மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 2 ஜூலை, 2014

கோச்சார பலன்கள் எப்பொழுது வேலை செய்யும்..? When Kochchara Works?

கோச்சார பலன்கள் எப்பொழுது வேலை செய்யும்..?

            அய்யா குரு பெயர்ச்சி நேற்று நடந்து விட்டது, எனவே நேற்று முதல் என் பெண்ணுக்கு குரு பலம் வந்து விட்டது, ஆனால் நீங்கள் சொன்னபடி இன்று வரன் இன்னும் வரவில்லையே?
           அய்யா ஒன்பதில் குரு வந்தால் ஓஹோ ஓஹோ என இருப்பீர்கள் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள், ஆனால் இன்று ஒரு மாற்றமும் இல்லையே?
              இவர்கள் நினைக்கிறார்கள், ஒரு கிரகம் ஒரு ராசி விட்டு ஒரு ராசிக்கு மாறிய அடுத்த நிமிடமே பலன்கள் ஓடோடி வரும் என்று.

            இது சராசரி மக்களின் இயல்பு. அப்படி எல்லாம் இல்லை, இது கரண்ட் சுவிட்ச் போட்டால் லைட் எரிவது போல் இல்லை. ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசி விட்டு ஒரு ராசி சென்றவுடன் எவ்வளவு காலம் சென்று வேலை (நல்ல அல்லது தீய பலன்கள்) செய்யும் என்பதை இங்கு பார்க்கலாம்:

கிரகம்.............:  பலன் செய்யும் காலம்.
சூரியன்...........: 5 நாட்கள் கழித்து  
சந்திரன்...........: 4 மணி நேரம் கழித்து
செவ்வாய்.......: 10 நாட்கள் கழித்து
புதன்..................: 7 நாட்கள் கழித்து.
சுக்ரன்...............: 8 நாட்கள் கழித்து.
குரு....................: 2 மாதங்கள் கழித்து.
ராகு/கேது........: 3 மாதங்கள் கழித்து.
சனி………….....: 5 மாதங்கள் கழித்து.

          சரி மேற்படி காலம் கழித்து தான் ஒவ்வொருவருக்கும் அதாவது ஒவ்வொரு ராசியினருக்கும் வேலை செய்யுமா என்றால் அதுவும் இல்லை. காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில் உள்ள முப்பது டிகிரியில் ஏதோ ஒரு டிகிரியில் இருப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் ஏதோ ஒரு பாதத்தில் நமது சந்திரன் நின்ற நட்சத்திர பாதம் இருப்பதால், அவரவர்கள் நின்ற நட்சத்திர பாதத்திற்கும் சற்று வித்தியாசத்தை பார்க்கலாம். (இதை நீங்கள் துல்லியமாக அறிய வேண்டின் உங்கள் பிறந்த நேரம் பிறந்த ஊர், பிறந்த தேதி போன்ற குறிப்புகள் இருந்தால் நீங்கள் உடனடியாக உங்கள் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு நல்ல ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளவும்.) அப்படி இருக்க குருவோ சனியோ மாறியவுடன் எனக்கு பலன்கள் இன்னும் வரவில்லையே என்று மறுநாளே கேட்டால் ஜோதிடர்கள் என்ன செய்ய முடியும்?
byசித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக