மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 23 நவம்பர், 2013

பிரிந்த சகோதரர்களை இணைக்கும் செவ்வாய் -brothers dispute

பிரிந்த சகோதரர்களை இணைக்கும் செவ்வாய்           செவ்வாய் கேது தசா புக்திகளில் பிரிந்த சகோதரர்கள் ஜென்ம செவ்வாயை கோச்சார குரு பார்க்கும் போதோ அல்லது லக்னாதிபதி மூன்றாமாதி தசா புக்திகளில் ஓன்று சேர வாய்ப்பு.  மூன்றில் செவ்வாய் இருந்தாலும் அல்லது ஒரு பாவ கிரகம் இருந்து அதை வேறு ஒரு சர்பகிரகம் பார்த்தாலும் பிரிந்தவர்கள் சேர்வது இறைவன் கையில். மூன்றாம் இடத்தில் லக்னாதிபதி அமர்ந்துவிட்டால் சகோதரர் திட்டினாலும் கவலை படமாட்டார். உறவு பலப்படும். இதே அமைப்பு லக்னாதிபதியை மூன்றாம் அதிபதி பார்த்தாலும் நடக்கலாம். லக்னாதிபதி பலம் குறைந்து, மூன்றாமாதி பாவியாகி பலம் பெற்று லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ பார்த்தால் உடன்பிறந்தே கொள்ளும் சகோதரம் என அமையவும் வாய்ப்பு.  மூன்றாம் அதிபதி நட்பாகி லாபத்தில் இருந்தால் சகோதரம் மூலம் லாபம் கிடைக்கும். நான்கில் இருந்தால் அவரும் நன்றாக இருப்பார் நமக்கும் அவரால் சுகம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
           நவகிரகத்தில் செவ்வாயை சகோதரகாரர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக