பொங்கல் – மகரசங்கராந்தி
பொங்கல் பண்டிகையை வடநாட்டில் மகர
சங்கராந்தி என்று கொண்டாடுகிறார்கள். மகரம் என்றால் மகர ராசி. சங்கரன் என்றால்
சூரியன். மகரசங்கராந்தி என்றால் சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்குள்
பிரவேசிக்கும் நாள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் நுழையும் போது,
மகர ராசிக்குள் நுழைவதை மட்டும் ஏன் பிரத்தியேகமாக கொண்டாடுகிறோம். என்றால் அங்கு
தான் சூட்சுமம் உள்ளது.
சூரியன் பூமத்தியரேகைக்கு வடக்கில் உள்ள கடகரேகை
முதல் தெற்கில் உள்ள மகரரேகைக்கும் இடையில் போய்வந்து கொண்டு இருக்கிறார்.
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் முதல்நாள் தான் கடகசங்கராந்தி என்பர்.
அதாவது தக்ஷிணாயன கால ஆரம்பம். ஆடி மாதம் முதல் நாள். சூரியன் மிதுன ராசியில்
இருந்து கடகராசியில் காலடி வைக்கும் நாள். தேவர்களுக்கு தக்ஷிணாயன காலம்
இரவுபொழுது என்றும் கூறுவர்.
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும்
காலத்திற்கு பெயர் தட்சிணாயனம். தெற்கில் மகரரேகையை தொட்டவுடன், அடுத்த வினாடியே
சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கின்றார். அதுவே மகரராசியில் சூரியன் நுழையும்
முதல் நாள். இதற்கு பெயர் உத்திராயன புண்ணிய கால ஆரம்பம்.
உத்திராயன கால ஆரம்பமே மகரசங்கராந்தி
என்பதால், தேவர்களுக்கு பகற்பொழுது ஆரம்பிக்கும் நாள் என்பதால், உத்திராயன
காலத்தில் ஞானமார்க்கம் சிறந்து விளங்கும் என்ற கருத்தும் உள்ளது.
மகாபாரதத்தில் பீஷ்மர் தான் மரண
முள்படுக்கையில் படுத்து கொண்டு இருக்கும்போது தனது இறப்பு உத்திராயன
புண்னியகாலத்தில் இருக்கவேண்டும் என்பதால், தனது உயிரை உத்திராயணம் ஆரம்பிக்கும்,
மகரசங்கராந்தி என்கின்ற பொங்கல் பண்டிகை கழிந்த பின்னரே உயிரை விட்டார் என்பது
அனைவருக்கும் தெரிந்ததே.
இப்படி பட்ட புண்னியகாலத்தின் முதல் நாள்,
சூரியனின் வருகையினால் தான் நடகின்றது என்பதால், புதிய பானையில், புதிய அரிசி
போட்டு புது பொங்கல் கொண்டாடுகின்றோம் நாம்.
பொங்கல் பொங்குவது போல் இந்த ஜோதிட விளக்கத்தை அறிந்து கொண்ட உங்கள் வாழ்வு
சர்க்கரை பொங்கலாக பொங்கி இனிக்கட்டும்........Wish you & your family a Very
HAPPY PONGAL – MAGARASANKARAANTHI………. 



சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர்
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக