மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 2 அக்டோபர், 2017

ஜாதக வெற்றி Success time

ஜாதக வெற்றிஒரு ஜாதகனின் வெற்றிஅவனது மூன்றாம் பாவத்தின் மூலம் அறியலாம் என்பது யாவருக்கும் தெரியும். இதே போல ஒவ்வொரு பாவத்தின் வெற்றி அதனுடைய மூன்றாம் பாவத்தால் அறியப்படும். உதாரணமாக இரண்டாம் வீட்டின் (தன ஸ்தானம்) வெற்றி காண நான்காம் பாவத்தை பார்த்தால் புரியும். நான்காம் பாவப்படி லவ்கீக சுகம் கூடினால் கையில் தனம் உண்டு என எளிதாக அறியலாம். அதே போல ஒவ்வொரு பாவத்தின் வெற்றியை காணலாம்.

ஒரு பாவத்தின் தோல்வியை காண வேண்டுமானால் அந்தந்த பாவத்தின் பனிரெண்டாம் பாவத்தால் அறியலாம். மேலே கூறிய உதாரணப்படி பார்த்தால் இரண்டாம் பாவத்தின் தோல்வி லக்ன பாவத்தையே சார்கிறது. (உழைப்பும், உறுதியும் இல்லா விட்டால் லக்னம் பாதிக்கபட்டால் )

உப ஜெய ஸ்தானங்களான 3-6-10-11 இடங்கள் பலமுள்ளவன் எளிதில் வெற்றியை அடைகிறான். எப்படி என்றால் மூன்றாமிடம் வெற்றியை தந்தாலும், அதற்கு உறுதுணையாக உள்ள ஆறாமிடமூலம் நோய், நோடி, கடன் வம்பு வழக்கு இல்லாதவனாக இருப்பதும்,

பத்தாமிடம் மூலம் தொடர்ந்து வருமானம் வந்து கொண்டு இருப்பதும்,
பதினோறாமிடம் மூலம் சம்பாதிக்கும் சம்பாதனை தனது உழைப்பை விட அதிக ஊதியம் பெறும்போது லாபத்தை பெற்றிருப்பதும், 
ஒருவனின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது.

வெற்றியை முத்தமிடும் நேரம்:

மூன்றாமாதி தசா புக்தி அந்தர காலங்களில்.

கோட்சார செவ்வாய் சுபர்களின் மேல் வலம் வருவதும் மற்றும் மூன்றாமாதி சுபராகி கோட்சாரத்தில் செவ்வாய் மீது வருவதும் வெற்றி தரும் நேரங்களாகும்.

லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி சம்பந்தம் பெறுபவர்கள் வெளியூரில் வெற்றி.

ஒரு காரியத்தில் வெற்றி அடைய, அந்த காரிய மூகூர்த்த லக்னம் மேஷ மானாலும் அல்லது அம்சத்தில் மேஷ அம்சா லக்னமானாலும் வெற்றியை பெற்று விடலாம்.

கோட்சாரத்தில் செவ்வாய் & சனி சேர்க்கை/பரஸ்பர பார்வை இல்லாத நேரம் பார்த்து செய்யப்படும் காரியம் வெற்றியை தந்துவிடும்.

லக்னம் சரத்திலும் சந்திரனை ஸ்திரத்திலும் வைத்து செய்யப்படும் வேலை வெற்றியுடன் முடியும்.

துரித வெற்றியை பெற மூன்றாமாதி ஹோரை கைகொடுக்கும்.

பலமுறை முயன்று தோல்வியுற்ற காரியத்தை, எமகண்டத்தில் மறுபடியும் முயன்றால் வெற்றி உங்கள் பக்கம். திருமணமான தம்பதிகள் ஜாதகத்தில் ஐந்தாமிடம் பலம் இருந்தும் குழந்தை தாமதிக்கும் தம்பதிகள் இந்த உபாயத்தை அறிந்து குழந்தைச் செல்வத்தை பெறலாம்.

பெரிய மறைவு ஸ்தானங்களான 6-8 இல் நான்கு கிரகங்களுக்கு மேல் இருப்பவர்களை வெற்றி தன் பக்கத்தில் வைத்து கொள்வதில்லை. இவர்களும் வெற்றி பெறவேண்டுமானால் அவர்கள் அவர்களின் குருவை ஆலோசித்து செய்தால் வெற்றி.

கோச்சாரத்தில் தினச்சந்திரன் பாவகத்திரியில் கட்டுண்டால் வெற்றியும் கழன்றுவிடும்.

தன ஜாதகத்தில் வெற்றி வாய்ப்பு குறைவு என்று நீங்களே முடிவு செய்துவிட்டால், உங்கள் ரத்த சம்பந்தத்தில் உள்ள உங்கள் மகன், மகள், தந்தை, தாய், சகோதரர்கள் ஜாதகப்படி வெற்றி ஜோராக இருப்பின், அவர்களை நீங்கள் எதிலும் இணைத்துக்கொண்டு செயல் பட்டால் வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்.

வெற்றி நமதே.
~ Vellore Bala Jothidar.  M. BALASUBRAMANIAN - 9443540743
(வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் & வேலூர் ஜோதிடம் வாட்ஸ்அப் கிளப் மூலம் 1-10-2017  சென்னை, மடிபக்கம், கார்திகேயாபுரம், கூட்டுறவு கல்யாண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் நிகழ்த்திய ஜாதக வெற்றி உரையின் சுருக்கம்.)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக