மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 1 ஏப்ரல், 2015

சூலம் திசை நோக்கி பயணம்

சூலம் திசை நோக்கி பயணம் 
    யோகினியை போன்று சூலமும் நமது ஜோதிடத்தில் பார்க்கபடுகிறது. 
சூலம் இருக்கும் திசையை நோக்கி பயணிப்பது ஆபத்தை தரும் அல்லது பயணத்தின் குறிக்கோள் வீணாகும் என்பது ஜோதிடவிதி. இதற்கு, வாரசூலை என்றும் கூறுவர். உதாரணம், ஞாயிற்றுக்கிழமை மேற்கு திசை நோக்கி பயணித்தால் நமது பயணத்தில் இடையூறுகள் ஏற்படும், அல்லது விபத்துக்களை சந்திக்க நேரிடலாம். அல்லது நாம் எதற்காக பயணம் செய்ய நினைத்தோமோ அந்த காரியம் கைகூடாமல் போகும். எனவே தான் நமது முன்னோர்கள் சூலம் உள்ள திசை நோக்கி செல்வது ஆபத்து என்றும், சில நேரங்களில் மரணத்தை கூட சந்திக்க நேரலாம் என்றும் கூறியுள்ளனர்.


ஞாயிற்று கிழமை சூலம் இருக்கும் திசை மேற்கு

திங்கட்கிழமை சூலம் இருக்கும் திசை கிழக்கு

செவ்வாய் கிழமை சூலம் இருக்கும் திசை வடக்கு

புதன் கிழமை சூலம் இருக்கும் திசை மேற்கு

வியாழன் கிழமை சூலம் இருக்கும் திசை தெற்கு

வெள்ளிக்கிழமை சூலம் இருக்கும் திசை மேற்கு

சனிகிழமை சூலம் இருக்கும் திசை கிழக்குசூலம் இருக்கும் திசைகள் எப்படி நிர்ணயிக்க படுகின்றது என்றால் அந்தந்த கிழமைகளின் அதிபதி கிரகங்களின் பார்வைகள் சூலம் இருக்கும் திசையில் படுவதில்லை. இதை எளிதில் அறியவே, நமது முன்னோர்களும் ஜோதிட வல்லுனர்களும் ஒரு சூட்சுமத்தை நமது கோவில்களில் வைத்துள்ளனர். நாம் வடகிழக்கு மூலையில் உள்ள நவகிரகங்களின் சன்னதிக்கு சென்றால் புரிந்துவிடும். 

       நவகிரகங்களின் உருவங்களையும் அவைகள் பார்க்கும் திசைகளையும் நன்கு பாருங்கள். சூரியன் கிழக்கை நோக்கி பார்த்து கொண்டு இருப்பார். அப்படி என்றால் அவரின் பார்வை அவரது பின்பக்கத்திற்கு படுவதில்லை. பின்பக்கம் என்பது கிழக்கு திசையை பார்க்கும் சூரியனுக்கு மேற்கு ஆகும். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று சூலம் இருக்கும் திசை மேற்காக வருகிறது. இது போல நீங்கள் மற்ற கிரகங்களை பார்த்தால் உண்மை புரிந்துவிடும். நவகிரகங்களில் ராகு கேதுவிற்கு கிழமைகள் கொடுக்க படவில்லை என்பதால் அவைகள் எடுத்து கொள்ளப்படவில்லை.

===========================================================================

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002


 ======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக