மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 26 மார்ச், 2013

பிரம்மஹத்தி தோஷம் Brahmahathi Dosham

பிரம்மஹத்தி தோஷம்
 
 
ஐயா வணக்கம்,
         
               ஒருவரது ஜாதகத்தில் ராசிச்சக்கரத்தில் (லக்ன பாகை அடிப்படையில் பாவக சக்கரப்படியும்)  குருவிற்கும் சனிக்கும் தொடர்பு ஏற்பட்டால் அதாவது பரஸ்பர பார்வை, ஒரே பாவகத்தில் இருத்தல்,ஒரே சாரத்தில், பரிவர்தனை இப்படி  ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டால் அது பிரம்மஹத்தி தோஷம் என ஏதோ  ஒரு புத்தகத்தில் படித்தேன்.  இது சரியாசரி எனில் இதனால் ஜாதகர் அடையும் தீமைகள் என்ன
இதில் ஏதேனும் விதிவிலக்குகள் உண்டா?   அதாவது சனி நீசமாகி பார்ப்பது அல்லது சனி மறைந்து பார்ப்பது சனியோடு   சாயாகிரக அமர்வு இப்படி ஏதேனும் காரணத்தால் இந்த தோஷம் இல்லாமல் போகுமா
?
மேலும் சனி நல்ல ஆதிபத்யம் பெற்றிருந்தாலும் இந்த தோஷம் உண்டா?
 

 

அய்யா வணக்கம்,

             பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் எனபது பிரமத்தை அறிந்த ஒருவரை பழிபதுவோ அல்லது அவரை இம்சிப்பதோ ஆகும். சில நேரங்களில் இப்படி பிரமத்தை அறிந்த ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ கொலை செய்துவிட்டால் அதனால் பீடிக்கபடும் தோஷமே இதுவாகும். பிரமத்தை அரிந்தவர் என்று நாம் யாரை கூறலாம், ப்ரஹ்மின் (Brahmin) என்று சொல்லபடுகிற குலத்தையா? இல்லவே இல்லை. பிரமத்தை அறிந்தவன் லௌகிகவாழ்வில் இல்லாதவன். அப்படி என்றால் யார்?
ஆக நமது ஜோதிட சாஸ்திரத்தில் குலத்தின் அடிப்படையில் பிரகஸ்பதி என்கின்ற குருவை தான் அந்தணன் என்கின்றோம். அந்தணன் என்றால் என்ன? ஆதியும் இல்லாதவன், இனி இவனுக்கு பிறகு அந்தமும் இல்லாதவன்.
ஆக இப்படிப்பட்ட குருவை சனி என்கின்ற நேர்மையான கிரகம் நோக்கும் போது இந்த தோஷம் ஏற்படுகிறது. இதன் பலன் என்ன வென்றால் ஒருவன் கொலை செய்துவிட்டால் அவன் மனது என்ன வேதனை படுமோ அந்த அளவிற்கு வேதனை ஜாதகனின் வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் தெரியும். எதுவும் மனதிற்கு திருப்தி இருக்காது. மேலும் இவனுக்கு பிள்ளை பிறப்பது அரிதாகும், அல்லது காலம் தாழ்த்தி பிறக்கும், எப்படி இருந்தாலும், உயிர் போகும் போது ஜாதகனுக்கு பிள்ளை சுகம் இருக்காது, இதற்க்கு பதில் இவருக்கு சோகம் வர வாய்ப்பு உள்ளது.
குருவை சனி கிரகம் எங்கிருந்து பார்த்தாலும் இந்த தோஷம் உண்டு என்று நூல்கள் பல கூறுகிறது, இருந்தாலும் சமசப்தம பார்வையினால் குரு சனியை பார்பதால் இந்த தோஷம் அவ்வளவாக பாதிக்க வாய்ப்பு குறைவு. மற்ற பார்வைக்கு பலம் உண்டு. சனி நீச்சமாகி அல்லது அஸ்தமனமாகி, அல்லது மறைந்து இருந்து எப்படி பார்த்தாலும் இந்த தோஷம் தொடரும்.
இந்த தோஷம் பீடிக்க பட்டவர்கள் அவரவர்களுக்கு ஏற்ற குருநாதரை துணைகொண்டால் தப்பிக்க வழி வரும்.

by

M.Balasubramanian,M.A.,

எம். பாலசுப்ரமணியன்,எம். .,

Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,

Vellore Astrology Researchers Association,

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 


 


 

 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.



====================================================================================================

 

4 கருத்துகள்:

  1. /-பிரகஸ்பதி என்கின்ற குருவை தான் அந்தணன் என்கின்றோம். அந்தணன் என்றால் என்ன? ஆதியும் இல்லாதவன், இனி இவனுக்கு பிறகு அந்தமும் இல்லாதவன்-/

    மிகவும் அருமையான விளக்கம்... தொடரட்டும் உங்கள் பணி....

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா26 மே, 2013 அன்று 12:34 PM

    மீன லக்னம், லக்னத்தில் குரு ஆட்சி மற்றும் சந்திரன் ரேவதி நட்சத்திரத்தில், வக்கிர சனி மகரத்தில் ஆட்சிபெற்று மூன்றம் பார்வையாக குருவை பார்க்கிறார். செவ்வாய் சிம்மத்திலிருந்து எட்டாம் பார்வையாக மீனதை பார்க்கிறார் எனக்கு பிரமகத்தி தோஷம் உண்டா?
    kannaamaruthuseemai@gmail.com

    பதிலளிநீக்கு