மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 3 மார்ச், 2014

ஜோதிடம் ஒரு அக்னி Astrology is a Fire

ஜோதிடம் ஒரு அக்னி 

               என்னிடத்தில் ஒரு அன்பர் கேட்டார் ஒரு கேள்வியை: ஜோதிட சாஸ்திரப்படி 3-6-8-12 ம் இடங்கள் மறைவு ஸ்தனங்கள் என்றால் அந்த இடங்களில் இருக்கும் கிரகங்கள் பலாபலன்கள் குறைத்து செய்யும் அல்லது பலன்களே இல்லாமல் போகும். இப்படி இருக்க, ராசிக்கு பன்னிரண்டில் சனி வரும் போது ஏழரை சனி பிடிக்கின்றது கவனம் தேவை உஷார் உஷார் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்களே இது எப்படி சாத்தியம் ஆகும்?

           இது ஒரு ஜோதிட மாணவனின் நல்ல கேள்வி. ஆனால் இந்த மாணவன் தகுந்த ஆசானிடம் ஜோதிடம் பயின்று இருந்தால் கேட்டு இருக்க மாட்டார். பரவாயில்லை இவருக்கு நமது பதில்:

            சனி பணிரண்டில் இருக்கும் போது அயன சயன இடத்தில் இருப்பதால் இந்த சுகம் மிகவும் குறையும். மேலும், இது விரைய ஸ்தானம் என்பதால் சனி சம்பந்தமான செலவுகளான, ஆஸ்பத்திரி செலவு, வட்டி கட்டுதல், தண்டனை செலவு, தண்ட செலவு, வீண் செலவு, திருடு போதல், இப்படி ஏதோ ஒரு வகையில் பணமும் விரையமாகும், உடலும் சில நேரங்களில் விரையமாகும். மேலும், படுக்கும் போது வெறுப்பும், வருத்தமும் வேதனையுடனும் படுக்கைக்கு செல்ல நேரிடும். இன்னும் நிறைய இது போல் சொல்லலாம். இருந்தாலும், நீங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும். அப்பொழுதுதான், ஜோதிடம் என்பது இலை மறை காய் எனபது புலப்படும். மேலும் ஜோதிடம் முழுதும் அந்த காலத்திலேயே ரகசியமாக பாது காத்தனர். இது குரு நாதர்கள் சிஷ்யர்களை பாத்திரம் அறிந்து கற்று கொடுத்தனர். எல்லோருக்கும் சொல்லியும் தர கூடாது என்று வேத சாஸ்திரங்களே கூறுகிறது. தகுதி உள்ளவர்கள், கொடுத்த பொக்கிஷத்தை அனாவசியமாக நினைக்காதவர்கள், அதிக வீரம் மற்றும் விவேகம் நிறைந்தவர்கள், கடவுள் பக்தி, குரு பக்தி உள்ளதா என்று சோதனை செய்த பிறகே கற்று கொடுக்க வேண்டிய கலை. ஏதோ புத்தகத்தை பார்த்து, அல்லது இப்படி பேஸ் புக் மூலம் கற்று கொண்டால் இது அவர்களை வீபரிதமாக ஏதோ ஒரு விஷயத்தில் புரிந்து கொள்ள செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே கூட அழித்து விட கூடிய மிக பெரிய நெருப்பு இந்த ஜோதிடம். எனவே அக்னி போன்ற இந்த ஜோதிடத்தை, தகுந்த ஆசானை கொண்டே பயில வேண்டும். இல்லையேல் இது நெருப்பை எடுத்தவனையே கூட சுட்டு விடும். இதை பற்றி இப்படி நான் கூறினால் உங்களால் நம்ப முடியாது, ஏன் இப்படி இவர் நம்மை பயமுறுத்துகிறார் என்று என்ன தோன்றும், ஆனால் பட்ட பிறகு தான் எல்லாம் புரியும்.
by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக