை போன்று வீடு உடனடியாக கட்ட முடியாவிட்டாலும், இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு பெரிய நண்பர்கள் குரூப் இருந்து கொண்டே இருக்கும். காரணம் இவர்கள் காமெடியில் கில்லாடிகள். குலுங்க குலுங்க கூட இருப்பவர்களை சிரிக்க வைப்பார்கள். (உஷார்: இவர்கள் தீடிர் என்று மற்றவர்கள் மனதை புண் படுத்தி விடுவார்கள்)

by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in

Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================

ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

வியாழன், 13 மார்ச், 2014

ஜோதிட பழமொழி* Astro proverb* சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

                 ஒருவன் சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்தால், அவனது ராசிக்கு ஜீவனாதிபதி சந்திரன் என்பதால், சந்திரன் செல்வத்திற்கு அதிபதி என்பதாலும், துலா ராசியும் சர ராசி என்பதாலும், சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஒரு சர கிரகம் என்பதாலும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவன் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க அவன் பணத்தை சம்பாதிப்பதிலேயே தனது முழு கவனத்தை வைத்து இருப்பான். 
             இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் Executive Job போன்ற துறைகளான மார்கட்டிங் வேலையை எடுத்து கொண்டால் நினைக்கும் அளவிற்கு பணம் சம்பாதிக்கலாம். எனவே தான் சித்திரையில் பிறந்தவர் பணியானது சுற்றித் திரியும் பணியாக அமைவதால் “சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் என்ற ஜோதிட பழமொழி நடைமுறையில் உள்ளது.

by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
 ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

சனி, 8 மார்ச், 2014

ஜோதிட செய்திமலர் - 2014 மார்ச் MARCH -2014

ஜோதிட செய்திமலர் - 2014 மார்ச் 

MARCH -2014 மாதம்

nra;jpkyH

by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

திங்கள், 3 மார்ச், 2014

ஜோதிடம் ஒரு அக்னி Astrology is a Fire

ஜோதிடம் ஒரு அக்னி 

               என்னிடத்தில் ஒரு அன்பர் கேட்டார் ஒரு கேள்வியை: ஜோதிட சாஸ்திரப்படி 3-6-8-12 ம் இடங்கள் மறைவு ஸ்தனங்கள் என்றால் அந்த இடங்களில் இருக்கும் கிரகங்கள் பலாபலன்கள் குறைத்து செய்யும் அல்லது பலன்களே இல்லாமல் போகும். இப்படி இருக்க, ராசிக்கு பன்னிரண்டில் சனி வரும் போது ஏழரை சனி பிடிக்கின்றது கவனம் தேவை உஷார் உஷார் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்களே இது எப்படி சாத்தியம் ஆகும்?

           இது ஒரு ஜோதிட மாணவனின் நல்ல கேள்வி. ஆனால் இந்த மாணவன் தகுந்த ஆசானிடம் ஜோதிடம் பயின்று இருந்தால் கேட்டு இருக்க மாட்டார். பரவாயில்லை இவருக்கு நமது பதில்:

            சனி பணிரண்டில் இருக்கும் போது அயன சயன இடத்தில் இருப்பதால் இந்த சுகம் மிகவும் குறையும். மேலும், இது விரைய ஸ்தானம் என்பதால் சனி சம்பந்தமான செலவுகளான, ஆஸ்பத்திரி செலவு, வட்டி கட்டுதல், தண்டனை செலவு, தண்ட செலவு, வீண் செலவு, திருடு போதல், இப்படி ஏதோ ஒரு வகையில் பணமும் விரையமாகும், உடலும் சில நேரங்களில் விரையமாகும். மேலும், படுக்கும் போது வெறுப்பும், வருத்தமும் வேதனையுடனும் படுக்கைக்கு செல்ல நேரிடும். இன்னும் நிறைய இது போல் சொல்லலாம். இருந்தாலும், நீங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும். அப்பொழுதுதான், ஜோதிடம் என்பது இலை மறை காய் எனபது புலப்படும். மேலும் ஜோதிடம் முழுதும் அந்த காலத்திலேயே ரகசியமாக பாது காத்தனர். இது குரு நாதர்கள் சிஷ்யர்களை பாத்திரம் அறிந்து கற்று கொடுத்தனர். எல்லோருக்கும் சொல்லியும் தர கூடாது என்று வேத சாஸ்திரங்களே கூறுகிறது. தகுதி உள்ளவர்கள், கொடுத்த பொக்கிஷத்தை அனாவசியமாக நினைக்காதவர்கள், அதிக வீரம் மற்றும் விவேகம் நிறைந்தவர்கள், கடவுள் பக்தி, குரு பக்தி உள்ளதா என்று சோதனை செய்த பிறகே கற்று கொடுக்க வேண்டிய கலை. ஏதோ புத்தகத்தை பார்த்து, அல்லது இப்படி பேஸ் புக் மூலம் கற்று கொண்டால் இது அவர்களை வீபரிதமாக ஏதோ ஒரு விஷயத்தில் புரிந்து கொள்ள செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே கூட அழித்து விட கூடிய மிக பெரிய நெருப்பு இந்த ஜோதிடம். எனவே அக்னி போன்ற இந்த ஜோதிடத்தை, தகுந்த ஆசானை கொண்டே பயில வேண்டும். இல்லையேல் இது நெருப்பை எடுத்தவனையே கூட சுட்டு விடும். இதை பற்றி இப்படி நான் கூறினால் உங்களால் நம்ப முடியாது, ஏன் இப்படி இவர் நம்மை பயமுறுத்துகிறார் என்று என்ன தோன்றும், ஆனால் பட்ட பிறகு தான் எல்லாம் புரியும்.
by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================