மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 20 மார்ச், 2014

“இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே” ஜோதிட பழமொழி Proverb


“இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே ஜோதிட பழமொழி
 
                                தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசப்படும் பழமொழி “இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே. ஒரு காரியத்தை செய்ய முற்படும் போது நாம் பகலில், அதிலும் ஏறுமுகத்தில் தான் செய்கிறோம். காரணம் ஆத்ம காரகனான சூரியனின் பிரகாசம் நாம் செய்யும் ஒவ்வொரு சத்காரியங்களிலும் இருந்தால் அதில் ஒரு வெற்றி, பொலிவு ஆத்மதிருப்தி இருக்கும்.
                             உதாரணம் உழவு வேலை, அலுவலக வேலை, கல்வி இப்படி சத்துள்ள விஷயங்களை பகலிலும், அசத்துள்ள  காரியங்களை மாலை அல்லது இரவில் சந்திரனின் சாந்தமும் சந்தோஷமும் இருக்கும் நேரங்களில் செய்கிறோம். மனைவியுடன் சினிமாவிற்கு செல்பவர் காலை காட்சிக்கு செல்வது கிடையாது, மாலை காட்சி அல்லது இரவு காட்சிக்கே செல்வதை பார்ப்பீர்கள்.
                              அப்படி அவசியமாக செய்ய வேண்டும் என்றால் இரவில் கூட செய்து விடுங்கள், ஆனால் அரவில் அதாவது ராகுவின் ஆட்சி காலத்தில் செய்யாதீர்கள், காரணம் அவ்வமயம் நாம் செய்யும் காரியங்கள் நமக்கே தெரியாமல் பிரச்சனையில் முடியும் என்பதாகும்.
                             அரவு வேலை என்பது ஒவ்வொருநாளின் ராகு காலம் மட்டுமல்ல, நாம் தேர்ந்தெடுக்கும் லக்னநேரத்தில் லக்னத்தில் ராகு இருக்க கூடாது மேலும் நாம் செய்யும் காரியத்தை பொறுத்து அந்தந்த பாவத்தில் ராகு இருக்க கூடாது என்பதாகும்.
                               குடும்ப விஷயம் பேசும்போது அந்த நேரத்தின் லக்னத்திற்கு இரண்டில் ராகு இருக்க கூடாது, மனைவியிடம் தனித்து பேசும்போது ஏழில் ராகு இருக்க கூடாது. (மனைவியிடம் தனித்து பேசக்கூடிய நேரம் ஏது? என நினைப்பது புரிகிறது, அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் தருகிறேன்.)
 
 
ᴥᴥ M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம். 9443540743

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக