மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 3 அக்டோபர், 2015

முண்டம்-தண்டம்-பிண்டம் munda-dhanda-pinda

முண்டம் - தண்டம் - பிண்டம்

கயா சூரன் விஷ்ணுவிடம் வேண்டி கொண்டதற்கு இணங்க அவனது உடலை தொட்டவர்கள் அனைவரும் சொர்கத்திற்கு போவதாகவும், அவன் ஆலமர உருவில் தலையை கயாவிலும், உடலை காசியிலும், அடிபாகத்தை பிரயாகையிலும் வைத்திருக்கிறார். இவரது உடலின் மூன்று பகுதிகளையும் தொடுவதின் பொருட்டு நாம் இந்த மூன்று இடங்களிலும் கங்கையில் நீராடுகிறோம். 

காசியில் அன்னபூரணி பிரமஹத்தி சபாத்தால் பாதிக்கப்பட்ட விஸ்வநாதருக்கு அன்னம் பாலிக்கிறார்.

முண்டம்-தண்டம்-பிண்டம்      அட்சயவடம் (ஆலமரம் வேர்)
வேர் அடிபாகம்
மத்திம பாகம்
நுனி பாகம்
முண்டம் (மொட்டை அடித்தல்)

பிரயாகை @ அலகாபாத்

கங்கை, யமுனை & அந்தர்வாகினியாக சரஸ்வதி கூடும் திரிவேனிசங்கமம்.

கும்பமேளா நடக்கும் இடம். (மீதி மூன்று நாசிக், உஜ்ஜெயின் & ஹரித்துவார்)

வேணி மாதவ பெருமாள் கோவில்

அலோபி தேவி – சக்தி பீடங்களில் ஓன்று
சோமேஸ்வர் கோவில்
அனுமார் கோவில்
பரத்வாஜர் ஆசிரமம்
நேரு ஆனந்த பவன்
தண்டம் (வணங்குதல்)
காசி @ வாரணாசி
முக்தி ஸ்தலம்
பஞ்சநதி சிரார்த்தம் செய்து அன்னபூரணி, விஸ்வநாதர், விசாலாக்ஷி, காலபைரவர் (காசி கயிறு)
சங்கர மடம்
கௌடி மாதா கோவில் (சோழி அம்மன்)
விஸ்வநாதர் முன் நந்தி இல்லை, அதற்கு பதில் ஊர் முழுவதும் பசு கூட்டங்கள்

சாமியார்கள் பைராகிகள்  அஹோரிகள்
தாந்திரிகர்கள்
காசி அல்வா
பனராஸ் புடவை- முஸ்லிம் செய்கிறார்கள்
செப்புகலசத்தில் கங்கை நீர்
ஹரிச்சந்திரா காட் (மணிகர்ணிகா காட்)

ஹிரண்ய சிரார்த்தம்
மகா சங்கல்பம்
பிராய சித்தம்
அனுக்ஜை
பலதானம்
வபனம் ( சரீரம் விடுவதற்கு பதில் கட்டிய வேஷ்டியை கங்கையில் விடுதல்)

அனுமான் காட்- அன்னசிரர்த்தம்
பிண்டம் (சமர்பித்தல்)
கயா (அட்சய மரம் இங்குள்ளது.)
பிண்ட பிரசாதம் அரிசி மாவினால்.

பஞ்ச சிரார்த்தம் = முன்னோர்கள் பெயர்களை பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

மனித யக்ஞம்= ஒரு அதிதிக்கு உணவு அளித்தல்
பிரம்மா யக்ஞம்=யாகம் செய்யும் அந்தணருக்கு உணவளிப்பது
பூத யக்ஞம்= பிராணிகளுக்கு உணவளிப்பது.
 பித்ரு யக்ஞம்= முன்னோர்களுக்கு பிண்டதானம்
ஆத்ம பிண்டம் = தன்னையே பிண்டமாக பாவித்து விஷ்ணு பாதத்தில் ஒப்படைப்பது (தன் உடலை பிண்டமாக)  இது செய்தவர்கள் ஊர் திரும்ப கூடாது திரும்பினால் பாவம் ஏற்பட்டு சந்ததி அழியும்.
ராமர் சீதையுடன் வந்து இங்கு பிண்ட தானம் அளித்தார்.
இங்கு காய், பழம், இலை மூன்றும் விடுதல் ( காமம், குரோதம் & மோகம் விடுதல்)
சித்தாந்த ரத்னா, பஞ்சாங்க கணிதர் ஜோதிடமாமணி M.பாலசுப்ரமணியன்,M.A., 
 Siva  Astrological Research Bureau, Vellore-2   

அலஹாபாத் பிரயாகை திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நிகழ்வில் தீர்த்தமாடுதல்.




காசி என்கின்ற வாரணாசி.



கயாவில் பிண்டதர்ப்பணம் செய்யும் காட்சி.



பூர்வபுண்ணிய தோஷத்தை போக்கும் பிதுர் தர்பணம்

பிதுர் தோஷம் உள்ள ஜாதகம் அமைப்பு:

5-இல் ராகு/கேது
5-மாதி 6-8-12 இல்
5-மாதி 6-8-12 அதிபதி சாரத்தில்
5-மாதி சத்ரு ஸ்தானத்தில்.
5-க்கு பாவகத்திரி தோஷம்
5-மாதியுடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்வை பெறுதல்
5-மாதி குருவாகி புதன் வீடுகளில் இருப்பது.
5-இடம் கெட்டு 9-இல் பல பாவிகள் இருப்பது.
5-மாதி நீச்சம்/அஷ்தங்க தோஷம்/சர்ப்ப சேர்க்கை
5-இல் சனி அல்லது மாந்தி இருந்து செவ்வாயால் பார்வை பெறுதல்.

ஜாதகம் இல்லாதவர்கள் பித்ரு தோஷங்களை காண்பது எப்படி?

தரித்திரம் தொடர் வறுமை.
எதிலும் திருப்தியின்மை
பெற்ற பிள்ளைகளால் அசிங்கம்
குழந்தை பிறக்காமல் இருத்தல்
பெண் பிள்ளைகள் மட்டுமே பிறப்பது
துர் மரணங்கள்
மகன் வயிற்று பிள்ளை பிறப்பு தடை
குடும்பத்தில் வழிவழியாக ஒரு குழந்தை புத்தி சுவாதீனம் இல்லாமல் இருத்தல்
வீட்டில் உள்ள பெண்கள் சோரம் போகுதல்
வம்சத்தில் வழிவழியாக 30-35 வயதில் ஆண் பிள்ளைகள் மரணமாகுதல்.
பெண்பிள்ளைகள் போன வேகத்தில் விதவைகளாக திரும்புதல்.
நம் கண் முன் நம் பிள்ளைகள் மரணமாகுதல்
நம் பேர பிள்ளைகள் இறந்து நமது நமது பிள்ளைகள் துக்கம் அடைதல்.

மேற்கண்ட ஜாதக அமைப்பு ஏற்படுவதற்கு காரணம்

பித்ருக்கள் சாபம்,
குலதெய்வ வழிபாடு மறத்தல்
துர்தேவதா தோஷம்
பிரேத தோஷம்
பிசாசு தோஷம்
பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகர்.

For Further details contact: www.balajothidar.blogspot.com




தர்ப்பணம்
தில தர்ப்பணம் = எள்ளுடன் கலந்த நீரை தெற்கு நோக்கி தாரை வார்ப்பது.
தென்புலத்தார் பிறகு தான் தெய்வம் – திருவள்ளுவர்
வீட்டில் கிழக்கு நோக்கி தர்பாசனத்தில் அமர்ந்து முதலில் கணபதி  பிறகு பித்ருக்களின் அதிதேவதா சூரியனை பூஜித்தல்.
முன்னோர்கள் சூட்சும தேகத்தால் வந்து ஆசிர்வாதம் தருவர். நமக்காக குலதெய்வத்திடமும் இறைவனிடமும் போராடுவர்.

யார் யார் தர்பணம் செய்யலாம்.
தந்தை இழந்த ஆண்கள்.
கணவனை இழந்த பெண்கள் தனது மகன் வளரும் வரை செய்யலாம்.
விதவைகள் மறுதிருமணம் செய்து கொண்டால் பண்ணகூடாது.
தாய் இறந்து, தந்தை உள்ளவர்கள் செய்ய கூடாது.

அவசியம் திதி தர்ப்பணம் செய்யகூடிய நாட்கள்:
வருடாந்திர திதி.
மகாளய பட்சம். புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சம். 15 நாட்கள்.
மாதபிறப்பு நாள். (முக்கியமாக மகர சங்கராந்தி, கடக சங்கராந்தி, மேஷ ஸ்நானம் & துலா ஸ்நானம்.)
ஒவ்வொரு அமாவாசை தினம் (ஆடி, தை, புரட்டாசி)

https://www.facebook.com/Balajothidar



திதி தர்ப்பணம் வகைகள்:

பித்ரு தர்ப்பணம் & காருண்யா தர்ப்பணம்

பித்ரு: தந்தை, தாத்தா, தாத்தாவின் தந்தை = பிண்டம்
        இதற்கு முன் மூன்று தலைமுறை = பிண்டலேபனம்.

காருண்யா = மாமா, மாமி, மற்ற உறவினர்கள், குரு நாதர்கள், நண்பர்கள், வீட்டு விலங்குகள், etc..
ஸபிண்டி கரணம்: 12-வது நாள் காரியம்.

வருடத்தில் 96 நாட்கள் சிரார்த்தம் செய்யவேண்டும்.

நித்ய சிரார்த்தம்.

நைமித்திக சிரார்த்தம் = (மாகளயம், அமாவாசை, மாதபிறப்பு, சங்கராந்தி, வருட சிரார்த்தம், etc..)

காம்ய சிரார்த்தம்: விரும்பும் போது செய்வது.

விருத்தி சிரார்த்தம்: குழந்தை பிறந்தவுடன் செய்வது.

கயா சிரார்த்தம்:  காசி கயாவில் பிண்ட தர்ப்பணம் செய்வது.

அஷ்டக சிரார்த்தம்: வருடத்தில் நான்கு தேய்பிறை அஷ்டமியில் செய்வது.

நாந்தி சிரார்த்தம்: திருமணம், கிரகபிரவேசம், நாமகரணம், உபநயனம், புத்திரமுக தரிசனம், etc.. = பூர்வ பிரயோகம். இதில் எள்ளுக்கு பதில் அருகம்புல் & அட்சதை உபயோகிக்க வேண்டும்.

புரட்டாசியில் பிரம்மன் நடத்தும் பிரமோர்ச்சவத்தில் கலந்து கொள்ள பித்ருக்கள் பூலோகம் வருகை.  புண்ணிய நதிகளில் சூட்சும தேகத்தால் நீராடி, இந்த மாகளயபட்சத்தில் நாம் தரும் தர்பனங்களை ஏற்று ஐப்பசியில் துலா ஸ்நானம் முடித்து செல்வதாக ஐதீகம்.

தர்ப்பணம் செய்யும் தெய்வங்கள்:

திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜாவிற்கு அண்ணாமலையார் வருடாந்திர தர்ப்பணம் செய்கிறார்.
கும்பகோணத்தில் சாரங்கபாணி தன் பக்தனுக்காக தர்ப்பணம் செய்கிறார்.
திலதர்பனபுரியில் ஸ்ரீ ராமர் ஜடாயுக்கு தர்ப்பணம் செய்கிறார்.
செங்கல்பட்டு நென்மேலியில் சிரார்த்த சம்ரட்சன பெருமாள் நித்திய தர்ப்பணம் செய்கிறார்.

சித்தாந்த ரத்னா, பஞ்சாங்க கணிதர் ஜோதிடமாமணி M.பாலசுப்ரமணியன், M.A.
 Siva  Astrological Research Bureau, Vellore-2  cell 9443540743  9842376566