மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

Almanac - பஞ்சாங்கம் எனபது என்ன?

 
 
       பஞ்சாங்கம் எனபது என்ன?      
 

 
       ஜோதிடசாஸ்திரத்தில் நூற்று கணக்கான கணக்குகள் உள்ளது. இவை அனைத்தும் நம் சூரிய மண்டலத்தை அதிகம் சார்ந்துள்ளது. ஆங்கிலத்தில் இதை சோலார் சிஸ்டம் (solar system) என்று கூறுகிறோம். இதில் முதல் ஐந்து கணக்குகளை பிரதானமாக இந்து ஜோதிடம் எடுத்து கொள்கின்றது. நமது அன்றாட வாழ்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் இந்த முக்கிய ஐந்து கணக்குகளை நம் மனதில் எடுத்து வருகிறோம். இந்த முக்கிய கணக்குகளுக்கு பூமி. சூரியன் & சந்திரன் இவை முன்றும் ஒன்றுக்கொன்று இருக்கும் தூரத்தையே அடிப்படையாக கணக்கிடு கிறோம். ஜோதிட சாஸ்திரத்தில் இந்த ஐந்து கணக்குகளும் ஐந்து அங்கமாக உள்ளதால் இதற்கு பஞ்சாங்கம் என்று அழைக்கிறோம். அவை யாதெனில் வாரம், திதி, நட்சத்ரம், யோகம் மற்றும் கரணம் ஆகும்.
வாரம்:
           வாரம் எனபது சம்ஸ்கிருத மொழியில் கிழமை என்று சொல்கிறோம். இவை முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனி என்று நமது ஜோதிட ரிஷிகளும் ஞானிகளும் வகுத்தனர். இதிலும் ஒரு முறையை பின்பற்றினார்கள். நமது சோலார் முறையில் சூரியனே பிரதானம் என்பதால் முதலில் சூரியனின் பெயரை ஞாயிறு என்றனர். பிறகு பூமிக்கு மிக அருகில் உள்ள சந்திரன் நம்மை அதிகமாக அட்கொள்வதால் அவருடை பெயரான திங்கள் கிழமை என்றனர். பிறகு பூமிக்கு வெளிவட்ட கிரகமான செவ்வாய்க்கும், பிறகு உள்வட்ட கிரகமான புதன் பெயரையும், அதன் பிறகு வெளி வட்ட கிரகமான குருவின் பெயரான வியாழன் என்றும், அதற்க்கு பிறகு உள்வட்ட கிரகமான சுக்ரனின் பெயரான வெள்ளி என்றும் கடைசியில் வெளி வட்ட கிரகமான சனி கிரக பெயரையும் நம் முன்னோர்கள் முறைப்படி வைத்தனர். ராகு கேதுவிற்கு பெயர் வைக்காததற்கு காரணம் அவைகள் உண்மையான கிரகம் இல்லை என்பதும் நாம் அறிந்ததே.
திதி:
       சந்திரன் ஒரு முறை பூமியை வலம் வந்தால் ஒரு மாதம் , மாதத்தில் இரண்டு பட்சம். அவை சுக்லபட்சம் என்ற வளர்பிறை & கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறையும் உள்ளது.  ஒரு பட்சத்தில் 15தினங்கள் உள்ளது. அவை முறையே சமஸ்கிருதத்தில் பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி பிறகு அமாவசை அல்லது பௌர்ணமி என்கின்றோம். விஞ்சான முறைப்படி இந்த திதிகள் எனபது  சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைப்பட்ட  தூரத்தின் கணக்கே.
இதனுடைய அளவு 12.00 டிகிரி ஆகும்..
நட்சத்ரம்:
         பூமியை சுற்றி வரும் சந்திரனின் திக்கு (திசை - direction) நம்மை சுற்றி உள்ள வெகு தூரத்தில் உள்ள நட்சத்ர திக்கை வைத்து இன்று சந்திரன் இந்த நட்சத்ர திக்கில் உள்ளது என அறிவதே. உதரணமாக இன்று சுவாதி நட்சத்ரம் என்றால் பூமியில் இருந்து பார்க்கும்  பொது சந்திரன் சுவாதி நட்சத்ரம் உள்ள திசையில் பிரவேசிக்கிறது என்று அர்த்தம்.இதனுடைய அளவு 13.20 டிகிரி ஆகும்.
யோகம்:
           வானவீதியில் சூரியன் சந்திரன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சேர்ந்து பயணிக்கும் தூரம். இவைகள் விஸ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 யோகங்கள் உள்ளது. இதனுடைய அளவு 13.20 டிகிரி ஆகும்.நாம் தினமும் பார்க்கும் மரண யோகம், அமிர்த யோகம் சித்த யோகம் எனபது வேறு, இவைகள் வேறு.
கரணம்:
            இவைகள் திதியில் பாதி தூரம். இரண்டு கரணம் சேர்ந்தது ஒரு திதி. ஒரு நாளைக்கு இரண்டு கரணங்கள் வரும். மொத்த கரணங்கள் 11 ஆகும். கரணங்கள் ஒரு மாதத்திற்கு 60 கரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகும். இதன் பெயர்கள் பவம், பாலவம், கௌலவம், தைதுலம்,கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஸ்பாதம், நாகலம் & கிம்ச்துக்னம். இதனுடைய அளவு 6.00 டிகிரி ஆகும்.
 

 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


ஆக்கம்:
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
 
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.


================================ =================================

 






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக