மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 4 மே, 2017

பாக்கியவானே பலவான் - 9th Bhava of Each Bhava

பாக்கியவானே பலவான்.     லக்ன பாவம் ஜாதகர் யார் என்பதை கூறும் பாவம். இது சிறக்க வேண்டுமானால் இதனுடைய ஒன்பதாம் பாவமான பாக்கியம் சிறக்க வேண்டும். ஒருவருக்கு அனைத்து பாக்கியங்களும் தர்மெண்ணங்களும் வந்துவிட்டால் அவன் தான் அதாவது ஜாதகர் சிறந்து உள்ளார் எனலாம்.

        இரண்டாம் பாவம் குடும்பம் பணம் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாவது பாவமான ஜீவனம் நல்ல தொழில் இருக்க வேண்டும்.

           மூன்றாம் பாவம் சிறக்க வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாவது பாவமான எதிலும் வெற்றி லாபம் அதிர்ஷ்டம் ஆசைகள் இருக்க வேண்டும்.

    நான்காம் பாவம் வசதி வாய்ப்புகள் வளம்பெற வேண்டுமானால் அயனசயனம் அழகாக அமைய வேண்டும். அப்பொழுது தான் வீடுவாசலுடன் செளகரியமாக உண்மையில்உள்ளார் எனலாம்.

        ஐந்தாம்பி பாவமான பிள்ளைகள் ஸ்தானம் பலப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒன்பதாம் இடமான ஜாதகர் லக்ன பாவம் பலம் பெற வேண்டும். அதாவது நாம் நல்ல முறையில் வாழ்ந்து காட்டினால் நமது குழந்தைகள் ஒழுக்கமாக பெயர் சொல்லும் அளவிற்கு வாழ்வார்கள்.

     ஆறாம் பாவம் சிறப்புற வேண்டும் என்றால், இந்த இடம். சிறப்புற வேண்டும் என்றால் நோய் கடன் வம்பு தும்பு இல்லாமல் இருப்பது. இதனுடைய ஒன்பதாம் பாவமான ஜாதகரின் குடும்பம் கட்டு கோப்புடன் இருப்பின் வம்பு வழக்குகளில் சிக்க மாட்டார்கள். பணவசதி இருப்பின் கடன் வராது. குடும்ப ஒற்றுமை இருந்து விட்டால் மகிழ்ச்சி வந்து விடும். மகிழ்ச்சி வந்துவிட்டால் நோய்கள் ஓடிவிடும்.

        ஏழாம் பாவம் சிறப்பு பெற வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாம் பாவம் அதாவது மூன்றாவது பாவமான வீரியம் விருத்தி அடையவேண்டும். கணவன் மனைவி சண்டைக்கு 95% காரணம் இதில் உள்ள குறைபாடே.

          எட்டாம் பாவமான ஆயுள் சிறந்து தீர்காயுள் அடைய வேண்டுமானால்  அதனுடைய ஒன்பதாவது பாவமான ஜாதகரின் சுக ஸ்தானம் சுகபட வேண்டும். சுகம் அதாவது பூரணசுகம் கிடைத்து விட்டால் ஜாதகர் எப்போதும் அக்டிவ் மோட்டிலேயே இருப்பார.. எனவே மரணம் கிட்டவர கூட பயப்படும்.

           ஒன்பதாம் பாவமான பாக்கியம் தர்ம்ம் செய்தல் போன்றவை தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றால் இதனுடைய ஒன்பதாம் பாவமான புத்திர ஸ்தானம் பலம் பெற வேண்டும். சத்புத்திர்ர்கள் பிறந்துவிட்டால் பெற்றோர்களுக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்.

        உத்தியோக ஜீவனபாவம் சிறக்க வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாவது பாவமான ஜாதகரின் ஆறாம் பாவம் நன்கு அமைய வேண்டும். நோய் இல்லாது இருந்தால் தானே தொடர்ந்து உத்தியோகம் செய்ய இயலும். பணம் சம்பாதிக்க இயலும்.

          பதினோராம் பாவம் ஆசைகள் அனுபவித்து ஆனந்தபடுவது. இது பலப்பட வேண்டும் என்றால் இதற்கு ஒன்பதாம் பாவமான களத்திர பாவம் சிறக்க வேண்டும். களத்திரம் கட்டிலில் காமுகியாக இருந்து விட்டால் இந்த பதினோராம் பாவம் மூலம் வரும் பரத்தையர் பழக்கம் இல்லாமலேயே பத்தினியிடமே பதினோராம் பாவ ஆபிலாஷைகளை அனுபவித்து விடலாம்.

               பன்னிரண்டாம் பாவம் பலப்பட வேண்டும் என்றால் , அதாவது எதிரும் பரமசுகம் பெற அதற்கு ஒன்பதாவது பாவமான எட்டாம் பாவம் பலப்படவேண்டும். அற்பாயுள் அமைந்து அனைத்தும் இருந்து என்ன பலன். ஆக, இன்பத்தை நிறுத்தி நிதானமாக அனுபவுத்தால் தானே பேரின்பம். இதற்கு தீர்காயுள் தேவை.

                ஆக, எந்த ஒரு பாவம் பலப்பட வேண்டும் என்றால் அதனுடைய பாக்கிய பாவம் பலப்பட வேண்டும்.  இப்படி ஆராயும் போது, ஜாதக கட்டத்தில் நாம் பார்க்கும் பன்னிரண்டு பாவங்களும் ஒன்றையொன்று தொடர்பு கொண்டு பின்னி பிணைந்து உள்ளது. ஆக எந்த பாவம் பலம் குறைகிறதோ, அதற்கு ஒன்பதாம் பாவம் அடிபடுகிறது என அறிகிறோம்.

*by..Vellore Bala Jothidar 9443540743சித்தாந்த ரத்னம்பஞ்சங்க கணிதர்ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக