திருமணத்திற்கு
முன்பே சுகத்தின் ருசி. . . .!
இன்றைய
இந்தியா குறிப்பாக நமது தமிழகம் வெளிநாட்டு மோகத்தில் வேகமாக மூழ்கி வருகிறது.
இளைஞ்ர் கண்டதும் காதல் என்ற தத்துவத்தில் உள்ளனர். பள்ளியில் ஒரு பையன் ஒரு
பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால் அதை பற்றி கவலை படாமல் உடனடியாக
அந்த பையன் நம்மை போல் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியலை பார்த்து, பட்டியல்
நீண்டு இருந்தால் அதிக சந்தோசம் பெறுகிறான். இது போன்ற பிள்ளைகள் மற்ற அனைத்து
பிள்ளைகளையும் கெடுத்து விடுகின்றனர்.
இதே நிலை
காதல் விவகாரத்திலும் நடக்கிறது. ஒவ்வொரு பிள்ளையும் படிக்கும் போதே ஒவ்வொரு
துணையை பெற்றிருப்பது பெருமை கொள்ளும் விஷயமாக நினைக்கிறார்கள். இது இன்றைய
இளைஞர்களின் அறிவின்மையை காட்டுகிறது. இதற்கு சமுதாயம் முக்கிய காரணமாக
அமைந்தாலும், நண்பர்களின் பழக்க வழக்கங்களுமே மிக பெரிய காரணமாக அமைகிறது.
ஒரு
குழந்தை கெடுவதற்கு காரணம் அவர்களது உணர்ச்சிகளின் அழுத்தமே. உணர்வழுத்தம் தரும்
இடங்களாக ஜோதிடத்தில் ஐந்தாம் இடம், 5-அதிபதி, சந்திரன்
என ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள். இவைகள் 1,5,7
இடங்களுடன் சம்பந்தம் பெறும்போது உணர்வுகள் மேலெழுகிறது.
எரியும்
நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இவைகளுக்கு மூன்றாமிட பலமும் செவ்வாயும் துணை நிற்கின்றது. இந்த கிரக அமைப்பில், செவ்வாய்க்கோ
அல்லது லக்னத்திற்க்கோ, சுக்ரன் கேந்திரத்தில் அமர்ந்து விட்டால்
சிற்றின்பத்தை சுவைக்காமல் விடமாட்டார்கள்.
இந்த
கூட்டுகளுடன் ராகுவிற்கு சம்பந்தம் ஏற்பட்டு விட்டால் "எத்தனை மலர்கள் தாவும்
பட்டாம்பூச்சி இது எத்தனையோ தாவுமடி....." என்ற பாடல் படி நடந்துவிடும்.
மேலும்
பலன்களை அப்படியே சொல்லாமல், குழந்தைகளின் ஜாதகத்தில் குரு மற்றும்
லக்னாதிபதியின் அமைப்பை பொறுத்து பலன்கள் கூறவேண்டும். ஜோதிட அடிப்படையில்
பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளின் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து அதற்கேற்றார் போல்
அவர்களை சிறு வயதில் இருந்தே அவர்களை அவர்களுக்கே தெரியாமல்
கண்காணிக்க
வேண்டும். மேலும் அவர்களிடம் அவர்கள் நண்பர்கள் எப்படி பேசுகிறார்களோ அந்தளவிற்கு
முடிந்த வரை பேசவேண்டும். தினமும் அன்றைய பொழுதில் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை
ஆவலுடன் கேட்பது போல் கேட்க வேண்டும். அந்த நிகழ்வுகளில் எதாவது சிறு பிழைகள்
தென்பட்டால் அவர்களுக்கே தெரியாமல் அவைகளை திருத்த நாம் முயலவேண்டும். மேலும்
அன்றைய நிகழ்வுகளை குழந்தைகளிடம் நாமும் சொல்ல வேண்டும். மேலும், நாமும்
நல்வழியில் தான் செல்கிறோம் என்பதை அவ்வபொழுது அவர்களுக்கு நினைவூட்டுதல் மிக மிக
அவசியம்.
இவைகளுக்கும்
மேலே நாம் நம்மை சார்ந்த உறவினர்கள், குறிப்பாக
பெரியவர்களிடமும் நமது முதியவர்களான நமது அப்பா, அம்மா,
பாட்டி, இவர்களிடம் அதிக மரியாதையை நாம் செலுத்த
வேண்டும். தொடர்ந்து வீட்டில் நித்ய பூஜையை செய்து கொண்டும் வந்தால் நமது
சந்ததியர்களை எந்த ஒரு சக்தியாலும் கெடுக்கவே முடியாது. சந்தோஷம் எங்கும் பரவி
நமது வாழ்நாள் முடிவில் குழந்தைகள் கவலையின்றி பேரின்பத்தில் திளைக்க இயலும்.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
====================================================================================================