மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 31 டிசம்பர், 2015

லக்னத்தில் சர்பகிரகங்கள் இருந்தால் சாப்பாடு கிடைக்குமா...? lagna kethu ragu

லக்னத்தில் சர்பகிரகங்கள் இருந்தால் சாப்பாடு கிடைக்குமா...?

      ஆண் ராசிகளில் உள்ள லக்ன கேது உறவுகளும், பந்தங்களும் நம்மிடம் ஒட்டி உறவாட வேண்டும் என நினைப்பார், அப்படி உறவுகள் உரிமையோடு உறவாட வரும்போது உம்மென்று இருந்து உறவுகளை ஓடவிட்டுவிடுவர். இதே போல தான் பெண் ராசிகளில் உள்ள லக்ன கேது வசதி வாய்ப்புகள் நம்மை தேடி வரவேண்டும் என்று இருப்பவர்கள். அப்படி அவர்களை வாய்ப்புகள் தேடி போனாலும் அவைகளை உதறிவிட்டு வாழ்வதே வாழ்க்கையாக இருப்பார்கள்.

     லக்ன கேது உள்ளவர்கள் பெரும்பாலும் திருவாசகத்தில் கையாளப்பட்ட வார்த்தையான “நெறியில்லா நெறிதன்னை நெறியாக நினைத்து அமைந்த நிலையான வாழ்க்கையை நிலைகுலைத்து விட்டு இறைவனை நிந்திப்பார்கள்.

        ஆண்ராசிகளில் உள்ள லக்ன ராகு உறவுகள், பந்தங்கள், காதலர்கள் மீது அபரிமிதமான நெருக்கங்களை தாமே வளர்த்துகொண்டு தீடீர் என்று தவறாக தாமே நினைத்துகொண்டு இவர்களை கழற்றி விட்டுவிட்டு மேற்கண்ட உறவுகள் நம்மை ஏமாற்றி விட்டதாக இறுதியில் தன்னைத்தானே ஏமாற்றி கொள்வர். இவர்கள் அடிகடி வாழ்க்கையில் சொந்தபந்தநட்புக்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

     பெண் ராசிகளில் உள்ள லக்ன ராகு உலக பொருள்கள் அனைத்தையும் தமதாக்கி எக்ஸ்பிரஸ் வேகத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டு இறுதியில் அந்த பொருள்களே அவர்களுக்கு அல்லலை கொடுக்குபோது, அந்த பொருள்களை விட்டு விட்டு வேறு பொருள்கள் மீது வேட்கை திரும்பும்.இவர்கள் அடிகடி வாழ்க்கையில் இடமாற்றங்களை சந்திப்பார்கள்.

    பொதுவாக, லக்ன கேது உள்ளவர்கள் ஆரம்பத்தில் இருந்து அய்சாட்டியம் பண்ணி அமைதியற்று இருப்பார்கள், ஆனால் லக்ன ராகு இருப்பவர்கள் அனைத்தையும் அனுபவித்து அமைதியற்று இருப்பார்கள். எது எப்படியோ, லக்னத்தில் சர்பகிரகங்கள் இருப்பவர்கள் அமைதியற்று தான் இருப்பார்கள்.  சுருங்ககூறின், சாப்பிடாமல் கஷ்டபடுவது ஒரு ரகம், அதிகம் சாப்பிட்டுவிட்டு கஷ்டபடுவது அடுத்த ரகம். 

********************************************************************* 




சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002


********************************************************************* 


சனி, 3 அக்டோபர், 2015

முண்டம்-தண்டம்-பிண்டம் munda-dhanda-pinda

முண்டம் - தண்டம் - பிண்டம்

கயா சூரன் விஷ்ணுவிடம் வேண்டி கொண்டதற்கு இணங்க அவனது உடலை தொட்டவர்கள் அனைவரும் சொர்கத்திற்கு போவதாகவும், அவன் ஆலமர உருவில் தலையை கயாவிலும், உடலை காசியிலும், அடிபாகத்தை பிரயாகையிலும் வைத்திருக்கிறார். இவரது உடலின் மூன்று பகுதிகளையும் தொடுவதின் பொருட்டு நாம் இந்த மூன்று இடங்களிலும் கங்கையில் நீராடுகிறோம். 

காசியில் அன்னபூரணி பிரமஹத்தி சபாத்தால் பாதிக்கப்பட்ட விஸ்வநாதருக்கு அன்னம் பாலிக்கிறார்.

முண்டம்-தண்டம்-பிண்டம்      அட்சயவடம் (ஆலமரம் வேர்)
வேர் அடிபாகம்
மத்திம பாகம்
நுனி பாகம்
முண்டம் (மொட்டை அடித்தல்)

பிரயாகை @ அலகாபாத்

கங்கை, யமுனை & அந்தர்வாகினியாக சரஸ்வதி கூடும் திரிவேனிசங்கமம்.

கும்பமேளா நடக்கும் இடம். (மீதி மூன்று நாசிக், உஜ்ஜெயின் & ஹரித்துவார்)

வேணி மாதவ பெருமாள் கோவில்

அலோபி தேவி – சக்தி பீடங்களில் ஓன்று
சோமேஸ்வர் கோவில்
அனுமார் கோவில்
பரத்வாஜர் ஆசிரமம்
நேரு ஆனந்த பவன்
தண்டம் (வணங்குதல்)
காசி @ வாரணாசி
முக்தி ஸ்தலம்
பஞ்சநதி சிரார்த்தம் செய்து அன்னபூரணி, விஸ்வநாதர், விசாலாக்ஷி, காலபைரவர் (காசி கயிறு)
சங்கர மடம்
கௌடி மாதா கோவில் (சோழி அம்மன்)
விஸ்வநாதர் முன் நந்தி இல்லை, அதற்கு பதில் ஊர் முழுவதும் பசு கூட்டங்கள்

சாமியார்கள் பைராகிகள்  அஹோரிகள்
தாந்திரிகர்கள்
காசி அல்வா
பனராஸ் புடவை- முஸ்லிம் செய்கிறார்கள்
செப்புகலசத்தில் கங்கை நீர்
ஹரிச்சந்திரா காட் (மணிகர்ணிகா காட்)

ஹிரண்ய சிரார்த்தம்
மகா சங்கல்பம்
பிராய சித்தம்
அனுக்ஜை
பலதானம்
வபனம் ( சரீரம் விடுவதற்கு பதில் கட்டிய வேஷ்டியை கங்கையில் விடுதல்)

அனுமான் காட்- அன்னசிரர்த்தம்
பிண்டம் (சமர்பித்தல்)
கயா (அட்சய மரம் இங்குள்ளது.)
பிண்ட பிரசாதம் அரிசி மாவினால்.

பஞ்ச சிரார்த்தம் = முன்னோர்கள் பெயர்களை பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

மனித யக்ஞம்= ஒரு அதிதிக்கு உணவு அளித்தல்
பிரம்மா யக்ஞம்=யாகம் செய்யும் அந்தணருக்கு உணவளிப்பது
பூத யக்ஞம்= பிராணிகளுக்கு உணவளிப்பது.
 பித்ரு யக்ஞம்= முன்னோர்களுக்கு பிண்டதானம்
ஆத்ம பிண்டம் = தன்னையே பிண்டமாக பாவித்து விஷ்ணு பாதத்தில் ஒப்படைப்பது (தன் உடலை பிண்டமாக)  இது செய்தவர்கள் ஊர் திரும்ப கூடாது திரும்பினால் பாவம் ஏற்பட்டு சந்ததி அழியும்.
ராமர் சீதையுடன் வந்து இங்கு பிண்ட தானம் அளித்தார்.
இங்கு காய், பழம், இலை மூன்றும் விடுதல் ( காமம், குரோதம் & மோகம் விடுதல்)
சித்தாந்த ரத்னா, பஞ்சாங்க கணிதர் ஜோதிடமாமணி M.பாலசுப்ரமணியன்,M.A., 
 Siva  Astrological Research Bureau, Vellore-2   

அலஹாபாத் பிரயாகை திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நிகழ்வில் தீர்த்தமாடுதல்.




காசி என்கின்ற வாரணாசி.



கயாவில் பிண்டதர்ப்பணம் செய்யும் காட்சி.



பூர்வபுண்ணிய தோஷத்தை போக்கும் பிதுர் தர்பணம்

பிதுர் தோஷம் உள்ள ஜாதகம் அமைப்பு:

5-இல் ராகு/கேது
5-மாதி 6-8-12 இல்
5-மாதி 6-8-12 அதிபதி சாரத்தில்
5-மாதி சத்ரு ஸ்தானத்தில்.
5-க்கு பாவகத்திரி தோஷம்
5-மாதியுடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்வை பெறுதல்
5-மாதி குருவாகி புதன் வீடுகளில் இருப்பது.
5-இடம் கெட்டு 9-இல் பல பாவிகள் இருப்பது.
5-மாதி நீச்சம்/அஷ்தங்க தோஷம்/சர்ப்ப சேர்க்கை
5-இல் சனி அல்லது மாந்தி இருந்து செவ்வாயால் பார்வை பெறுதல்.

ஜாதகம் இல்லாதவர்கள் பித்ரு தோஷங்களை காண்பது எப்படி?

தரித்திரம் தொடர் வறுமை.
எதிலும் திருப்தியின்மை
பெற்ற பிள்ளைகளால் அசிங்கம்
குழந்தை பிறக்காமல் இருத்தல்
பெண் பிள்ளைகள் மட்டுமே பிறப்பது
துர் மரணங்கள்
மகன் வயிற்று பிள்ளை பிறப்பு தடை
குடும்பத்தில் வழிவழியாக ஒரு குழந்தை புத்தி சுவாதீனம் இல்லாமல் இருத்தல்
வீட்டில் உள்ள பெண்கள் சோரம் போகுதல்
வம்சத்தில் வழிவழியாக 30-35 வயதில் ஆண் பிள்ளைகள் மரணமாகுதல்.
பெண்பிள்ளைகள் போன வேகத்தில் விதவைகளாக திரும்புதல்.
நம் கண் முன் நம் பிள்ளைகள் மரணமாகுதல்
நம் பேர பிள்ளைகள் இறந்து நமது நமது பிள்ளைகள் துக்கம் அடைதல்.

மேற்கண்ட ஜாதக அமைப்பு ஏற்படுவதற்கு காரணம்

பித்ருக்கள் சாபம்,
குலதெய்வ வழிபாடு மறத்தல்
துர்தேவதா தோஷம்
பிரேத தோஷம்
பிசாசு தோஷம்
பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகர்.

For Further details contact: www.balajothidar.blogspot.com




தர்ப்பணம்
தில தர்ப்பணம் = எள்ளுடன் கலந்த நீரை தெற்கு நோக்கி தாரை வார்ப்பது.
தென்புலத்தார் பிறகு தான் தெய்வம் – திருவள்ளுவர்
வீட்டில் கிழக்கு நோக்கி தர்பாசனத்தில் அமர்ந்து முதலில் கணபதி  பிறகு பித்ருக்களின் அதிதேவதா சூரியனை பூஜித்தல்.
முன்னோர்கள் சூட்சும தேகத்தால் வந்து ஆசிர்வாதம் தருவர். நமக்காக குலதெய்வத்திடமும் இறைவனிடமும் போராடுவர்.

யார் யார் தர்பணம் செய்யலாம்.
தந்தை இழந்த ஆண்கள்.
கணவனை இழந்த பெண்கள் தனது மகன் வளரும் வரை செய்யலாம்.
விதவைகள் மறுதிருமணம் செய்து கொண்டால் பண்ணகூடாது.
தாய் இறந்து, தந்தை உள்ளவர்கள் செய்ய கூடாது.

அவசியம் திதி தர்ப்பணம் செய்யகூடிய நாட்கள்:
வருடாந்திர திதி.
மகாளய பட்சம். புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சம். 15 நாட்கள்.
மாதபிறப்பு நாள். (முக்கியமாக மகர சங்கராந்தி, கடக சங்கராந்தி, மேஷ ஸ்நானம் & துலா ஸ்நானம்.)
ஒவ்வொரு அமாவாசை தினம் (ஆடி, தை, புரட்டாசி)

https://www.facebook.com/Balajothidar



திதி தர்ப்பணம் வகைகள்:

பித்ரு தர்ப்பணம் & காருண்யா தர்ப்பணம்

பித்ரு: தந்தை, தாத்தா, தாத்தாவின் தந்தை = பிண்டம்
        இதற்கு முன் மூன்று தலைமுறை = பிண்டலேபனம்.

காருண்யா = மாமா, மாமி, மற்ற உறவினர்கள், குரு நாதர்கள், நண்பர்கள், வீட்டு விலங்குகள், etc..
ஸபிண்டி கரணம்: 12-வது நாள் காரியம்.

வருடத்தில் 96 நாட்கள் சிரார்த்தம் செய்யவேண்டும்.

நித்ய சிரார்த்தம்.

நைமித்திக சிரார்த்தம் = (மாகளயம், அமாவாசை, மாதபிறப்பு, சங்கராந்தி, வருட சிரார்த்தம், etc..)

காம்ய சிரார்த்தம்: விரும்பும் போது செய்வது.

விருத்தி சிரார்த்தம்: குழந்தை பிறந்தவுடன் செய்வது.

கயா சிரார்த்தம்:  காசி கயாவில் பிண்ட தர்ப்பணம் செய்வது.

அஷ்டக சிரார்த்தம்: வருடத்தில் நான்கு தேய்பிறை அஷ்டமியில் செய்வது.

நாந்தி சிரார்த்தம்: திருமணம், கிரகபிரவேசம், நாமகரணம், உபநயனம், புத்திரமுக தரிசனம், etc.. = பூர்வ பிரயோகம். இதில் எள்ளுக்கு பதில் அருகம்புல் & அட்சதை உபயோகிக்க வேண்டும்.

புரட்டாசியில் பிரம்மன் நடத்தும் பிரமோர்ச்சவத்தில் கலந்து கொள்ள பித்ருக்கள் பூலோகம் வருகை.  புண்ணிய நதிகளில் சூட்சும தேகத்தால் நீராடி, இந்த மாகளயபட்சத்தில் நாம் தரும் தர்பனங்களை ஏற்று ஐப்பசியில் துலா ஸ்நானம் முடித்து செல்வதாக ஐதீகம்.

தர்ப்பணம் செய்யும் தெய்வங்கள்:

திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜாவிற்கு அண்ணாமலையார் வருடாந்திர தர்ப்பணம் செய்கிறார்.
கும்பகோணத்தில் சாரங்கபாணி தன் பக்தனுக்காக தர்ப்பணம் செய்கிறார்.
திலதர்பனபுரியில் ஸ்ரீ ராமர் ஜடாயுக்கு தர்ப்பணம் செய்கிறார்.
செங்கல்பட்டு நென்மேலியில் சிரார்த்த சம்ரட்சன பெருமாள் நித்திய தர்ப்பணம் செய்கிறார்.

சித்தாந்த ரத்னா, பஞ்சாங்க கணிதர் ஜோதிடமாமணி M.பாலசுப்ரமணியன், M.A.
 Siva  Astrological Research Bureau, Vellore-2  cell 9443540743  9842376566


வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஆவணி அவிட்டம் - உபநயனம் பூணூல் - aavani அவிட்டம்

ஆவணி அவிட்டம் -    உபநயனம் பூணூல் சடங்கு.






  எட்டு வயது முதல் பதினாறு வயதிற்குள் மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  உபநயனம் (additional eye, ie. The so called THIRD EYE) என்பதில் இரண்டு இருக்கின்றன. ஒன்று பூணூல் (SACRED THREAD) போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது,  முக்கிய அம்சம்  ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும்.  உபநயனம், ப்ரம்மோபதேசம் என்கிறோம்.

  பூணூல் அணிவது ஒரு மனோவியல் ரீதியான ஒழுக்க நெறியை பின்பற்றுவதற்கு உபாயமாக கடைபிடிக்கபடுகிறது.   பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன. சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன.  


புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது.
புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் "
இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது.


முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர்.

காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும்,
குடுமபஸ்தான் - இரு புரியும்,
சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தன


ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம் கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில் ச்ரவண நட்சத்திரத்தன்று  (திருவோணம்) அந்த நாள் தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள் ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.  சாம வேதத்திற்கு ஆவணிமாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தன்று செய்துகொள்வார்கள்.


இந்த உபாகர்மா (Additional Daily duties) அன்று தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்  தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்  கொள்வது முக்கியமாக இருந்தாலும்,   பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும். ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் (பழைய வினைகளின் பாக்கியை அழிக்க வேண்டி ஜபம்) செய்வது மறுநாள் காயத்ரீ ஜபம் செய்யவேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் இருக்கின்றன. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன் மனத்தூய்மைதான்.  

 

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் "ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்' என்பதாகும். இம்மந்திரத்தை தினம் மூன்று வேளை 108 முறையாவது  ஜபிக்க பாவம் நிவர்த்தியாகும்.




பிராமணர்கள், செட்டியார்கள், ஆச்சாரிகள், கருமார்கள், கருணீகர்கள், வள்ளுவர்கள் என தமிழ்நாட்டில் பல்வேறுபட்ட சமூக மக்கள் இந்த பூணூலை பயன்படுத்தினாலும், யார் ஒருவன் பிரம்மஞானத்தை தெரிந்து கொள்ள முயல்கிறனோ அவனே இதை அணிய தகுதியானவன் மற்றபடி சமூகத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 


இம்மந்திரம் பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீர்யம்,  தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்துகிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளைக் கொடுக்கிறது.  




  காயத்ரிக்கு மூன்று கண்கள், ஐந்து முகங்கள், பத்து கரங்கள் உண்டு. வாகனம்- அன்னம். சிவன்போல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்து முகங்களும் செய்கின்றன. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து சக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்து முகங்கள். 
விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டது.  



  காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. எனவே சூரியனை வணங் குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும்.  

காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.