மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தன்னம்பிக்கைக்கு வழி என்ன? ( கேள்வி-பதில்-2 )

ஜோதிட கேள்வி பதில்
தன்னம்பிக்கைக்கு வழி என்ன?

அன்புள்ள அய்யாவுக்கு:
என் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள். என் பெயர் xxxxxxxxxxx. நான் மதுரையில் வசிக்கிறேன். எனது பிறந்த தேதி 18/02/1986. ராசி : ரிஷபம். நட்சத்திரம் : மிருகசீரிடம். அய்யா நான் அனைத்து விசியத்திலும் மிகவும் குழப்பத்தில் உள்ளேன். எனக்கு எதிலும் அதிக ஈடுபாடு இல்லை. என்னை மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு நான் நடந்து கொள்வது இல்லை வீட்டிலும் கூட. எனக்கு கூச்ச சுபாகம் அதிகம். நான் நல்ல சொல்வேன் தியானம் செய்யலாம் என்று நினைத்தால் கூட ஒரு நிமிடம் கூட முடியவில்லை. என் மனம் ஒரு நிலையில் இல்லை. எனக்கு தன்னம்பிக்கை என்பது துளி கூட இல்லை. என்னை நம்பி என் அப்பா,அம்மா,நண்பர்கள் ஒரு வேலையைகூட கொடுக்க மாட்டார்கள். எனது காதலி என்னை மிகவும் நம்புகிறாள் . ஆனால் என்னை பற்றி அவளுக்கு முழுமையாக தெரியாது. நான் முருகன் மற்றும் பெருமாளை முதல் கடவுள் கும்பிடுகிறேன் . அய்யா நான் வாழ்வில் முன்னேற நான் என்ன செய்ய வேண்டும்
அன்புடன், xxxxxxxx

குறிப்பு : உங்கள் இணையதளத்தில் என் பெயரை குறிப்பிடாமல் ராசி , நட்சத்திரம் மட்டும் குறிப்படாவும்




அன்புடையீர் வணக்கம்.

உங்கள் நட்சத்ரம் ஒரு பெரிய ராஜா க்ரஹா மான செவ்வாய் யின் நட்சத்ரம். மேலும் உங்கள் ரிஷப ராசி எல்லா இன்ப சுகங்களையும் தரும் சுக்ரனின் ராசி. ஆக, உங்கள் நட்சத்ரம் & ராசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திரன் ரிஷப ராசியில் தான் உச்ச பலத்தை அடைகிறான். உங்களுக்குள் மிக ஆதிகமான திறமைகள் உள்ளது. அவைகள் வெளிவர உங்களுக்கு தயக்கமும் குழப்பமும் உள்ளது. இதற்கு காரணம் உங்கள் ராசியை சனி ஏழாவது பார்வையாக பார்க்கிறார். எனவே உங்களுக்கு அடிக்கடி இந்த தயக்கமும் குழப்பமும் வரும். நீங்கள் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம். உங்கள் எதிர் காலம் அதிக பிரகாசமாக அமைய வாய்ப்பு உள்ளது. பெரிய சம்பாத்தியம் செய்வீர்கள். மற்றும் இன்றைய க்ரஹா நிலை படி வீட்டில் இருக்க பிடிக்காது,
எல்லோரையும் கடிந்து பேசுவீர்கள், அவர்கள் உங்களிடம் வருத்தம் அடைவார்கள். வெளியூர் சென்று விடலாமா என தோன்றும். நீங்கள் கடவுளை கூட வெறுப்பிர்கள். இந்த நிகழ்வுகள் உங்கள் ராசிப்படி வரக்கூடியதே. இதை தவிர்க்க உங்கள் குருவை அடிக்கடி சந்தித்து பேசி வரவும். பிள்ளையார் கோயில் பக்கம் போகும் பொது கோபுரத்தை சும்மா ஒரே ஒரு பார்வை மட்டும் பார்க்கவும். இந்த பிரச்சனை இந்த வருடத்திற்குள் மறைந்து விடும்.

அன்புடன்,

எம். பாலசுப்ரமணியன்,எம். .,
ஜோதிடர் & நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002 cell: 9443540743.
 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக