உதயாதி நாழிகை என்பது மணி கணக்கா? (Nazhikai convertion)
உலகில் ஜோதிட கலையில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது எனபது அனைவருக்கும் தெரியும், இதற்கு பிறகு தான் ஐரோப்பிய நாடான கிரேக் நாடு உள்ளது. ஜோதிடம் தெரிய வேண்டுமானால் அடிப்படை கணிதம் தேவை. சாதாரண கணக்கு போதும். ஒன்றே ஒன்று என்னவென்றால் கால நேரத்தை எவ்வளவுக்கு எவ்வளவு நுணுக்கமாக பார்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கணித சுத்தத்தினால் ஜோதிட பலா பலன்கள் சரியாக அமையும் என்று நம் முன்னோர்கள் கருதியதின் காரணமாக ஆங்கிலகாரர்கள் உபயோக படுத்தும் மணி நிமிட விநாடி கணக்கை விட நம்முடைய நாழிகை, (தமிழ்)வினாடி தர்பரை கணக்கை ஏற்படுத்தினார்கள்.
நம்முடைய நாட்டில் இன்னும் சிலர் நேரம் கடந்து விட்டதை "நாழி ஆகிவிட்டது" கூறுகிறார்கள். நேரத்தை அளக்க பல வழிகள் இருநதாலும், கைசிட்டிகை கணக்கு இன்றும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.
நாழிகை எனபது 24 நிமிடங்கள் ஆகும். ஆக, ஒரு மணிக்கு இரண்டரை நாழிகை ஆகின்றது. இதே போல் ஒரு நிமிடத்திற்கு இரண்டரை (தமிழ்)வினாடி.
நம்முடைய கணக்கு படி கால நேரம் சூரிய உதயத்தில் இருந்து கணக்கு போடுகிறோம். உதயாதி எனபது சூரிய உதயத்தில் இருந்து என்பதாகும். உதயாதி நாழிகை என்பது அன்றைக்கு சூரிய உதயத்தில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரையில் உள்ள கால அளவாகும்.
உதாரணமாக, இன்று சூரியன் சென்னையில் காலை 6 மணி 10 நிமிடத்திற்கு உதயமாகிறது என்று வைத்துகொள்வோம். சென்னையில் காலை 10.00 am (Indian Standard Time) க்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் நாழிகை வினாடி கணக்கில் கூற வேண்டுமானால்:
அலுவலகம் செல்ல வேண்டிய நேரம் : 10.00 IST hour.
இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலம்: 3 hour 50 minutes.
இதற்கு முன் கிழ்கண்ட அட்டவனையை நன்கு பார்த்து கொள்ளவும்.
1 நாழிகை : 24 நிமிடம்.
2.5 நாழிகை : 1 மணி.
1 நிமிடம் : 2.5 தமிழ் வினாடி.
60 நாழிகை : 24 மணி
24 மணி : 1 நாள்
60 தமிழ் வினாடி : 1 நாழிகை.
60 நிமிடம் : 1 மணி
1 மணி : 2.5 நாழிகை
1 மணி : 60 நிமிடம்
இங்கு நாம் 3 மணி 50 நிமிடத்திற்கு பார்க்க வேண்டும் என்பதால், முதலில் இதை அனைத்தையும் நிமிடங்களாக மாற்றி கொள்ளவும். அதாவது 3 மணிக்கு 180 நிமிடம் இத்துடன் 50 நிமிடத்தை கூட்டினால் 230 நிமிடங்கலகிறது.
அதாவது 3 மணி 50 நிமிடம் = 230 நிமிடம்.
1 நிமிடத்திற்கு 2.5 தமிழ் வினாடி , ஆக 230 நிமிடத்திற்கு = 575 தமிழ் வினாடி.
60 தமிழ் வினாடிக்கு 1 நாழிகை என்பதால்,
575 தமிழ் வினாடிக்கு : 9 நாழிகை, 35 தமிழ் வினாடி.
ஆக 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் நாம் உதயாதி நாழிகை 9 35 நாழிகை வினாடிக்கு செல்லவேண்டும் எனலாம்.
இதே போல் அன்றைக்கே ஒரு குழந்தை இரவு 8 மணி 45 நிமிடத்திற்கு சென்னையில் பிறப்பதாக கருதினால், அதனுடைய உதயாதி நாழிகை:
8.45 pm = 20 hour 45 minutes (IST)
Sun rise : 6.10 hour
Gap between these two:
20.45 minus 6.10 = 14 hour 35 minutes.
or
(14x60)+35 = 875 minutes
1 minute = 2.5 tamil vinadi
therefore
875 minutes = 2187.5 tamil vinadi.
60 tamil vinadi = 1 nazhikai
therefore
2187.5 tamil vinadi = 36 nazhikai 27.5 vinadi.
so, we called as
UDHAYATHI NAZHIKAI : 36.27 1/2
அதாவது 36 நாழிகை இருபத்து ஏழரை வினாடி.
ஐயா , இந்த தகவல்கள் எளிமையாக உள்ளது . உங்கள் சேவை மீண்டும் சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிரு சஞ்சய் அவர்களுக்கு மிகக் நன்றி.
நீக்குஎன்னுடைய பிறந்த நாள் நாழிகை 40 வினாடி14 எனில் எண்ணுடைய பிறந்த நேரம் என்ன
நீக்கு55.5 நாழிகை என்பது எத்தனை மணி
நீக்குஎளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள். நன்றி
பதிலளிநீக்குபகலில் நாழிகை 16 வினாடி 45 என்றால் பிறந்த நேரம் தெரிவியுங்கள்
பதிலளிநீக்குநாழிகை 32 வினாடி30 மண என்றால் பிறந்த நேரம் தெரிவியுங்கள்
பதிலளிநீக்கு33 நாளிகை to மணி
பதிலளிநீக்கு33 நாழிகை என்றால் பிறந்த நேரம் தெரிவியுங்கள்
பதிலளிநீக்கு26 naligai 40 vinadi endral time enna
பதிலளிநீக்கு53 நாழிகை, 20 வினாடிகள் என்பதற்கு எத்தனை மணி என்று கூறுங்கள். நன்றிகள்.
பதிலளிநீக்கு57 naligai ethanai Mani endru kurungal
பதிலளிநீக்கு33 நாழிகை எத்தனை மணி
பதிலளிநீக்குEnnudaiyabarthtaime11.53.nazhigaiyaga.sollaumiya
பதிலளிநீக்கு52.30
பதிலளிநீக்குஉதயாதி காலை முதல் பகல் 1நிமிடம்,50க்கு நாழிகை 19வினாடி 35க்கு
பதிலளிநீக்குஉதயாதி நாழிகை 31 நாழிகை 45 வினாடி எனில் பிறந்த நேரத்தை தெரிவியுங்கள் ஐயா நன்றி
பதிலளிநீக்குஇரண்டு மூன்று காலங்கள் ஜொதிடத்தில் காண படுகிறது..
பதிலளிநீக்குஇதில் எதை பிறந்நேரமாக கொள்வது..
ரவி உதையாதி நாழிகை 21.15 என்பது காலையா மாலையா நேரம் என்ன
பதிலளிநீக்குஉதயாதி 58 நாழிகை 58 வினாடி எனில் பிறந்த நேரத்தை தெரிவியுங்கள் ஐயா
பதிலளிநீக்குஐய வணக்கம் காலை 6நாழிகை
பதிலளிநீக்குஅருமையான மற்றும் மிக பயன் உள்ளப்பதிவு. நன்றி
பதிலளிநீக்குஅருமை எளிமை
பதிலளிநீக்கு25.00 in Indian time
பதிலளிநீக்குUdhayaadji naazhigai sarava
பதிலளிநீக்கு