மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 1 மார்ச், 2013

ஓங்காளி பூஜை ஜோதிடன் OngKaali Jothidan


ஓங்காளி பூஜை ஜோதிடன்



                    ஜோதிடம் என்பது வேத சாஸ்திரம் என்றும் இது ஒரு விஞ்ஞான கலை என்றும் முழுக்க முழுக்க கணிதத்தை சார்ந்துள்ளது என்று பல்வேறு விதமாக ஜோதிடர்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஜோதிடர்கள் சொல்லும் பலன் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமகவும் சொல்ல படுகிறது. ஒரே ஜோதிடர் ஒருவருக்கே வெவ்வேறு விதமாக வெவ்வேறு சமயங்களில் கூற வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. பொதுவாக பார்த்தால் ஜோதிடர்களின் திறமையின் பங்கு இதில் அதிகம் உள்ளது. ஒரு சிலருக்கு திறமை என்பதே என்னவென்றே தெரியாது, இருந்தாலும் அவர்கள் கூறும் அனைத்து விசயங்களும் ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு பிடித்து விடும்.
 
                 ஒரு சிலர் ஜோதிடர் வாய் திறந்து என்ன கூறினாலும் அப்படியே செய்பவரும் இருக்க தான் செய்கிறார்கள். அவ்வளவு மதிப்பும் மரியாதையும் ஜோதிடர் மேல் வைத்துள்ளார்.
 
             இதை நாம் ஆராயும் போது திறமையே இல்லாதவரை சமுதாயம் அதிகம் மதிப்பு கொடுக்கிறது என்றால் அவரிடம் ஏதோ ஒன்று உள்ளது. அது என்ன? அது தான் தெய்வ அனுக்கிரகம். தெய்வ வழிபாடுகள் பல் வேறு விதமாக உள்ளது. இதில் பிரசித்தி பெற்றது காளி பூஜையே. குழந்தைகள் அவர்களுடைய தேவைகளை அப்பாவிடம் கேட்பதை விட அம்மாவிடம் கேட்கிறார்கள், அம்மா கருணையே வடிவானவர்கள். அன்பின் காரணமாக குழந்தைக்கு கெடுதி செய்யும் என்று தெரிந்தாலும் குழந்தை கேட்பதற்காக கொடுப்பார்கள்.
 
               இதே கோட்பாட்டை தான் ஜோதிடர்கள் உலக நலனுக்காகவும், ஒரு சிலர் தன் சுயதேவைக்ககவும் அம்மாவிடம், அதாவது ஜெகன் மாதா வடிவிலனா, அம்பாளிடம் கேட்கிறார்கள். அன்பு அதிகம் செலுத்துபவர்களிடம் அம்பாளே இறங்கி வந்து என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள்.
 
                  சில ஜோதிடர்களின் ஜென்ம ஜாதகத்தில் அம்பாள் வந்து உதவிகள் செய்ய வேண்டிவரும். அப்படிப்பட்ட ஜோதிடர்கள் அம்பாளை தம்முடனே வைத்துகொள்ள தினசரி பூஜை செய்வார்கள்.  இப்படிப்பட்ட பூஜைகளில் முதலில் உள்ளது ஓங்காளி பூஜை. ஜென்ம ஜாதகத்தில் லக்னம் எதுவாக அமைந்தாலும் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் அந்த வீட்டின் அதிபதியுடன் ராகு சேர்ந்தால் அந்த ஜாதகன் காளி பூஜை செய்து வேண்டியதை பெறுவான். இந்த கிரக கூட்டுகளுடன் செவ்வாய் சேர்ந்தவர்கள் காளிக்கு இரத்தப்படையல் போட்டு தன் காரியத்தை சாதித்து கொவர்கள். இதற்கும் மேலாக மலையாள நாட்டில் அதிகம் முக்கியதுவம் தரும் கிரகமான குளிகன் என்கின்ற மாந்தி சேர்ந்தால் இந்த ஜோதிடனை வெல்வது மனித சக்தியினால் முடியாது. அந்த அளவிற்க்கு மந்திர சக்தி அதிகம் உள்ள மந்திரவாதியாக மாறுவான்.
 
                                                     இந்த ஜோதிடன் வரம் கொடுத்தவன் தலையையே வெட்ட முயல்வான். காளியிடம் இவன் தொடர்ந்து அன்புடன்  நடந்து கொண்டால் இவன் மேலும் புகழ் பெறுவான். ஆனால் இவன் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியின் நிலைகொண்டு இவன் அழிவை கூற முடியும். ஜென்ம ஜாதகத்தில் தேவகுருவினை பொறுத்து இந்த ஜோதிடன் சமுதாயத்திற்கு நன்மை செய்வானா?  இல்லையா? என அறியலாம்.
                                       இரண்டாம் அதிபதியுடன் செவ்வாய் மட்டும் சேர்ந்தவர்கள் அய்யனார், ருத்திரன், வீரபத்திரன் போன்றோர்களை வழிபட்டு ஜோதிடம் சொல்லுவார்கள். சுக்ரன் ஜாதகத்தில் ராகு சாரமோ அல்லது ராகு சுக்ர சாரமோ அமைய 
பெற்றவர்கள் இந்த பூஜைகளில் பெண்களையும் சேர்த்து கொள்வார்கள்.
                        
             ஓங்காளி பூஜையில் பிரிவுகள் பல உள்ளது. சண்டி, சாமுண்டி, ஆங்காளி, நீலிகா தேவி, பைரவி, ரௌத்தரி, கௌமாரி, வாரகி, ரத்த காட்டேரி, பூஜைகள் உள்ளது. இதில் அவரவர் ஜென்ம லக்னங்களுக்கு ஏற்ற தேவதைகளை வழிபடவேண்டும். இதில் மாறி வழிபட்டாலும் பலன்கள் தவறி விடும்.
                       எது எப்படியோ, ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வழிபட்டால் தான் ஜோதிடன் நன்றாக இருக்க முடியும்.
 ********************************************************************************************************************************************
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
 
*******************************************************************************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக