மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 14 ஆகஸ்ட், 2013

மரணம் எப்பொழுது ? when death?

மரணம் எப்பொழுது சம்பவிக்கின்றது?
 
 
 
                            ஜோதிடப்படி மரணம் எப்பொழுது சம்பவிக்கின்றது? இதற்கு விடை பெரும்பாலும் ஜோதிடர்கள் சொல்லுவது கிடையாது. காரணம் பிறப்பும் இறப்பும் இறைவன் கையில். உண்மைதான். இருந்தாலும் தோராயமாக சொல்லமுடியும்.
                       ஒரு மனிதன் எப்பொழுது நிம்மதியாக இருக்கின்றான் என பாருங்கள். உதரணமாக பாதகாதிபதி தசை நடகின்றது அப்பொழுது அவனுக்கு பாதகமான செயல்கள் நடக்கும். அவனை அதிகம் துன்பபட வைக்கும். அந்த நேரத்தில் மரணம் சம்பவித்தால் அவன் துன்பத்தில் இருந்து விடுதலை பெற்றுவிடுவான் என்பதால் இந்த காலங்களில் பெரும்பாலும் மரணம் சம்பவிக்காது, ஆனால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் வரும்.
                         இதே போல் பார்த்தால் மாரகாதிபதி தசை எப்படி இருக்கும்? இந்த தசையில் மாரகத்தை தருவானா என்றால், ஆராய்ச்சி செய்த ஜாதகங்களை பார்க்கும் பொழுது அப்பொழுதும் மரணம் அதிகம் சம்பவிப்பதில்லை. காரணம், இக்காலங்களிலும் மரணமே பரவாயில்லை, இறைவனே இந்த நரக வேதனையில் இருந்து காப்பாத்து அல்லது உயிரை எடுத்து கொள் என்று பல பேர் கூற கேட்டு இருப்பிர்கள். அப்படி பார்த்தால் மரணம் எபொழுது தான் வரும் என்ற கேள்வி தோன்றும்.
                       இதற்கு ஒரு சிறந்த விளக்கத்தை உங்களுக்கு முன் வைக்கின்றேன். ஒருவன் புதிய சட்டையை எப்பொழுது வாங்கி அணிவான்? சந்தோஷமான காலத்தில், அதாவது மகிழ்ச்சி மற்றும்  நிம்மதியில் இருக்கும் போது பழைய சட்டையை வீசிவிட்டு புதிய சட்டையை அணிகின்றான்.               
                        அதே போல் தான், ஒருவனுக்கு யோகாதிபதி தசை நடக்கும் போது, அனைத்து வசதிகளும் வந்து சேரும். இந்த காலங்களில் அவனுடைய ஜென்ம ஜாதகபடி ஆயுள் பரியந்தம் கணக்கு செய்து பார்த்து அந்த காலமும், இந்த காலமும் சேரும் போது கோச்சாரமும் கொஞ்சம் சறுக்கும் போது, மேலும் அவனது பிள்ளையின் கர்ம நேரமும், மனைவியின் மாங்கல்ய காலம் முடியும் நேரமும் அமைந்து இருந்து, இந்த யோகாதிபதி தசையில்  அவனவன் லக்னாதிபதி யாரோ அவரது சூட்சும அல்லது ஆதிசுட்சும காலங்களில் புதிய சட்டையை அணிவது போல் மரணத்தை தழுவி, மகிழ்ச்சியாக புதிய பிறவியை எடுக்க முற்படுவான்.

7 கருத்துகள்:

  1. ayya, naan kadaga lagnam. tharpodhu chandra dasai. after 2021, chevvai yogathipathi dasai. i will be above 52. will death happen during chevvai dasai !

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. மிகவும் எளிதாக அருமையான கருத்து

    பதிலளிநீக்கு
  4. மிகவும் எளிதாக அருமையான கருத்து

    பதிலளிநீக்கு